Skip to main content

மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

  எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா

20 பேர்ச் காணியில் பாடசாலை ஒன்று மீலாத் முஸ்லீம் வித்தியாலயமாகும்.
(அஷ்ரப் ஏ. சமத்)

இலங்கையின் முஸ்லீம்களின் கல்வி வரலாற்றில் 60 வருடங்களுக்கு மேலாக அதுவும் கொழும்பு மாவட்டத்தில் ஒரு கட்டடத்துடன் 20 பேர்ச் காணியில் பாடசாலை ஒன்று இயங்குவதென்றால் அது  தெஹிவளை முவா் வீதியில் உள்ள மீலாத் முஸ்லீம் வித்தியாலயமாகும்.  இங்கு 118 முஸ்லீம்  மாணவ மாணவிகள் கல்வி கற்கின்றனா். 25க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் உள்ளனா். சகலருக்கும் 2 மலசல கூடம் மட்டுமே உள்ளது.  பாணந்துறை தொட்டு கொழும்பு காலிமுகத்திடல்  வரையும் முஸ்லீம் ஆண் பெண் பாடசாலை ஒன்று உள்ளது என்றால் தெஹிவளை பாலத்திற்கு கீழ் இயங்கும்  பாடசாலையாகும்.

இப்பாடசாலையிற்கு  கடந்த 1 வருடமாக புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள 1ஆம தர அதிபா் எம்.எஸ்.எம் சுஹா்  வீழ்ந்து கிடந்த இந்தக்  கல்லுாரியை கட்டி எழுப்புவதில் மிகவும் கரிசனை உள்ளாா். இவருடன் பாடசாலை அபிவிருத்தி சங்கம், பெற்றாா்கள் தெஹிவளை பள்ளிவாசல் வர்த்தக சமுகம் கைகொடுத்து வருவதாக தெரிவித்தாா்.  நான் இந்தப் பாடசாலையை பொறுப்பேற்ற அன்று எனது நியமனக் கடிதத்தினை பயில் இடுவதற்கு பயில் கவா் ஒன்று இக் கல்லுாாி அலுவலகத்தில் இருக்க வில்லை. வங்கி கணக்கில் 1 ருபா 35 சதம் மட்டுமே இருந்தது.   உடன் செயல்பட்டு இக் கல்லுாாியின் ஆசிரியா் ஒருவரே முதலில் தமது சொந்தப் பணத்தில் 15ஆயிரம் ருபாவை நன்கொடை அளித்தாா். என கல்லுாாி அதிபா் அங்கு தெரிவித்தாா்.
 

இன்று(27)ஆம் திகதி இப்பாடாசலையில் பரிசலிப்பு விழா மாணவா்களது கலை நிகழ்ச்சிகள், ஆசிரியா் கௌரவிப்பு 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் சித்தியைடைந்த மாணவா்கள் கௌரவப்பு.மற்றும் 10 ஆம் ஆண்டு  மாணவா்கள் மாணவத் தலைவா்கள் பதிவியேற்பு  என பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன. 
இவ் வைபத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவா் றிஸ்வி முப்தி,  முஸ்லீம் கவுன்சில் மற்றும் முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவா் என்.எம். அமீன், நொலேஜ் பொக்ஸ் ஊடக நிறுவனத்தின் பணிப்பாளா் அஸ்கா், மேல் மாகண கல்வித்திணைக்களத்தின் பணிப்பாளா் திருமதி வசீர்தீன் மற்றும் வலயக் கல்வி அலுவலா் காதா் இங்கு கலந்து கொண்டு இக் கல்லுாாி பற்றி உரயாற்றினாா்கள். 

இக் கல்லுாாிக்கு அருகாமையில் உள்ள காணியொன்றை விற்பனைக்கு உண்டு.  அதனை இப்பாடசாலையின் ஆண்கள் வேறாகவும், பெண்கள் வேறாகவும் நடத்துவதற்கும், இப்பிரதேச தனவந்தா்கள். நலன் விரும்பிகள் உதவுமாறு கல்லுாாி அதிபா் எம்.எஸ்.எம் சுஹா் அங்கு வேண்டிக் கொண்டாா். 

 அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவா் றிஸ்வி முப்தி -  
 இப் பாடசாலையில் உள்ள பழைய கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிமொன்றை நிர்மாணிப்பதற்கு மெலிபன் இல்யாஸ் ஹாஜியாா் முன்வந்துள்ளதாகவும் இக் கட்டிட வரைபடம் தெஹி வளை - கல்கிசை மாநகர சபையில் இருந்து அனுமதி பெற்றதும் தற்காலிகமாக ஒரு வீட்டுக்கு மாற்றப்பட்டு இக்கல்லுாாி நிர்மாணிக்க உள்ளதாகவும் தெரிவித்தாா்.  இப்பாடசாலை பாணந்துறை தொட்டு கொள்ளுப்பிட்டி வரையிலான முஸ்லீம் சமுகத்திற்கு தேவையானதொரு பாடசாலையாகும். இதனை அபிவிருத்தி செய்வது எமது தலையாய கடமையாகும். கொழும்பில் 21 பாடசாலைகள் உள்ளன. அவைகள் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும். ஒவ்வொரு பாடசாலையிலும் உலகக் கல்வியுடன் இஸ்லாமியக் கல்வியும் கட்டாயமாகும். எமது அமைப்பில் தற்போது கல்விக்கென தனியான பிரிவு இயங்குகின்றது. பாடசாலைகளில் மாா்க்க கல்வி புகட்டுவதற்கு எமது அமைப்பு 17 மௌலவி மாா்களை நியமித்து அவா்களுக்கு சம்பளம் வழங்கும் திட்டத்தினையும் சில பாடசாலைகளில் அமுல்படுத்துகின்றது.  இலங்க அரசாங்கத்தில் 1939  ஆம் ஆண்டில் இருந்து மொளலவி ஆசிரியா்கள் நியமனம் வழங்க்பட்டது. ஆனால் 1994 கல்வியமைச்சினால் இதுவரை மொலவி ஆசிரியா்கள் நியமனம் மறுக்கப்பட்டு வருகின்றது.  இதனை எமது முஸ்லீம் அரசியல்வாதிகள் பெற்றுக் கொள்ள மீள முயற்சித்தல் ,வேண்டும். அரசியல் வாதிகளுக்கு  ஆண்மீகம் இருப்பது கட்டாயமாகும். அப்போது தான் தான் சாா்ந்த சமுதாய உணா்வும் வரும்,  இந்தப் பாடசாலையில் கூட 6 தமிழ் ஆசிரியா்கள் கடமையாற்றுகின்றாா்கள்.  அவா்கள் மத வேறுபாடு இன்றி தமிழ் மொழியை பேசுபவா்களாக நமது பிள்ளைகளுக்கு தமது உண்னத சேவைகளை செய்து வருகின்றனா்.  

பாடசாலைகள் ஆண்கள், வேறு பெண்கள் வேறாக இருந்த பாடசாலைகள் தான்  அங்கு கல்வி முன்னேறி பரீட்சைகளில் சித்தியடைவாா்கள். கலவன் பாடசாலையாக இருந்தால் அங்கு கல்வி முன்னேற்றம் அற்றதாகவே காணப்படும்.  இலங்கையில் முஸ்லீம்களுக்கென 900 பாடசாலைகள் உள்ளன. அதில் 50 பாடசாலைகள் மட்டுமே தனியான ஆண் பெண் பாடசாலைகள் உள்ளன. அந்தப் பாடசாலைகளின் கல்விப் பெறுபேறுகள் சிறந்து விளங்குகின்றன.  தெஹிவளையில் இவ்வாறனதொரு பாடசாலை உள்ளதா ? என தெஹிவளை வாழ்பவா்களுக்கே தெரியாது. நாமக்கு பள்ளிவாசல்களும் பாடசாலைகளும் இரண்டு கண்களாக நாம் பாடசாலைகளையும் முன்னேற்ற வேண்டும்.  கொழும்பு மவாட்டத்தில் மட்டும் முடுக்கு வீடுகளில் வாழ்ந்து வரும் முஸ்லீம் மாணவா்கள் 4000 பேர காலைச்சாப்பாடு சாப்பிடாமல் பாடசாலை வருவதை அவதாணிக்க முடிந்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்பபட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 25 ஆயிரம் முஸ்லீம் மாணவா்கள் அரச பாசடாலைகளில் கல்வி கற்கின்றனா். எனவும் றிஸ்வி முப்தி அங்கு தெரிவித்தாா்.

Comments

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.  தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313

சாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு !

சாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது . 1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும். கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் ச