Skip to main content

மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

  எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா

கோடிகள் பற்றிய குற்றச்சாட்டு

விற்று பிழைத்தல்

இன்றைய -12- தமிழ் மிரர் பத்திரிகையில், முகம்மது தம்பி மரைக்கார் என்பவர் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து சில முக்கிய பகுதிகள்

அரசியல் என்பது கொளுத்த வியாபாரமாகும். அதில் - இலட்சங்களைக் கொட்டினால், கோடிகளை உழைத்துக் கொள்ள முடிகிறது. அதனால்தான், உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் கூட, அச்சமின்றி இலட்சக் கணக்கான ரூபாய்களை செலவு செய்கின்றனர். வெற்றி பெற்ற பின்னர், ஒரேயொரு வீதி நிர்மாணக் கொந்தராத்தில் - தேர்தல் செலவுகள் அனைத்தையும் இலாபத்துடன் அள்ளிக்கொள்ள முடியும் என்று அவர்களுக்குத் தெரியும். உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் காட்டில் இந்தளவு மழை என்றால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்களின் வியாபாரம் எவ்வளவு ஜோராக இருக்கும் என்று சொல்லித் தெரியத் தேவையில்லை. ஆனாலும் சொல்ல வேண்டியுள்ளது.

முஸ்லிம் சமூகம் - தமக்கென்று ஓர் அரசியல் கட்சியாவது இருக்க வேண்டும் என விரும்புகிறது. அந்தக் கட்சியானது, தமக்காகக் குரல் கொடுக்கும் என்று - அந்த சமூகம் அப்பாவித்தனமாக நம்புகிறது. இந்த நிலையில், முஸ்லிம் சமூகம் - ஆசைப்பட்டதை விடவும் அதிகமாகவே, அவர்களுக்குள் அரசியல் கட்சிகள் உருவாகி விட்டன. இருந்தபோதும், முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளை - ஜனநாயக வழியில் போராடிப் பெற்றுக் கொள்வதற்கென்று உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் முஸ்லிம் அரசியல் கட்சிகள், தமது மக்களின் நலன்களை விற்றுப் பிழைத்து, வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றன என்பது - கசப்பான உண்மையாகும்.

முஸ்லிம் சமூகத்துக்குள் இருக்கின்ற கணிசமான அரசியல் கட்சிகள், தமது பெயர்களில் 'காங்கிரஸ்' என்கிற சொல்லை வைத்திருக்கின்றன. அவற்றிலொரு காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கும் - அடுத்த நிலைத் தலைவர் அல்லது தலைவர்களுக்கும் இடையில் பிரச்சினைகள் உருவாகியுள்ளமை குறித்து, வாசகர்கள் அறிவர். இதன் காரணமாக, அந்தக் கட்சியினதும், கட்சித் தலைவருடையதும் கடந்தகால இரகசியச் செயற்பாடுகள் அம்பலமாகி வருகின்றன. குறிப்பாக, மக்கள் நலன் குறித்து சற்றும் யோசியாமல், கட்சியை வைத்து காசு உழைத்த, அவர்களின் அதிர்ச்சியளிக்கும் நயவஞ்சகக் கதைகள்தான் இப்போது பெரும் பேச்சாக உள்ளது.

கோடிகள் பற்றிய குற்றச்சாட்டு

முஸ்லிம்களின் 'காங்கிரஸ்' கட்சிகளில் ஒன்றினுடைய, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த உயர் மட்டத்தவர்களுக்கான கூட்டமொன்று அண்மையில் அம்பாறை கரையோரைப் பகுதியில் நடைபெற்றது. அந்த கட்சியின் தலைவர்தான் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். இதன்போது, கட்சித் தலைவருடன் முரண்பட்டுள்ள - அடுத்த நிலைத் 'தலைகள்' குறித்து அதிகம் பேசப்பட்டது. தலைவரும் தனது கோபத்தையெல்லாம் கொட்டித் தீர்த்தார். தலைவருக்கு ஜால்ரா அடிப்பவர்களில் சிலர் - அந்த சந்தர்ப்பத்தை, தமது தலைமைத்துவ விசுவாசத்தினை வெளிப்படுத்துவதற்காகப் பயன்படுத் கொண்டார்கள். தலைவருக்கு எதிரான - அடுத்த நிலைத் 'தலை'களில் ஒன்றினை, கட்சியை விட்டும் கழற்றி விட வேண்டும் என்று, ஜால்ராக்கள் ஆக்ரோசப்பட்டன. எதுவும் பேசாமல் தலைவர் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில், அந்தக் கூட்டத்துக்கு வருகை தந்திருந்த உயர் மட்டத்தவர் ஒருவர் எழுந்தார். "அரசியலமைப்பின் 18ஆவது திருத்தச் சட்டத்துக்கு, நமது கட்சியின் ஆதரவை வழங்குவதற்காக, அப்போதைய ஆட்சியாளர்களிடம் நமது கட்சித் தலைவர் - பணம் பெற்றுக்கொண்டதாகப் பேசப்படுகிறது. அவ்வாறு பெற்றுக் கொண்ட பணத்தில், அப்போது நமது கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவி வகித்தோர் உள்ளிட்டவர்களுக்கு, தலா ஒரு கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் கதைகள் உள்ளன. இது குறித்து, கட்சித் தலைவர் தெளிவுபடுத்த வேண்டும்" என்று, குண்டொன்றினைத் தூக்கிப் போட்டார் அந்த நபர்.

இதற்கு தலைவர் என்ன பதிலளித்தார் என்று, கூட்டத்தில் கலந்து கொண்ட - கட்சியின் உயர் மட்டத்தவர்கள் சிலரிடம் கேட்டோம். "கட்சிக்காக பணம் வாங்கியது உண்மைதான். மறைந்த தலைவருடைய காலத்திலும் கட்சிக்கு இவ்வாறு காசு கிடைத்திருக்கிறது. ஆனால், கட்சி பெற்றுக் கொண்ட பணத்தினை கட்சிக்காகத்தான் செலவு செய்தேன். நான் ஒரு சதமும் எடுக்கவில்லை என்று கூறி, தலைவர் மழுப்பி விட்டார்" என, மேற்படி உயர் மட்டத்தவர்கள் நம்மிடம் தெரிவித்தார்கள்.  இதேவேளை, அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், கட்சி காசு வாங்கியதை உறுதிப்படுத்தும் வகையில் பேசியதாகவும், அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டோர் கூறினார்கள்.

காசுக்கு உயர்ந்த கைகள்

நபரொருவர் இரண்டு தடவைக்கு மேல், ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் போது, அவர் - சர்வதிகாரப் போக்குடைவராக மாறும் நிலை உருவாகும் என்பது பற்றியும், அதனால் - ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் என்பது குறித்தும், முஸ்லிம்களின்  'காங்கிரஸ்' கட்சி கவலைப்படவில்லை.

இவ்வாறானதொரு நிலையில்தான், அரசியமைப்பின் 18ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்கும் பொருட்டு, முஸ்லிம்களின் 'காங்கிரஸ்' கட்சியொன்றின் தலைமையானது, அப்போதைய ஆட்சியாளர்களிடம் பல கோடி ரூபாய்களை லஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இது மட்டுமன்றி, இன்னும் பல சந்தர்ப்பங்களிலும் - இவ்வாறு, பல தரப்புக்களிடமிருந்தும் மேற்படி கட்சியின் தலைமையானது, பணம் பெற்றுள்ளதாகவும் கதைகள் வெளியாகியுள்ளன.  சமூகத்தினையும் கட்சியினையும் அடமானம் வைத்து, கட்சியின் தலைவர் இவ்வாறு காசு பெற்றதாகக் கூறப்படும் கதைகளைக் கேள்வியுற்ற - கட்சியின் மேல்மட்டத்தவர்கள் பலரும், தற்போது தலைவருடன் கடுமையான கடுப்பில் உள்ளனர். இந்த நிலையில், கட்சியின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த - சில முக்கியஸ்தர்கள், கட்சித் தலைவரை நேரடியாகச் சந்தித்து - இது தொடர்பில் விசாரித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை, தலைவருடன் முரண்பட்டுள்ள அடுத்த நிலைத் தலைவர்களையும், மேற்படி அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் சந்தித்துள்ளனர். இதன்போது, கட்சியையும் சமூகத்தையும் அடமானம் வைத்து, தலைவர் காசு வாங்கியதாகக் கூறப்படும் கதைகளை, கட்சியின் அடுத்த நிலைத் தலைவர்கள் உறுதி செய்துள்ளனர். எவ்வாறிருந்தபோதும், 18 ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று, அந்த சந்தர்ப்பத்தில் கட்சித் தலைவரிடம் - தான் மன்றாடியதாகவும், வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் முஸ்லிம்களின் காங்கிரஸ் கட்சியின் அடுத்த நிலைத் தலைவரொருவர் தன்னைச் சந்தித்தவர்களிடம் கூறியிருக்கின்றார். ஆக, மேலுள்ள கதைகளையும் குற்றச்சாட்டுக்களையும் எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும், மேற்படி 'காங்கிரஸ்' கட்சியின் தலைவர் - சமூத்தையும் கட்சியையும் அடமானம் வைத்து, பல்வேறு சந்தர்ப்பங்களில் காசு பெற்றுள்ளார் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.

இரட்டை முகம்

மஹிந்த ராஜபக்ஷவின் அரசு தொடர்பில், ஒருபுறம் கடும் அதிருப்திகளை வெளியிட்டு வந்த - மேற்படி காங்கிரஸ் கட்சித் தலைவர், இன்னொருபுறம் - அதே ராஜபக்ஷவிடம் காசு வாங்கிக் கொண்டு, அவரை - ஆயுள் முழுவதும் ஜனாதிபதியாக வைத்திருக்கும் நோக்குடன் கொண்டு வரப்பட்ட, 18 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை ஆதரித்தமையானது, மிக அருவருப்பான அரசியல் விபச்சாரமாகும். எனவே, இது தொடர்பில் பொதுமக்கள் விழிப்படைய வேண்டும். இந்த விடயம் தொடர்பில் மேலும் ஆராய முற்பட வேண்டும். 'நமது சமூகத்துக்குக்காகக் குரல் கொடுக்கும்' என்கிற நம்பிக்கையில், ஒரு கட்சிக்காக நாம் வாக்களித்து விட்டுக் காத்திருக்கும் போது, அந்தக் கட்சியை அடமானம் வைத்து - காசு உழைக்கிறார்கள் என்கிற கயமைத்தனத்தினை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்.

இதேவேளை, இந்த விடயங்கள் தொடர்பில் - தாம் அறிந்து கொண்ட அனைத்து விடயங்களையும், மேற்படி கட்சியின் உயர் மட்டத்தவர்கள் பகிரங்கப்படுத்துவதற்கு முன்வர வேண்டும். 'தலைவரைப் பகைத்துக் கொண்டால், அரசியல் எதிர்காலம் இல்லாமல் போய் விடும்' என்பதற்காக, ஒரு சமூகத்துக்கு எதிராய் இழைக்கப்பட்டுவரும் துரோகங்களை மறைத்து விடக்கூடாது. மேற்படி விவகாரங்கள் குறித்து நம்முடன் மனந்திறந்து பேசியவர்கள் அனைவரும், தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு பகிரங்கமாகவும் பேசுவதற்கு முன்வர வேண்டும். இவை அனைத்துக்கும் அப்பால், கட்சித் தலைவருடன் முரண்பட்டுள்ள அடுத்த நிலைத் தலைவர்களும் - இவை குறித்து ஊடகங்களுக்கு வாக்கு மூலம் வழங்குவதற்குத் தயாராக வேண்டும். அடுத்த நிலைத் தலைவர்களும் தவறிழைத்துள்ளார்கள். அவை குறித்தும் பேச வேண்டும்.

நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதுதான் - நமக்கான மிகப்பெரும் அவமானமாகும்.
Jaffna Muslim நேரம் Tuesday, July 12, 2016

Comments

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.  தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313

சாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு !

சாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது . 1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும். கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் ச