Skip to main content

Posts

Showing posts from September, 2016

ந‌ல்லாட்சியை கொண்டு வ‌ந்த முஸ்லிம்க‌ள் ந‌டு றோட்டில்

கொழும்பு- சிலாபம் ஏ3 வீதியில் அமைந்துள்ள மாதம்பை முஸ்லிம் கிராமத்தில் தனியார் தேவாலையொன்றுக்கு முஸ்லிம்களின் காணிகளை கபளீகரமாக புனித பூமியாக பிரகடனப்படுத்த தனிநபரொருவர் முயற்சித்து வருவதற்கெதிராக பிரதேசவாசிகள் நேற்று ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். முஸ்லிம்கள் 5 பரம்பரைகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்ற இப்பிரதேசத்தை தனிவெல்ல தேவாலைக்கு சொந்தமான புனித பூமியாக பிரகடனப்படுத்தும் நோக்கில் நேற்று காணிகளை அளக்க முற்பட்டபோதே 500க்கும் மேற்பட்ட பிரதேச மக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ஐயனார் தமிழ் கோயிலை தனிவெல்ல தேவாலையாக மாற்றி, கீர்த்தி சேனாநாயக்க என்பவர் பரிபாலனம் செய்து வருவதாகவும், தேவாலைக்கு எதிரேயுள்ள ஒரு ஏக்கர் அளவிளான காணியில் அமைந்துள்ள 27க்கு மேற்பட்ட முஸ்லிம் வீடுகள், 12 கடைகளை உடைந்து புனித பூமியாக பிரகடனப்படுத்த முயற்சித்து வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 16வருடங்களுக்கு முன்னர் இந்த பிரதேசத்தை புனித பூமியாக வர்த்தமாணி மூலம் பதிவுசெய்ய முயற்சித்துள்ளதாகவும், இதுவரையில் மக்களுக்கு எவ்வித முன்னறிவித்தலும் இன்றி காணிகளை அளக்க

கோடிகள் பற்றிய குற்றச்சாட்டு

விற்று பிழைத்தல் இன்றைய -12- தமிழ் மிரர் பத்திரிகையில், முகம்மது தம்பி மரைக்கார் என்பவர் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து சில முக்கிய பகுதிகள் அரசியல் என்பது கொளுத்த வியாபாரமாகும். அதில் - இலட்சங்களைக் கொட்டினால், கோடிகளை உழைத்துக் கொள்ள முடிகிறது. அதனால்தான், உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் கூட, அச்சமின்றி இலட்சக் கணக்கான ரூபாய்களை செலவு செய்கின்றனர். வெற்றி பெற்ற பின்னர், ஒரேயொரு வீதி நிர்மாணக் கொந்தராத்தில் - தேர்தல் செலவுகள் அனைத்தையும் இலாபத்துடன் அள்ளிக்கொள்ள முடியும் என்று அவர்களுக்குத் தெரியும். உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் காட்டில் இந்தளவு மழை என்றால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்களின் வியாபாரம் எவ்வளவு ஜோராக இருக்கும் என்று சொல்லித் தெரியத் தேவையில்லை. ஆனாலும் சொல்ல வேண்டியுள்ளது. முஸ்லிம் சமூகம் - தமக்கென்று ஓர் அரசியல் கட்சியாவது இருக்க வேண்டும் என விரும்புகிறது. அந்தக் கட்சியானது, தமக்காகக் குரல் கொடுக்கும் என்று - அந்த சமூகம் அப்பாவித்தனமாக நம்புகிறது. இந்த நிலையில், முஸ்லிம் சமூகம் - ஆசைப்பட்டதை விடவும் அதிகமாகவே, அவர்களுக்கு

தமிழ்மக்களையும், தன்னையும் அந்நியப்படுத்துவதற்காக பல்வேறு சதி முயற்சிகள் அரங்கேற்றம்

முல்லைத்தீவில் அமைச்சர் றிசாத்.. சுஐப் எம்.காசிம்   தமிழ்மக்களையும், தன்னையும் அந்நியப்படுத்துவதற்காக பல முனைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும்,தமிழ் மக்கள் இந்த சூழ்ச்சிகளுக்கு இரையாக வேண்டாமெனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவு, நீராவிப்பிட்டி, ஹிஜ்றாபுரத்தில் இடம்பெற்றவலைப்பந்தாட்ட மைதானத் திறப்புவிழா மற்றும் ஹஜ் விளையாட்டு போட்டியில் பிரதமஅதிதியாகப் பங்கேற்று உரையாற்றிய போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். மாகாணசபை உறுப்பினர் யாசீன் ஜனூபரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த விழாவில் அமைச்சர் மேலும் கூறியதாவது. இறுதி யுத்தத்தின் உக்கிரம் தாங்க முடியாமல் முல்லைத்தீவு மக்கள் உடுத்த உடையுடன் ஓடோடி வந்தபோது, மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த நான் அங்கு சென்று, அவர்களை அரவணைத்து அரசின் உதவியுடன் மெனிக்பாமில் தற்காலிக இருப்பிடங்களை அமைத்துக்கொடுத்து, முடியுமான அத்தனை உதவிகளையும் வழங்கினோம். பாராளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம் அகதி முகாமில் இருப்பதாக அறிந்து, அவரை நான் தேடினேன். இரண்டு நாட்களின் பின்னர்தான் அவர் இருக்கும் இடத்தை அறிய முடிந்தது.

காத்தான்குடி பாத்திமா பாலிகா வித்தியாலயத்தின் அபிவிருத்திப் பணிக்கு ஹிஸ்புல்லாஹ்வினால் 6.2 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

+ மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கீழ் இயங்கி வருகின்ற காத்தான்குடி பாத்திமா பாலிகா வித்தியாலத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் 6.2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  குறித்த பாடசாலை நிர்வாகம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எஎம்.ஹிஸ்புல்லாஹ்விட ம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக அவரது சிபாரிசின் பேரில், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  பாத்திமா பாலிகா வித்தியாலயத்தில் நிழவும் வகுப்பறை பற்றாக்குறை நிவர்த்தி செய்யும் முகமாக இந்நிதி, வகுப்பறை கட்டிடத் தொகுதி நிர்மாணிப்பதற்கு பயன்படுத்தப்படவுள்ளது.  இதற்கான நிதி ஒதுக்கீட்டுக் கடிதம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்;புல்லாஹ்வின் ஆலோசனைக்கு அமைய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் செயலாளரினால் மட்டு மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களின் மீளெழுச்சி

நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் பிரச்சினைகள் சம்பந்தமாக இன்று (29.09.2016) பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜானாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காரியாலயத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இக் கலந்துரையாடல்  முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள், புத்திஜீவிகள், மற்றும்  முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கிடையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில், நல்லாட்சியில் இன்று முஸ்லிம்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக கலந்தாலோசிக்கப்பட்டது. அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கை இணைத்தால் அங்குள்ள சிங்கள முஸ்லிம் மக்கள்  எதிர்காலத்தில் எதிர்நோக்கவேண்டி வரும்  பிரச்சினைகள் தொடர்பாகவும்  கலந்துரையாடப்பட்டது. இந்த இணைப்பை பசில்  ராஜபக்சவும் ஸ்ரீலங்கா சுதந்திர முஸ்லிம் முற்போக்கு முன்னணியும் உலமா கட்சியும் வன்மையாக எதிர்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், வர்த்தக நடவடிக்கைகள் போன்றவற்றில் , நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் ஏற்பட்டுள்ள பாரதூரமான சவால்கள்  உட்பட பல்வேறு  விடயங்கள் தொடர்பாகவும்  கலந்துரையா

வாக்காளர்களைப் பதிவுசெய்வது தொடர்பான அறிவுட்டும் நிகழ்வு!...

-எம்.வை.அமீர், யு.கே.காலிதீன்- நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (CaFFC) ஏற்பாடு செய்திருந்த வாக்காளர்களைப் பதிவுசெய்வது தொடர்பான அறிவுட்டும் நிகழ்வு 2016-09-24 ஆம் திகதி அம்பாறை மாவட்டம் மாளிகைக்காடு விஸ்மில்லா வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. “கபே ” அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எஸ்.எல்.அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் “கபே ” அமைப்பின் தேசிய இணைப்பாளர் ஏ.ஏ.மனாஸ் மக்கீன் பிரதம வளவாளராகவும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் சரீர் அப்துல் வாஹித் மற்றும் அமைப்பின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் திலக் சமந்த ஆகியோர் வளவாளர்களாகவும் கலந்து கொண்டனர். வாக்களிக்க தகுதியுடைய ஒவ்வொருவரும் வாக்களிக்கவேண்டியதன் அவசியம் தொடர்பாகவும், வருடாவருடம் புதிப்பிக்கப்படும் ஒரேயொரு ஆவணமான வாக்காளர் இடாப்பில் தங்களது பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது, வாக்களிக்கத் தகுதியுள்ள அனைவரதும் கடமை என்ற விடயமும், வாக்களிக்காது விடின் தகுதியற்றவர்கள் தலைவர்களாக வர வாய்ப்பை நாங்களே ஏற்படுத்திக் கொடுப்பது போன்றாகிவி

ஆபத்து நமது தலைக்கு மேல் வந்து விட்டது

முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பாரிய பிரச்சினைகளை சிறியதாக்கி முஸ்லிம்களை அடிமைகளாக்கும் திட்டமே மஹிந்த காரத்தில் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினைகளாகும் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். கட்சிக்காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது, ஒரு பெரிய விடயத்தை சிறியதாக்க வேண்டும் என்றால் அந்த பெரிய விடயத்தின் அருகில் இன்னொரு பெரிய விடயத்தை போட்டால் ஏற்கனவே பெரிதாய் இருந்த விடயம் தானாகவே சிறிதாகிவிடும். முஸ்லிம்களை பொறுத்த வரை தமிழ் பேரினவாதம், வடக்கு கிழக்கு இணைப்பு என்பன பெரிய விடயமாகவும் ஆபத்து நிறைந்ததாகவும் இருந்தது. இதன் காரணமாக வரலாற்றில் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐ. ம. சுதந்திர முன்னணிக்கும் பெரும்பான்மையாக வாக்களிக்காத முஸ்லிம் சமூகம் யுத்த வெற்றியை தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக மஹிந்தவை நேசிக்க ஆரம்பித்தது. இதனை ஐ நாவில் மஹிந்தவுக்கெதிராக பிரேரனை கொண்டு வரப்பட்ட போது சுமார் ஒரு லட்சம் முஸ்லிம்கள் கொழும்பில் கூடி மஹிந்தவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்ததன் மூலம் பகிரங்கமாகியது. முஸ்லிம்களின் இம்முன்னெடுப்பு வெளிநாடுகளையும், உள் நாட்டில் உள்ள சில கட்சி

அளுத்கம தீக்கிரை சம்பவம் குறித்து உடன் விசாரணை செய்யுங்கள்.

ரிஷாட் அவசர வேண்டுகோள் . - ஊடகப்பிரிவு அளுத்கமையில் தர்ஹா நகர் ஒருவருக்குச் சொந்தமான கடையொன்று தீப்பிடித்து தீக்கிரையாகிய சம்பவம் குறித்து உடன் விசாரணை செய்து அது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் . இந்தச்சம்பவம் குறித்து இரசாயனப்பகுப்பாய்வு மேற்கொண்டு சதிமுயற்சியா ? அல்லது தற்செயலாக நடந்ததா ? என்ற உண்மையை கண்டறியுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார் . தர்ஹா நகர் , அளுத்கம போன்ற இடங்களில் இவ்வாறான கடை எரிந்த சம்பவங்கள் இடம்பெற்றமை இது முதற்தடவையல்ல . ஏற்கனவே இந்தப்பிரதேசங்களில் திட்டமிட்டு முஸ்லிம்களுக்கு எதிராக காடைத்தனங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டும் அவர்களின் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டும் இருக்கின்றன . நேற்றிரவு தீக்கிரையான இதே எரிந்த இதே கடை ஏற்கனவே 2005 ஆம் ஆண்டும் 2014 ஆம் ஆண்டும் தீக்கிரையாக்கப்பட்டமையை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் . 2014 ஆம் ஆண்டு இனவாதிகளின் அராஜக நடவடிக்கைகளினால் எரித்து நாசமாக்கப்பட்ட இந்த வியாபார