இனவாத அரசியல் கலாசாரத்தால் இலங்கையின் எதிர்காலம் ஆபத்து – அரசுக்கு கரு ஜயசூரிய எச்சரிக்கை புதிய அரசமைப்பை உருவாக்கி தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். இனவாதத்தைத் தூண்டி அரசியலை முன்னெடுக்கும் தற்போதைய அரசியல் பயணம் தொடருமாயின் எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சினைகள் நாட்டினுள் உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய. நாட்டின் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:- “நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்ற இனவாத அரசியல் கலாசாரம் இலங்கையை நீண்ட காலத்துக்கு நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றது. இந்த விடயத்தில் அனைவரும் குறுகிய நோக்கத்தில் பார்க்கின்றனர். ஆனால், தூரநோக்கு சிந்தனையுடன் இந்த நாட்டின் இன – மத உரிமைகளைப் பலப்படுத்தும், பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்தப் புதிய அரசமைப்பில் ஜனநாயகம், மனித உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து அதன் மூலம் பறிக்கப்பட்ட உரிமைகள் முழுமையாக
-எம்.வை.அமீர் -
கடந்த 26 வருடங்களாக கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரியில் மிகச்சிறந்த கல்விச்சேவையாற்றிய
முன்னாள் அதிபர் ஏ.எச்.ஏ.பஷீரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு எதிர்வரும் 2016-10-30 ஆம் திகதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு நிகழ்வு தொடர்பாக பத்திரிகையாளர்களை தெளிவூட்டும்
பத்திரிகையாளர் சந்திப்பு 2016-10-09 ஆம் திகதி கல்லுரியின் அதிபர் திருமதி எஸ்.ஏ.லியாக்கத்
அலி தலைமையில் கல்லுரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின்போது விழாக்குழுவின் பிரதித் தலைவரும் கல்முனை சாஹிரா தேசிய
பாடசாலையின் முன்னாள் அதிபரும்
சட்டத்தரணியுமான எம்.சி.ஆதம்பாவா கலந்துகொண்டு விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள
நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளித்தார்.
அத்துடன் 2016-10-30 ஆம் திகதி பாடசாலை வளாகம் முழுவிழாக்கோலம்
பூண்டிருக்குமென்றும், நிகழ்வுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீர் வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான றவூப் ஹக்கீம்
பிரதம அதிதியாக கலந்து கொள்வதுடன் கிழக்கு மாகான முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பிரதி
அமைச்சர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் மாகாணக் கல்விப்பணிப்பாளர் உள்ளிட்டவர்களும் ஏனைய துறைசார்ந்த உயர் அதிகாரிகளும்
மதப்பெரியார்கள், பழைய மாணவிகள் மக்கள் என 1500 க்கு மேற்பட்டவர்கள்
வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. அத்துடன் நிகழ்வில் முன்னாள் அதிபர் ஏ.எச்.ஏ.பஷீரின் சேவைநலன்
தொடர்பான மலர் ஒன்றும் வெளியிடப்படவுள்ளதாகவும் கூறப்பட்டது.
பத்திரிகையாளர் சந்திப்பின்போது பாடசாலை அபிவிருத்திக்குழுவின் செயலாளர்
எம்.ஐ.பாஸி, விழாக்குழுவின் பொருளாளர் ஏ.பாறுக், பாடசாலை அபிவிருத்திக்குழுவின்
உறுப்பினர்களான றிப்கா அன்சார், ஏ.எச்.நதீரா, ஐ.எல்.ஏ.அஸீஸ், விழாக்குழுவின்
ஊடகப்பொறுப்பாளர் நளீம் லத்தீப் ஆகியோரும் பிரசன்னமாகி விழா தொடர்பான கருத்துக்களை
தெரிவித்தனர்.
Comments
Post a comment