தீர்வின்றி தொடரும் கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம்!....  

 -எம்.வை.அமீர் -கடந்த 2016-07-27 முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சங்க சம்மேளனம்,பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுபல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்களால் மேற்கொள்ளப்படும்  தொழிற்சங்க போராட்டம் தொடர்கிறது.

 

குறித்த கல்விசாரா ஊழியர்களின் சம்மேளனத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றித் தரவேண்டும் எனக்கோரி தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் அவர்களது அமைப்பின் தலைவர் வை. முபாறக் தலைமையில் தொடர் பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளாக:

1.       MCA கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும்.

2.       UPF/EPF மற்றும் ஓய்வூதியத்தை கொடுப்பனவுக்கு பங்களிப்புச்செய்தல்.

3.       ஆக்கத்திறனுடைய ஓர் ஓய்வூதிய திட்டத்தை வழங்குதல்.

4.       60 வயதுக்கு ஓய்வூதிய வயதை மறுசீரமைப்பு செய்தல்.

5.       2016 ஆம் ஆண்டின் அரச சம்பள திட்டத்துக்கு சமமான சுற்றறிக்கையை வெளியிடுதல். போன்ற கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சங்க சம்மேளனத்தினால் முன்வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்