நல்லாட்சி பொல்லாட்சியாக மாறிக் கொண்டிருக்கிறதா..?


-
அஷ்ஷெய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா-
-எம்.வை.அமீர்-
கழுதை தேய்ந்து காட்டெறும்பான கதையாய் நல்லாட்சி நாளுக்கு நாள் நலிவடைந்து பொல்லாட்சியாய் மாறிக் கொண்டிருக்கிறது என்றும்  அரசு இரட்டைத் தோணியில் கால் வைத்துக் கொண்டு நாட்டு மக்களையும் குழப்பி தாங்களும் குழம்பி அவஸ்தைப்படுவது வெளிப்படை உண்மையாயிற்று. என்றும் இன நல்லுறவிற்கான தேசிய வேலைத் திட்டத்தின் தலைவரும் சமூக சிந்தனையாளருமான அஷ்ஷெய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா ஊடகங்களுக்கு வழங்கியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சட்டம், ஒழுங்கு, தேசத்தின் ஸ்திரம் மறுபடியும் கேள்விக்கு உட்பட்டு இருப்பது குறித்து மக்கள் அச்சத்துடன் இருப்பதை நல்லாட்சி இன்னும் புரிந்து கொள்ளவில்லை. யாழ்ப்பாணத்தில் இரண்டு மாணவர்கள் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது மிகவும் கவலைக்குரியது. இந்தச் செயற்பாட்டுக்கு அரசு முழுக் கண்டனத்தையும் தெரிவித்து துரிதமாக குற்றவாளிகளை கைது செய்திருப்பது வரவேற்கத்தக்கும் அதே வேளை, தர்ஹா நகர் வன்முறையில் அநியாயமாய் இரண்டு அப்பாவி முஸ்லிம்கள் ஸஹீதாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய சூத்திரதாரிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரச உயர் மட்டம் இது குறித்து மௌனம் சாதிப்பது எமது முஸ்லிம் மக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. பேருவளை-அலுத்கம கலவரத்தை பேசு பொருளாக்கி சிறுபான்மையினரின் வாக்குகளை பெற்று ஆட்சி பீடம் ஏறியவர்கள், ஏற்றி விட்ட ஏணிகளை உதறித் தள்ளுவது அவ்வளவு ஆராக்கியமானது அல்ல என இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
மைத்ரி செய்தால் எல்லாம் சரி, அதே மஹிந்த செய்தால் எல்லாம் பிழை எனும் தோரணையில் அரசியல் பிழைப்பு வாதம் பேசி எமது சமூகத்தை கூறு போடும் முஸ்லிம் பெயர் தாங்கிகளும் இவ்விடயம் குறித்து சிந்திக்க வேண்டும்.
சில நேரங்களில் மைத்ரியும் மஹிந்தவும் இணைந்தால் முஸ்லிம் அரசியல் தரகர்களின் ஆதரவு அல்லது சுயநலவாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதையும் எல்லோரும் உற்று நோக்க வேண்டும். தனிப்பட்ட குரோதங்களை, காழ்ப்புணர்வுகளை மறந்து நாம் செயற்பட வேண்டிய காலம் இதுவாகும். சமூகப் பிரமுகர்கள், புத்தி ஜீவிகள், நன் மக்கள், இளைஞர் யுவதிகள் இது குறித்து ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் என தாழ்மையாக கேட்டுக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்