ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
அரசியல்
காழ்புணர்வும்,தமது இயலாத்தன்மையினையும் வெளிப்படுத்தும் வகையில் அகில இலங்கை மக்கள்
காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீனுக்கு எதிராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
ஏ.எல்.எம்.தவம் தெரிவித்துள்ள கருத்து வண்மையாக கண்டிக்கப்பட வேண்டிதொன்று என்று தெரிவித்துள்ள
முன்னாள் வ்வுனியா நகர சபை உறுப்பினருமான வவுனியா மாவட்ட இன நல்லுறவு ஒன்றியத்தின்
ஆயுட்கால தலைவலமான எம்.எஸ்.அப்துல் பாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு
மாகாண சபை உறுப்பினர் தவம் அவர்கள்,இந்த நாட்டு அரசியல் அனுபவமில்லாத ஒருவர் என்பதை
அவரது அநாகரிமான பேச்சில் இருந்து தெரிகின்றது.அண்மையில் தலைவரும்,அமைச்சருமான றிசாத்
பதியுதீன் அவர்கள் கிழக்கில் மாவடிப்பள்ளிக்கு விஜயம் செய்த போது இடம் பெற்ற சம்பவம்
ஒன்றினை வைத்து அமைச்சர் றிசாத் பதியுதீனின் ஒட்டு மொத்த அரசியல் வாழ்வுக்கு சவாலிடும்
வகையில் தவம் அவர்கள் பேசியமையும்,அவை அமைச்சர் றிசாத் பதியுதீனை அரசியலில் இருந்து
ஓரங்கட்ட வேண்டும் என்று செயற்பட்டுவரும் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பானது இன்னும்
இது சதிகாரர்களின் திட்டம் என்பதை அறியமுடிகின்றது.
வடக்கில்
வாழ்ந்த முஸ்லிம்களும், தமிழர்களும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் இன்னும் கறைபடிந்த
வரலாறாக இருக்கின்ற போது அந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கு கடுகளவும் பங்களிப்பு
செய்யாத தவம் எமது தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களுக்கு எதிராக அறைவேட்காட்டுதனமான
பேச்சுக்களை பேசிவருவருது ,அவருக்கு தங்போது கொடுக்கப்பட்டுள்ள கொன்தராத்து என்பதை
காணமுடிகின்றது.
மன்னார்
நீதிமன்றத்துக்கு கல்லடித்தார் எனவும், பட்டானி றாசிக் கொலை தொடர்பில் அமைச்சரை சம்பந்தப்படுத்தியும், உண்மைக்கு
புறம்பான பேச்சினை பேச ஆரம்பித்துள்ளதானது தவத்தின் கையாலாகத்தனத்தின் உச்சகட்ட வெளிப்பாடு
என்பதாகும்.அமபாறை மாவட்ட மக்களது வாக்குகளை பெற்றுக் கொண்டு அந்த மக்களுக்கு எதனையும்
செய்யாமல்,ஊராரின் வளர்ப்பில் அரசியல் முகவரி பெற்று வளர்த்த தந்தையினையே காட்டிக்
கொடுக்கும் அரசியல் கலாசாரத்தினை ஆரம்பித்த பெறுமையினை தவத்தின் பதிவில் வரலாற்று பதிவாக
கொள்ளமுடியும்.
தானும்
செய்யாது பிறரையும் செய்யவிடாத அசிங்கத்தனமான அரசியல் கலாசாரத்தை ஒரு போதும் மர்ஹூம்
அஷ்ரப் செய்யவில்லை என்பதை தவமும்,அவரது ஆதரவாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.பதவி
மோகத்துக்காக பொறுப்பற்ற தலைமைகளின் துவல்களுக்காகவும் நரம்பற்ற நாக்கின் பேச்சுக்கள்
சமூகத்தின் எதிர்காலத்திற்கு அபாயகரமானதாக அமையும் என்பதை தவம் புரிந்து கொள்ள வேண்டும்.
நடக்காத்த்தை
நடந்த்தாக கூறும் தவம் அவரது வாழ்க்கையினை மீள ஒரு முறை திரும்பிப்பார்த்தால் அவரது
அழுக்கான வாழ்வின் உருவத்தை மீள காணமுடியும் என்று தெரிவித்துள்ள அப்துல பாரி,தனது
அறிவுக்குள் மட்டும் நின்று செயற்படுவது அவரது தனிப்பட்ட மறியாதைக்கு போதுமானதாகும்
என்பதை எடுத்துரைக்கவிரும்புவதாகவும் ஒன்றியத்தின் தலைவர் அப்துல் பாரி அந்த அறிக்கையில்
மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a comment