Skip to main content

எம் பி ப‌த‌விக்காக‌ அதுர‌லிய‌ தேர‌ரும் ஞான‌சார‌வும் மோத‌ல்.

 பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் . இவ்விடயத்தில் கட்சி மட்டத்தில் எவ்வித தீர்மானத்தையும் எடுக்க முடியாது . ஞானசார தேரரும் , அத்துரலிய ரத்ன தேரரும் ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்திற்காக செய்துகொண்ட ஒப்பந்தங்கள் ஏதும் கட்சிக்கு தெரியாது என அபே ஜனபல வேகய கட்சியின் தலைவர் சமன் பெரேரா தெரிவித்தார் .  அபேஜன வேகய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் குறித்து எழுங்துள்ள முரண்பாடு குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் . அவர் மேலும் குறிப்பிடுகையில் , கடந்த வருடம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் அபேஜனபல வேகய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகளுக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் ஒதுக்கப்பட்டது . அமைய இந்த ஆசனத்திற்கு அபேஜன பல வேகய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் விமல் திஸ்ஸ தேரர் , அபே ஜன பல கட்சியின் வேட்பாளர்களான தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் , பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார த

முஸ்லிம்களை அரை மணி நேரத்தில் அழித்து விடுவோம்=



இந்த நாட்டு முஸ்லிம்களை அரை மணி நேரத்தில் அழித்து விடுவோம் என பொலிசாரை வைத்துக்கொண்டே கூறியவரை அரசாங்கம் இன்னமும் கைது செய்யாமை நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான நம்பிக்கைகையை கேள்விக்குறிக்குள்ளாக்கியுள்ளது என முஸ்லிம் உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற போது அவர் மேலும் கூறியதாவது,
கடந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் முஸ்லிம்கள் மிக மோசமாக அவமானப்படுத்தப்பட்டதன் காரணமாகவும், அவ்வாறான செயல்களில் ஈடுபட்டோர் விடயத்தில் அரசாங்கம் நியாயமான நடவடிக்கைகள் எடுக்காததன் காரணமாகவுமே 98 வீதமான முஸ்லிம்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கெதிராக வாக்களித்தார்கள். ஆனால் இனங்களுக்கிடையில் நீதியையும், சமத்துவத்தையும் உருவாக்கித்தருவோம் என ஆட்சிக்கு வந்த நல்லாட்சி தனது ஒருவருடமும் எட்டு மாதங்களுக்குள்ளும் முஸ்லிம்களுக்கெதிரான இனத்துவேச வார்த்தைகளை கொட்டித்தீர்ப்போர் விடயத்தில் அசமந்தமாக இருப்பதன் மூலம் மஹிந்த அரசும் இந்த அரசும் ஒன்றுதான் என்பதையே மக்களுக்கு புரிய வைத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அரசில் தென்னிலங்கை முஸ்லிம்கள் ஓரளவு பாதிப்படைந்தாலும் அவர் பயங்கரவாதத்திலிருந்து முஸ்லிம்களை காப்பாற்றியவர் என்ற வகையில் வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய உதவி செய்தவர். அப்படியிருந்தும் அவரது ஆட்சியில் முஸ்லிம்கள் மிக மோசமான வார்த்தைப’;பிரயோக அவமானப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டதால் யுத்த வெற்றியையும் மறந்து முஸ்லிம்கள் அவரை எதிர்த்து இந்த அரசுக்கு ஆதரவளித்தனர். இந்த நிலையிலும் இந்நாட்டு முஸ்லிம்களை அரை மணி நேரத்தில் அழித்தொழிப்போம் என கூறியவர் இன்னமும் கைது செய்யப்படாமை பாரிய கேள்விகளை உருவாக்கியுள்ளதுடன் மஹிந்த விடயத்தில் தவறிழைத்து விட்டோமோ என முஸ்லிம்களை சிந்திக்க வைத்துள்ளது.
இத்தகைய இனவாதிகள் பின்னால் மஹிந்த சார்பானவர்கள் இருப்பதாக சொல்லி அரசு தப்பிக்க முடியாது. அவ்வாறு இருந்தால் மிக இலகுவாக இவர்களை கைது செய்ய முடியும். முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ போன்றோரையே கைது செய்ய முடிந்த அரசுக்கு முஸ்லிம்களை ஒழிப்போம் என பகிரங்கமாக சொல்லும் சாதாரண இனவாதியை கைது செய்ய முடியாதா?
ஒரு சமூகத்தை தண்டிப்பதாயின் அச்சமூகம் பற்றிய பொய்யையும், வெறுப்புணர்வையும் ஊடகங்கள் வாயிலாக முதலில் செய்து அழிப்புக்குரிய நியாயங்களை தமது தரப்பில முதலில் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே சர்வாதிகார நாடுகளின் நடைமுறையாக இருக்கின்றது. இப்படித்தான் ஈராக்கில் சத்தாம் ஹ{சைன் பற்றி மேலைத்தேய நாடுகளின் பொய்ப்பிரச்சாரங்களை உருவாக்கி பின்னர் அமெரிக்கரின் தாக்கதலுக்கு நியாயம் கற்பிக்கப்பட்டது.

அதே போன்று இலங்கை முஸ்லிம்களை தாக்கு முன் அவர்கள் பற்றிய மோசமான, இனத்துவேச வார்த்தைகளை பகிரங்கமாக விதைப்பதன் மூலம் தாக்குதலுக்கான நியாயத்துக்கான வழிகளை உருவாக்குகிறார்களா என்றும் அதற்குரிய வாய்ப்புக்களை மைத்திரி ரணில் அரசம் செய்கின்றதா என்ற கேள்வி பலமாக எமக்கு எழுகின்றது.
ஆகவே பல நாட்கள் கடந்தும் இன்னமும் மேற்படி நபர் கைது செய்யப்படாமல் இருப்பது நல்லாட்சிக்கு அழகல்ல என்றும் உடனடியாக இவரை கைது செய்து நீதி மன்றத்தில் நிறுத்த பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உலமா கட்சி அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறது என முபாறக் மௌலவி மேலும் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய