நாளை முதை ஹென்றி பெட்ரிஸ் மைதானம் இசிபதன கல்லூரிக்கு.கொழும்பு 5ல் அமைந்துள்ள ஹென்றி பெட்ரிஸ் மைதானம் நாளை முதல் இசிபதன கல்லூரி மாணவ மாணவியர்களின் விளையாட்டு நடவடிக்கைகளுக்காக வழங்க,  மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பயிஸர் முஸ்தபா, கொழும்பு மா நகரசபை உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இன்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் இடம் பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இக்கலந்துரையாடலில் போது அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி, நகரசபையின் பொருளாளர் கே,டீ. சித்ரபால, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு துறை பணிப்பாளர் சலிக்க எஸ் ரணவீர ஆகியோர்களுடன்  அமைச்சின் உத்தியோகத்தர்கள், நகரசபை உத்தியோகத்தர்கள், இசிபதன கல்லூரி அதிபர் மற்றும் பழைய மாணவ சங்கத்தினரும் கலந்து கொண்டனர். 

இசிபதன கல்லூரி அதிபர் மற்றும் பழைய மாணவர்கள் பிரதமரிடம் முன் வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில்,  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் கீழ் ஹென்றி பெட்ரிஸ் மைதானம் இசிபதன கல்லூரிக்கு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். இதன் போது கருத்து தெரிவித்த பாடசாலையின் அதிபர் கருத்து தெரிவிக்கையில் இந்நிகழ்வானது 62 வருட காலத்திலும் கல்லூரிக்கு மைதானம் ஒன்று கிடைப்பது வரலாற்று பதிவு என சுட்டிக்காட்டினார். 

எனவே இதுவரைகாலமும் கொழும்பு மா நகரசபையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த ஹென்றி பெட்ரிஸ் மைதானத்தின் நிர்வாகம், செயட்படுத்துதல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் அனைத்தும் நகரசபை மற்றும் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படியில் இரு சாராருக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

4700 மாணவ மாணவிகள் கல்வி கட்கின்ற இக்கல்லூரியின் விளையாட்டு நடவடிக்கைகள் வாடகை மைதானத்தில்  முன்னெடுக்கப்பட்டது. பல ஆண்டுகளாக இலங்கை றக்பி அணிக்கு 50% வீரர்கள் தெரிவானதி இக்கல்லூரி மாணவர்களே. இவ்வருடம் நடத்தப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான றக்பி போட்டியில் ஜனாதிபதி கிண்ணத்தை சுவீகரித்தது இசிபதன கல்லூரி அதேபோன்று மைலோ கிண்ணத்தையும் வென்றுள்ளது. 19 வயதின் கீழ் இலங்கை கிரிக்கெட் அணியில் கல்லூரி மாணவர்கள் பங்குபெறுவதாக பாடசாலையின் அதிபர் மேலும் தெளிவுபடுத்தினார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்