Skip to main content

சாய்ந்தமருதில் களைகட்டிய கலைஞர்களின் கரவாகுச் சந்தி!















-எம்.வை.அமீர்-

கரவாகு கலை இலக்கியச் சந்தியின் தொடக்க நிகழ்வும், முதலாவது அமர்வும் 2016-08-27 ஆம் திகதி சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் காரவாகுச் சந்தியின் ஸ்தாபகர் கவிஞர் எஸ். ஜனூஸ் தலைமையில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வுக்கு தென்கிழக்கின் மூத்த இலக்கிய கர்த்தாக்களும், கவிஞர்களுமான பாலமுனை பாரூக், ஆசுகவி அன்புடீன்,தீரன் ஆர்.எம்.நௌஷாத் ,கலாபூஷணம் கே.எம்.ஏ.அஸீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்விற்கு அதிதியாக கவிஞரும் எழுத்தாளருமான முபாரக் அப்துல் மஜீத் கலந்து சிறப்பித்தார்.
ஊடக அதிதியாக சிரேஷ்ட ஊடகர் எம்.வை.அமீர் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக Image Gate Digital Printing நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் முஹம்மத் மபாஸ் கலந்து கொண்டார்.
கரவாகுச் சந்தி கலை இலக்கிய செயற்பாடுகள் இறை துதியுடன் ஆரம்பமானது. இதன் அறிமுகம் மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றி எஸ்.ஜனூஸ் விளக்கமித்தார். கரவாகுச் சந்தியின் எதிர்கால செயற்பாடுகள், நகர்வுகள் பற்றிய ஆலோசனைகள், கருத்துக்கள் பொது வெளி உரையாடலுக்கு விடப்பட்டது. இவ்வுரையாடலில் பாலமுனை பாரூக், ஆசுகவி அன்புடீன்,றியாஸ் குரானா ஆகியோர் பங்கு பற்றி ஆக்கபூர்வமான கருத்துக்களை முன் வைத்தனர். இலக்கியத்தின் பல்வேறு கூறுகள் பேசப்படுவதுடன், நல்ல நூல்களை பரிந்துரைத்தல்,நூலாய்வுகளின் தேவைகள் பற்றியும் இவ்வுரையாடலில் உணரப்பட்டது.
இதன் பின்னர், அண்மையில் மறைந்த தென்னிந்திய கவிஞர்களான நா.முத்துக்குமார்,குமரகுருபரன்,பஞ்சு அருணாச்சலம் ஆகியோரை நினைவு கூறும் உரையை எழுத்தாளர்,விமர்சகர் அப்துர் ரஸாக் நிகழ்த்தினார்.
சமகால இலக்கிய உரையாடல் எனும் தலைப்பில் இலக்கிய ஆய்வாளர்களான சிராஜ் மசூர், ஜெஸ்மி எம். மூஸா ஆகியோர் பேசினர். சிராஜ் மசூர் பாவலர் பஸீல் காரியப்பர் பற்றியும், அவர் படைப்புகளின் கனதி பற்றியும் சிறு விளக்கமளித்தார்.
இன்றைய கரவாகுச் சந்தியின் கவியரங்கத்தில் தீரன் நௌஷாத், கலைப்பிறை வஹாப்தீன், Dr.நாஹூர் ஆரீப், நபீஸா மபாஸ், நூராணியா,காத்தான்குடி எம்.ரீ.எம்.யூனூஸ், பாலமுனை முபீத், தெ.கி.ப. மாணவி- நுவரெலியா ரூமி ரிசானா, மருதூர் நூராணியா ஆகியோர்  கலந்து சிறப்பாக கவி பாடினார்கள்.
இலக்கிய ஆர்வலரும், பாடகருமான அமீர் முஹம்மத் 'கப்பலுக்கு போன மச்சான்' பாடலை இரு குரல்களில் அருமையாக பாடினார். கவிஞர் றியாஸ் குரானாவின் மூன்று ஹாஷ்யங்கள் சபையை குதுகலிக்கச் செய்தன.
கரவாகுச் சந்தியின்  இன்றைய முதல் அமர்வில் ஏனைய பங்காளர்களாக கவிஞர்களான மருத நிலா நியாஸ், எழுகவி ஜெலீல், பொத்துவில் கிராமத்தான் கலீபா, மருதமுனை ஜமீல்,சின்னப் பாலமுனை முஹா,அக்கரைப்பற்று நாளீர், இமாம் அதனான், இறக்காமம் பர்ஸானா றியாஸ், பாடகர் ஏ.எம்.றியாஸ், ஹிஷாம் முஹம்மத்,
அட்டாளைச்சேனை நிஸ்ரி ஆகியோருடன் தெ.கி.ப. தமிழ்ச் சங்கத் தலைவர்,கவிஞர்  றிழ்வான், மற்றும் அதன் மாணவிகளும் கவிதாயினிகளுமான ஏ.சப்றா, ஏ.எஸ்.எப்.மபாஸா,நித்யா ஆகியோருடன் இலக்கிய ஆர்வலர்களும் வருகை தந்தனர்.
கரவாகுச் சந்தியின் முதல் அமர்வின் நிகழ்ச்சிகளை கவிஞர் உவைஸ் முஹம்மத், சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் உளவளத்துணை உத்தியோகத்தர் எச்.எம்.எம். ஹப்ராத், ஆஷிக் முஹம்மத் ஆகியோர் மேற்கொண்டனர். அடுத்த கரவாகு இலக்கியச் சந்தி செப்டெம்பர் 24 ஆம் திகதி இடம்பெறவிருக்கிறது. அது பற்றிய மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

Comments

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.  தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்

Sri Lanka COSMI Founder President appointed to London’s Peace Institute

The Founder President of Sri Lanka’s  Confederation of Micro, Small and Medium Industries (COSMI) has been appointed as the Co-Chairperson of the   London based Global Peace Institute (GPI)   which conducts interdisciplinary research in several thematic fields including international relations and politics. By this high profile appointment made on 15 January, GPI seeks COSMI  Founder President Nawaz Rajabdeen’s  contributions to improve its training and research efforts. GPI is a think tank run by the UK based Global Peace Ins. (GPI) CIC, an independent non-profit, non-governmental organization. GPI works for global peace and resilience through peace education, dialogue, training, creating awareness and research. COSMI  Founder President Rajabdeen, as an honorary member, is also tasked by GPI to  promote its programs, add value to research work, and also will be required to attend various GPI events. “I am thankful to GPI for enlisting me for their ongoing and vast efforts” sa

மைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.

சிறுபான்மையினரின் வாக்குகளே பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் ! சஜீத் − ரணில் பிரச்சினை கூட்டனிக்கு பாதிப்பில்லை !! நான் நிரபராதி என்பதை சிங்கள மக்கள் உணர்வர் !!! ஆட்சியில் இணையுமாறு அழைப்பு வந்தால் தீர்மானிக்கலாம் !!!! அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி.... அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...; கேள்வி: தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பதில்: ஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவ