Skip to main content

மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

  எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா

அகதி என்ற வார்த்தை எளிதாக இருந்தாலும் அனுபவிக்கும் போது தான் அதன் கஸ்டம் புரியும்
சுஐப்.எம்.காசிம்.
அகதி என்ற வார்த்தை எழுதுவதற்கும் பேசுவதற்கும் எளிதாக இருந்தாலும் அதனை அனுபவிக்கும் போது தான் உண்மையான கஷ்டம் விளங்கும். அகதி என்ற பட்டத்தை தாங்கிக் கொண்டு காலம் கடத்துவது எவ்வளவு கஷ்டமானது என்பதை நானும் அனுபவ ரீதியாக உனர்ந்தவனே என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
மன்னார் பொற்கேணியில் இடம் பெற்ற ஹஜ் விளையாட்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களையும் வழங்கினார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது,
மன்னாரில் இருந்து 90ம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் தமது பிரதேசங்களில் குடியேறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் அந்தவகையில் முசலிப் பிரதேச மக்களும் குடியேற முனையும் போது பல்வேறு கஷ்டங்களை அனுபவிக்கின்றனர் நானும் இந்த மாவட்டத்தில் இருந்து 18 வயதிலே அகதியாக சென்றவனே. அகதி முகாமில் வாழ்ந்து கல்விபெற்று ,பின்னர் தொழில் பெற்று, அரசியலுக்குள் உந்தப்பட்டேன் அகதி முகாம் வாழ்வின் போது ஏற்பட்ட கசப்பான, வேதனையான சம்பவங்களே அரசியலுக்குள் நுழைய வேண்டும் என்ற ஆசையை தூண்டியது.
வட மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அகதிச் சமுதாயத்தின் விடிவுக்கு அரசியல் தான் சிறந்த வழி என்பதை நம்பியே அரசியல்  செய்தேன். அகதியாக தென்னிலங்கைக்கு சென்ற எனக்கு அமைச்சராக சொந்த மாவட்டத்துக்கு வருவதற்கான சந்தர்ப்பத்தை இறைவன் எனக்கு வழங்கினான்.
நாம் இரண்டு தசாப்த காலத்துக்கு முன்னர் இழந்த மண்ணை நிரந்தரமாகவே தாரை வார்த்து விட்டோம் என்று தான் எண்ணியிருந்தோம். எனினும் மீண்டும் நமது மண்ணுக்கு வருவதற்கு இறைவன் உதவி செய்துள்ளான்.
முசலி பிரதேசத்தில் நமது சொந்தக் காணிகளில் குடியேறும் போது வில்பத்தை அழிக்கிறார்கள் என்று கூக்குரலிட்டார்கள், றிஷாட்டே இதற்கு மூல காரணம் என்றும் திட்டித் தீர்த்தார்கள். சமூக வலைத் தளங்களான முகநூல்களும், இணையத் தளங்களும் என்னைப் பற்றிய கட்டுக் கதைகளையும் அபாண்டங்களையும் தாரளமாகவே பரப்பிவருகின்றன .இனவாத இணையத் தளங்கள் சில என்னை குற்றம் சாட்டுவதற்காவே திட்டமிட்டு ஒரு சில பக்கங்களை திறந்து ஒவ்வொரு நாளும் சேறு பூசி வருகின்றனர். வில்பத்துவிலும், பெரியமடுவிலும், சன்னாரிலும், நான் காடுகளை அழித்ததாக இனவாத சூழலியலாளர்கள் 6 வழக்குகளை தொடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட சமூகத்தை மீளக் குடியேற்றுவதற்கு நான் முன்னின்று செயற்படுவதால் தான் இவ்வாறு செய்கிறார்கள்.
எனது குரல் வளையை இறுக்குவதற்கும் என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்டுவதற்கும் என் மீது அரசியல் காழ்ப்புணர்வு கொண்டவர்களும் பாடாய்ப் படுகின்றனர்.
இத்தனைக்கு மத்தியிலே குர்-ஆனையும் ஹதீஸையும் பின்பற்றுவதாகக் கூறும் ஒருகட்சி என்னைப் பற்றி பொய்யான குற்றச்சாட்டுகளை சோடித்து, கோவைப்படுத்தி இலஞ்ச ஒழிப்பு ஆணைக் குழுவிலும் நிதி மோசடி விசாரணைப்பிரிவிலும் இரகசியப் பொலிசாரிடமும் பொலிஸ் நிலையத்திலும் கொடுத்துவிட்டு ஏதோ என்னை குற்றவாளி போலாக்கி பத்திரிகைகளையும் வானொலி, தொலைக்காட்சிகளையும் நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்து ஊடகவியலாளர் மகாநாடுகளை நடாத்தியது.
நான் எந்தத்தவறும் இழைக்கவில்லை. இறைவனைத் தவிர எவருக்கும் பயப்படவும் இல்லை எத்தனை குற்றச்சாட்டுக்களை என் மீது அடுக்கினாலும் நான் கதி கலங்கப்போவதும் இல்லை. குற்றம் செய்யாத என்னை எவ்வாறாவது சிக்கலுக்குள் மாட்டவைத்து சிறையில் அடைப்பதன் மூலம் தாங்கள் சந்தோசமாக இருக்கமுடியும் என இந்த கட்சிக்காரர்கள் பகற்கனவு காண்கின்றனர்.
நாங்கள் வரலாறுகளை மறந்து வாழக்கூடாது. நன்றி மறந்து வாழவும் கூடாது. யுத்தகாலத்தில் காடாகியும் புதர்கள் மண்டியும் இடிபாடுகளுடான கட்டிட சிதைவுகளுடனும் காட்சி தந்த இந்தப்பிரதேசம் இப்போது எப்படி இருக்கின்றது என்பதை நீங்கள் உணர்வீர்கள்.
பொற்கேணியில் இருந்து அரிப்பு வரை கட்டடங்களையும் வீடுகளையும் மாடிகள் கொண்ட பாடசாலைகளையும் காண முடிவதற்கு யார் காரணம் என்பதும் உங்கள் மனச்சாட்சிக்கு தெரியும். இதற்கெல்லாம் எனக்கு கிடைக்கும் வாழ்த்துக்களே எனக்கெதிரான வழக்குகளும் என்னைத் தூசிக்கும் வார்த்தைகளுமாகும்  .
வடக்கு முஸ்லிம்களை மீள்குடியேற்ற சர்வதேசமும் அரசாங்கமும் எந்த உதவியும் வழங்கவில்லை. அரச சார்பற்ற நிறுவனங்கள் மாற்றாந் தாய் மனப் பாங்குடனேயே எம்மை நடாத்துகின்றன. நான் வெளிநாடுகளுக்கு சென்று பரோபகாரிகளை சந்தித்து கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வந்த வீடுகளே இவை. எனது சொந்த முயற்சியினால் கொண்டு வரப்பட்ட இந்த வீடுகள் தொடர்பிலும் இனவாதிகள் என்னை பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றனர்.
மீள்குடியேற்றத்தை முறையாக செயற்படுத்துவதற்காகவே அரசாங்கத்திடம் நான் பல முறை விடுத்த வேண்டுகோளின் பின்னரேயே விசேட செயலணி ஒன்று அமைக்கப்பட்டது அதற்கும் தடை போடுகின்றனர் என்றும் அமைச்சர் கூறினார்.

Comments

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.  தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313

சாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு !

சாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது . 1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும். கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் ச