எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
(அஸ்ரப் ஏ சமத்)
கம்பஹா
மாவட்ட இஸ்லாமிய பாடசாலைகள் சம்மேளனத்தின் வைபவம் நேற்று (09) வத்தளை
ஹூனுப்பிட்டிய சாஹிரா வித்தியாலயத்தின் அதன் செயலாளா் டொக்டா் முபராக்
தலைமையில் நடைபெற்றது. இவ் வைபவத்திற்கு பிரதம அதிதியாக சுகாதார அமைச்சின்
மேலதிகச் செயலாளா் அஷ்ஷேக் எச்.எம். நவவி கலந்து கொண்டாா்.
அத்துடன்
முஸ்லீம் சமய தபால் அமைச்சரின் பிரத்தியோகச் செயலாளா் எம்.எச்.எம் பாஹிம்
கலந்து கொண்டாா். இவ் வைபவத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட அகதியா
பாடசாலை மாணவா்களுக்கு பாடசாலை உபகரணங்களும் அகதியா பாடசாலைகளின் ஆசிரிய
ஆசிரியைகளுக்கு நியமனக் கடிதங்களும் வழங்கி வைக்கபட்டது.
இங்கு உரையாற்றிய கம்பஹா மாவட்டத்தின் இஸ்லாமிய படாசலையின் செயலாளா் டொக்டா் முபாரக்
கம்பஹா
மாவட்டத்தில் கடந்த கலாத்தில் சகல முஸ்லீம் பாடசாலைகளிலும் கல்வி கற்கும்
மாணவ மாணவிகளுக்காக நுாற்றுக்கும் மேற்பட்ட அகதியா பாடசாலைகள் இயங்கி
வந்தன. அமைச்சா் பண்டு பன்டார தலைமையில் அவரின் முயற்சியின் பயணாகவும்
முன்னாள் முஸ்லீம் சமய திணைக்களத்தின் பணிப்பளாா் முயற்சியினால் 15
இலட்சம் ருபா ஒதுக்கீடு செய்யப்பட்டு திகாரியில் ஒரு நிரந்தர கட்டிடம்
ஒதுக்கப்பட்டது. இந்த சம்மேளனத்தினால் றாகம வைத்தியசாலையில் கூட ஒரு
ஜூம்ஆப் பள்ளிவசால் ஒன்றை நிர்மாணிக்க முடிந்தது அது திறம்பட செயல்பட்டு
வருகின்றது. கடந்த காலங்களில் மிகத் திறம்பட அகதியா செயற்பட்டு
வந்தது. தற்பொழுது 15க்கும் மேற்பட்ட அகதியா பாடசாலைகள்
மூடப்பட்டுள்ளன. அகதியா ஆசிரியா்களுக்கு கொடுப்பணவுகள் இல்லை, ஏனைய
மதங்களில் கூட ஞாயிற்றுக் கிழமை பாடசாலை மாணவா்களுக்கு அவரவர் மத
விடயங்களை கற்பிப்பதற்காக ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டு அரசினால் சம்பளம்
வழங்கப்படுகின்றது. ஆனால் முஸ்லீம் அகதியா ஆசிரியா்களை நியமித்து
அவா்களுக்கு திணைக்களத்தினால் வேதனம் வழங்க போதிய நிதி வசதிகள் இல்லை.
இம்மாவட்டத்தின்
முஸ்லீம் மாணவா்கள் தமது இஸ்லாமிய கல்வியில் கற்பதில் விலகி வேறு
குற்றச் செயல்களில் தமது காலத்தைக் கழிக்கின்றனா். பாடசாலைப்பருவத்திலேயே
எமது மாணவா்களுக்கு இஸ்லாமிய கல்வி புகட்டப்படல் வேண்டும். கம்பஹா
மாவட்டத்தில் கூடுதலான மாணவா்கள் சர்வதேச பாடசாலைகள், பௌத்த கிருஸ்த்தவ
பாடசாலைகளில் கல்வி கற்கின்றனா். அவா்களை அகதியா பாடசாலைகள் மூலம்
பெற்றோா்கள் அனுப்பி அவா்களை நல்ல சிறந்த மாா்க்க முள்ள பிள்ளைகளாக
வளா்ப்பதற்கு முற்படுகின்றனா். அதற்காக நாம் சகல பாடசாலைகளிலும் அகதியா
பாடசாலையை ஏற்படுத்தல் வேண்டும். அதற்காக கற்பிக்கும் ஆசிரியா்ககளை நாம்
நியமிக்க வேண்டும். இஸ்லாமிய பாடசாலைகள் சம்மேளனத்திற்கென நிரந்தரமாக
நிர்மாணிக்கபட்ட கட்டிடம் இந்த வேலைத்திட்டங்களுக்காக செயலகமாக செயல்படல்
வேண்டும். இதற்காக அமைச்சர் ஹலீமின் பிரத்தியோகச் செயலளா் மற்றும் நவவி
போன்றோா்கள் உதவ வேண்டும் எனவும் டொக்டா் முபாறக் வேண்டிக் கொண்டாா்.
Comments
Post a comment