ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
“தியாகத் திருநாளை நினைவுபடுத்தும் இப்புனித நாளில் அனைவருக்கும் எல்லா வல்ல இறைவனின் அன்பும் - அருளும் கிடைப்பதற்கு பிரார்த்திக்கின்றேன்” -என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பிரத்தியேக செயலாளர் றயிஸ{த்தீன் தெரிவித்தார்
ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அதில் மேலும் கூறியுள்ளதாவது:-
அல்லாஹ் மீதான நம்பிக்கை, அன்பு, அவனது கட்டளைக்கு அடிபணிதல், தியாகம், பொறுமை, கடமை என்பவற்றை நினைவுபடுத்தும் இத்திருநாளில் இவையாவும் எமது சமூகத்தில் மேலும் வலுப்பெற நாம் பிரார்த்திக்க வேண்டும்.
இவை நம்மத்தியில் வலுவற்றுப் போனமையே எமது சமூகத்தின் பின்னடைவுக்கு காரணமாகும். இவை மேலும் வலுப்பெறுமானால் எமது சமூகம் மேலும் சக்தி பெறும். அத்தோடு, சகோதர இனங்களோடு பொறுமையாகவும் - அன்பாகவும் நடந்து கொள்ளும் அதேவேளை, அவர்களுடனான நல்லுறவைப் பேணுவதற்கும் நாம் முயற்சிக்க வேண்டும் -என அவர் மேலும் குறிப்பிட்டார்.
Comments
Post a comment