ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
காத்தான்குடி பாத்திமா பாலிகா வித்தியாலயத்தின் அபிவிருத்திப் பணிக்கு ஹிஸ்புல்லாஹ்வினால் 6.2 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
மட்டக்களப்பு
மத்தி கல்வி வலயத்தின் கீழ் இயங்கி வருகின்ற காத்தான்குடி பாத்திமா பாலிகா
வித்தியாலத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக புனர்வாழ்வு மற்றும்
மீள்குடியேற்ற அமைச்சினால் 6.2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலை நிர்வாகம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எஎம்.ஹிஸ்புல்லாஹ்விட ம்
விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக அவரது சிபாரிசின் பேரில், புனர்வாழ்வு
மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாத்திமா
பாலிகா வித்தியாலயத்தில் நிழவும் வகுப்பறை பற்றாக்குறை நிவர்த்தி செய்யும்
முகமாக இந்நிதி, வகுப்பறை கட்டிடத் தொகுதி நிர்மாணிப்பதற்கு
பயன்படுத்தப்படவுள்ளது.
இதற்கான நிதி
ஒதுக்கீட்டுக் கடிதம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்;புல்லாஹ்வின் ஆலோசனைக்கு அமைய
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் செயலாளரினால் மட்டு
மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமைக்
குறிப்பிடத்தக்கது.
Comments
Post a comment