Skip to main content

ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு

  ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு   புதிய பதவி நிலைகளை   நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க  உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர்  உதவித் தலைவராக  ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ்  கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க   புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க  பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க  வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே  தவிசாளராக  அங்கீகரிக்கப்பட்டுள்ளார்,  ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே  ஐ.தே.க  தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.

ஜனாதிபதி மைத்திரிபாலவின் கருத்தை கண்டிக்கும் தார்மீக உரிமை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இல்லை

குற்றப்புலனாய்வு நிதிக்குற்றப்பலனாய்வப்பிரிவு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பற்றிய ஜனாதிபதி மைத்திரிபாலவின் கருத்தை கண்டிக்கும் தார்மீக உரிமை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இல்லை என முஸ்லிம் உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக அப்துல் மஜீத் தெரிவித்தார்.

கட்சித்தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் மேலும் தெரிவித்தாவது

இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் அரசாங்கத்தின் பொதுமக்கள் மீதான அத்துமீறல்களுக்கெதிராக குரல் கொடுக்காமல் ஒரு சமூகம் பற்றி மட்டுமே பேசும் எதிர்க்கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே இருந்து கொண்டிருப்பது மிகப்பெரிய அவமானமாகும். எதிர் கட்சி என்பது அரசின் நல்ல விடயங்களுக்கு ஆதரவு கொடுப்பதுடன் தீய விடயங்களை கண்டிக்க வேண்டும். ஆனால் தமிழ் கூட்டமைப்பு அரசின் தீய விடயங்களுக்கு துணை போவதாகவும் தமது சமூகம் சார்ந்த விடயங்களுக்கான தீமைகளில் மட்டுமே எதிர் தரப்பாக செயற்படுகிறது.

குற்றப்புலனாய்வுப்பிரிவு போன்றவை அரசியல் பின்னணியில் இயங்குகின்றன என்ற ஜனாதிபதியின் கூற்று வெறும் எழுந்தமானமான கூற்றாக தெரியவில்லை. நாட்டின் தலைவர் என்ற முறையில் அவற்றை சரியாக கணித்தே அவர் சொல்கிறார். உண்மையில் ஊழல் இலஞ்சம் நிதி மோசடி குற்றம் என்பதெல்லாம் கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்கு மட்டுமே சொந்தமானதாக தமிழ் கூட்டமைப்பும் இன்னும் பலரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய தமிழ் கூட்டமைப்பில் இணைந்திருக்கும் டெலோ ஈ பி ஆர் எல் எப் போன்ற அமைப்புக்கள் செய்யாத கொடுமைகளையா மஹிந்த அரசு செய்தது என கேட்கின்றோம். ஏன் அவர்களுக்கெதிராக மேற்படி பிரிவுகள் இன்னமும் செயற்படவில்லை?  அதே போல் 1983ம் ஆண்டு தமிழர்களை பச்சையாக கொன்று குவித்தவர்களே இன்றைய ஆட்சியாளர்களாக இருக்கின்றனர். ஏன் இவர்களுக்கெதிராக இந்தப்பிரிவுகள் செயற்படவில்லை? அதே போல் வாழைச்சேனையில் இரண்டு முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்ததை பார்ததுக்கொண்டிருந்தது இந்த அரசாங்கம். 90ம் ஆண்டு கல்முனையிலும் காத்தான்குடியிலும் முஸ்லிம் வாலிபர்களை புலிகள் அள்ளிச்சென்று கொல்ல அனுமதியளித்தது இன்றைய ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம். அவைகளெல்லாம் குற்றங்கள் இல்லையா?

புலிகளுக்கெதிரான யுத்தத்தில் எந்தவொரு அரசாங்கமும் நாட்டுக்கு விசுவாசமாக செயற்படாத போது மஹிந்த அரசம் கோத்தாபையுமே இலஞ்சம்  மோசடி என்பவற்றுக்கு இடம் கொடுக்காமல் சரியான முறையில் யுத்தத்தை வழி நடத்தியதன் காரணமாகவே யுத்தத்தை சரியாக வழி நடாத்தி வெல்ல முடிந்தது. அவர்கள் நினைத்திருந்தால் கோடிக்கணக்காக பணத்தை வெளிநாடுகளிடம் பெற்;றுக்கொண்டு பிரபாகரனை தப்பிக்க விட்டு நாட்டுக்கு துரோகமிழைத்திருக்கலாம்.

இவ்வாறு நாட்டுக்கு பாரிய சேவை செய்த கோத்தாபையையும் அதற்கு அரசியல் தலைமை தாங்கிய மஹிந்த ராஜபக்சவையும்  பாரிய தியாகத்துடன் சேவை செய்த இராணுவத்தையும் மட்டுமே இன்று குற்றவாளிகளாக பார்ப்பது முறையா என்ற அடிப்படையிலேயே ஜனாதிபதி தனது கருத்தை சொல்லியுள்ளார். அவரின் இக்கருத்து பாராட்டுக்குரிய ஒன்றே தவிர  அதனை கடந்த காலங்களில் இந்த நாட்டில் முஸ்லிம்கள் மீதான அடந்தேறுகளுக்கு துணைபோன கட்சிகளைக்கொண்ட தமிழ் கூட்டமைப்புக்கு கண்டிக்கும் தார்மீக உரிமை இல்லை என்பதை உலமா கட்சி சொல்லிக்கொள்கிறது.

Comments

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.  தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313

சாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு !

சாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது . 1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும். கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் ச