இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியில் தென்.கி. பல்கலைக்கழகத்துக்கு ஜும்மா பள்ளிவாயல்

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியில் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்ட  ஜும்மா பள்ளிவாயல் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையுடன் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் உத்தியோகபூர்மாக கையளிக்கப்பட்டது. 
இராஜாங்க அமைச்சரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் அனுசரணையில் மேற்படி பள்ளிவாயல் நிர்மாணிக்ப்பட்டிருந்தது. 
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு இன்று விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பள்ளிவாயலை பல்கலைகழக நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். 
இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் எம்.எம்.எம்.நாஜி, ஹிரா பௌண்டேஷன் செயலாளர் மும்தாஸ் மதனி, மௌலவி அலியார் பலாஹி, மௌலவி அமீன் பலாஹி, முன்னாள் தவிசாளர் அஸ்பர் ஜே.பி. உட்பட பலரும் கலந்து கொண்டதோடு. ஜும்மா  உரையினை தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் அஷ்ஷைக் அலியார் றியாதி நிகழ்த்தியிருந்தார். 
இப் பல்கலைக்கழகத்தின் நீண்ட நாள் தேவையாக இருந்த இப் பள்ளிவாயலை நிர்மாணித்து தந்தமைக்கு இப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் இமாணவர்கள் அனைவரும் ஹிரா பெளன்டேசனுக்கு நன்றி தெரிவித்தனர்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்