எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
இஸ்லாமிய
புது வருடத்தில் புது சிந்தனைடன் முன்னோக்கி, நாட்டை அபிவிருத்திப்
பாதைக்கு இட்டுச் செல்ல முஸ்லிம்கள் அனைவரும் உறுதி பூணுவோம் என
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.
ஹிஸ்புல்லாஹ் தனது முஹர்ரம் புது வருட வாழ்த்துச் செய்தியில்
குறிப்பிட்டுள்ளார்.
நாளை
திங்கட்கிழமை ஹிஜ்ரி 1438 இஸ்லாமிய புது வருட பிறப்பை முன்னிட்டு
விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அதில் மேலும் கூறியுள்ளதாவது:
இஸ்லாமிய
புது வருடம் முஹர்ரம் மாதத்துடன் ஆரம்பமாகின்றது. முஸ்லிம்கள் என்ற
ரீதியில் இதனை நாங்கள் சிறப்பான முறையில் வரவேற்க வேண்டும்.
அது
மாத்திரமல்லாது, கடந்த வருடத்தில் இடம்பெற்ற தவறுகளுக்கு அல்லாஹ்விடம் பாவ
மன்னிப்பு தேடுவதுடன் எதிர்வரும் வருடம் சிறப்பான முறையில் அமையவும்
பிரார்த்திக்க வேண்டும்.
முஸ்லிம்கள்
எப்போதும் நாட்டின் இறைமையை பாதுகாப்பதில் முக்கிய பங்களிப்பு
செலுத்தியுள்ளனர். அந்தவகையில் நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்காகவும்
அபிவிருத்திக்காவும் இப்புனித மாததில் பிரார்த்தனை செய்வோம்.
விஷமிகளின்
சூழ்ச்சிகளை விட்டும் நம் நாட்டு மக்களுக்கு அல்லாஹ்வின் பாதுகாப்பை
தேடுவதற்கும், உலக முஸ்லிம் நாடுகளின் சகோதரத்துவ மனப்பான்மையை வளர்த்து
ஒற்றுமையுடன் போராட வழிவகுக்க வழிசெய்ய வேண்டும் எனப் பிரார்த்தித்தும்,
இப்புனித மாதத்தின் நாட்களில் நோன்பு நோற்று பிரார்த்திப்போம்
எனக்குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a comment