ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
பல்லினங்கள் வாழும் இந்த நாட்டில் அமைதியும் சமாதானமும் ஏற்பட இந்த ஈகைத் திருநாளில் ஒவ்வொரு முஸ்லீமும் பிரார்த்திப்பது இன்றைய நாளில் தமது கடமையாகும் என திருகோணமலை ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் குறிப்பிட்டுள்ளார்
புனித மக்காவிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்து செய்தியிலயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது
இந்த இனிய நாளில் ஹஜ்ஜுப்பெருநாளை கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய ஹஜ்பெருநாள் வாழ்த்துக்கள்
இறைதூதர்கள் நபீ இப்ராஹீம்(அலை) நபீ இஸ்மாயீல் (அலை) மற்றும் அன்னை ஹாஜரா ஆகியோரின் மாபெரும் தியாகத்தை நினைவு கூறும் வகையில் தியாகத் திருநாள் உலகமெங்கும் உள்ள முஸ்லிம்களால் கொண்டாடப்படுகிறது.
லட்சோப லட்சம் முஸ்லிம்கள் ஒன்று திரண்டு புனித மக்கா நகரிலும் அரபா பெரு வெளியிலும் பிராத்தனை செய்யும் இந்நாளை அடைந்து கொள்ளும் பாக்கியத்தை இறைவன் எங்களுக்கும் வழங்கியுள்ளான். அல்ஹம்துலில்லாஹ்.
ஹஜ் கடமையைநிறைவேற்றுவதற்கு புனிதமக்காசென்றுள்ள ஹஜ்யாஜ்களின் ஹஜ் கடமை அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுடைய பிரார்த்தனைகள் நிறைவேறுவதற்கும் பிரார்த்திப்போமாக. ஆமீன்
அத்துடன் பல்லினங்கள் வாழும் இந்த நாட்டில் அமைதியும் சமாதானமும் ஏற்பட இந்த ஈகைத் திருநாளில் ஒவ்வொரு முஸ்லீமும் பிரார்த்திப்பதோடு இந்த இனிய நாளிலும் அசாதாரண சூழ்நிலைகளுக்கு மத்தியில் வாழும் பாலஸ்தீன் சிரியா ஈராக் சகோதர சகோதரிகள் உட்பட அனைத்து மக்களையும் எமது துஆக்களில் சேர்த்துக்கொள்வோம்
மேலும் ஹஜ் புகட்டும் பாடத்தை மற்றவர்களுக்கு முன்மாதிரியாகக்கொண்டு எமது வாழ்விலும் கடைப்பிடித்துஇ எமது எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த இருப்பினை இந்த நாட்டில் ஏற்படுத்த நாம் அணைவரும் இணைந்து ஒற்றுமையாக பாடுபட முன்வருவோம்
இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் விடுத்துள்ள ‘ஈதுல் அழ்ஹா’வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகப்பிரிவு
Comments
Post a comment