கொலன்னாவ பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 77 குடும்பங்களுக்கு சுமார் 10000 ரூபாகலாச்சாரம் மற்றும் அபிவிருத்திக்கான முஸ்லிம் நிறுவனம் (MFCD) கொலன்னாவ பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 77 குடும்பங்களுக்கு  சுமார் 10000 ரூபா பெறுமதியான மின் உபகரணங்கள் வழங்கும் வைபவம் கடந்த புதன்கிழமை (19) அமைப்பின் தலைவர் ஹனான் ஹுசைன் தலைமையில் கொழும்பு அல்ஹிதாயா பாடசாலை கேட்ப்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் அமைப்பின் தலைவர்உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டதுடன் அமைப்பின் குறிக்கோள் சம்மந்தமாகவும் ,எதிர்கால நடவடிக்கை சம்மந்தமாகவும் அமைப்பின் தலைவர்  தெரிவித்தார்.

 கடந்த காலங்களில் நாட்டில் ஏற்ப்பட்ட  சுனாமி,மண்சரிவு,வெள்ளப் பெருக்கு போன்ற இயற்க்கை அனர்த்தத்தின் விளைவாக பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை இனங்கண்டு தமது  நிறுவன அதிகாரிகள் களத்திற்கு சென்று உண்மையாக அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் தகவல்களை சேகரித்து அவர்களின் வாழ்வாரத்தை அபிவிருத்தி செய்து உள்ளதாகவும் தெரிவித்த அமைப்பின் தலைவர்  முதல் கட்டமாக கடந்த மே மாதம் வெல்லம்பிட்டி ,கொலோன்னாவ பிரதேசத்தில் ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது தங்களது சுய தொழில்களை முற்றாக இழந்து வருமானம் எதுவும் இல்லாமல் நிர்க்கெதியாகி இருக்கும் ஆறு குடும்பங்களை இனம் கண்டு கடந்தமாதம் அவர்கள் சுய தொழில் செய்யக்கூடிய அனைத்து உதவிகளையும் செய்து கௌடுதுள்ளதாகவும் அதன் இரண்டாம் கட்ட வேலைகள் தற்போது ஆரம்பிகப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வெள்ள அனர்த்தம் ஏற்ப்பட்டு சுமார் ஆறு மாதகாலம் கடந்தும் பதிக்கப்பட்ட மக்களுக்கு குறித்த நிறுவனம் கட்டம் கட்டமாக பாரிய  உதவிகளை செய்து வருவதுடன் குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களில்  ஊடகவியாலாளர்கள், அரச உத்தியோககத்தர்கள், பாடசாலை மாணவர்கள் , சுய தொழில்கள் புரிந்தவர்கள் என்று வகைப்படுத்தி  அவர் அவர்களின் தேவைகள் எதுவன  அறிந்து உதவி செய்துவருவது இந்த நிறுவனத்தின் சிறப்பன்சமாகும்.

குறித்த உதவிகளை பதிக்கப்பட்டமக்களுக்கு வளங்க நிறுவனத்திற்கு உதவிக்கரம் நீட்டிய உள்நாட்டு,வெளிநாட்டு தனவந்தர்களுக்கும்,கொடை வள்ளல்களுக்கும் அமைப்பின்  செயலாளர் முகமட் ஹம்சா நன்றிகளை தெரிவித்ததுடன் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருந்த பொறியலாளர் நியாஸ் முகைதீன்,கொலொண்ணாவ ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பிரதான அமைப்பாளரும் நிறைவேற்று அதிகாரியுமான டி.கே.எம் றிஸ்வி அமைப்பின் சேவை சம்மந்தமாக உரையாற்றியதுடன் நிகழ்வை ஏற்பாடு செய்து வழிநடத்திய அமைப்பின் நிகழ்சி பெறுப்பாளர் பாசில் பாருக் வருகை தந்தவர்களுக்கும் குறித்த நிகழ்வை சிறப்பாக நடத்துவதற்கு தன்னுடன் இரவு பகலாக உழைத்த தனது அமைப்பின் திட்டப் பொறுப்பாளர் முகமட் அல்தாப் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்