Skip to main content

எம் பி ப‌த‌விக்காக‌ அதுர‌லிய‌ தேர‌ரும் ஞான‌சார‌வும் மோத‌ல்.

 பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் . இவ்விடயத்தில் கட்சி மட்டத்தில் எவ்வித தீர்மானத்தையும் எடுக்க முடியாது . ஞானசார தேரரும் , அத்துரலிய ரத்ன தேரரும் ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்திற்காக செய்துகொண்ட ஒப்பந்தங்கள் ஏதும் கட்சிக்கு தெரியாது என அபே ஜனபல வேகய கட்சியின் தலைவர் சமன் பெரேரா தெரிவித்தார் .  அபேஜன வேகய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் குறித்து எழுங்துள்ள முரண்பாடு குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் . அவர் மேலும் குறிப்பிடுகையில் , கடந்த வருடம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் அபேஜனபல வேகய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகளுக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் ஒதுக்கப்பட்டது . அமைய இந்த ஆசனத்திற்கு அபேஜன பல வேகய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் விமல் திஸ்ஸ தேரர் , அபே ஜன பல கட்சியின் வேட்பாளர்களான தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் , பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார த

புள்ளைகள அவசரமா டொக்டருக்குக் காட்டுங்கோ

குடும்பம் ஒரு கதம்பம்

“ஆ…ஆ..ஓ….ஓ…..யெஸ்..யெஸ் நானும் அதத்தான் நெனச்ச”

“ஊட்டுக்குள்ள வார. ஸலாமுமில்ல, ஒன்டுமில்ல. எந்த நாளும் ஆ..ஆ..ஓ..ஓ..இதுதான் கூத்து. ஃபோன்ல பேசிப்பேசி வார, பேசிப்பேசிப் போற.”

“பரீதா! என்ன நீங்க ஒரே தனியப் பேசுற?”

“வேற என்ன செய்ய? நீங்க எந்த நேரமும் ஃபோன்ல. நான் அடுத்தூட்டு மனிசனோட பேசிக்கொண்டிருக்கவா?
தனியத்தான் பேசோணும்”

“சரி,சரி! வந்த ஒடனே கொற சொல்லத் தொடங்க வேணாம்! நீங்க சூடாகாம தண்ணியச் சூடாக்கினா டீயாவது குடிக்க ஏலும்”

“பரீதா, கோவிக்காம வேற டீ ஊத்தித் தாங்களேன்! டீ ஆறிட்டுது”
“ஆறாமல் இருக்குமா? டீ ஊத்திப் பத்து நிமிசம். இனி நான் டீ ஊத்தித் தர மாட்டேன். ஓங்களுக்கு நான் வைஃப், ஆனா, ஃபோன்தான் லைஃப்”

“மாறி மாறிக் கோல் வாரதுக்கு நான் என்ன செய்ய பரீதா? மனிசருக்கு என்னோட பேச வேணாம் என்டு சொல்லவா?”
“பொலம்பாம இரிங்கோ! டீ ஊத்திக் கொண்டு வாரன்”

“பரீதா! எனக்குச் சொல்லிச் சொல்லி நீங்களும் என்னத்த ஃபோனக் கிண்டிக்கொண்டிருக்கிற?”
“கொஞ்சம் சும்மா இரிங்களேன்! இனாயா whatsappல நல்ல ரெஸிபியொன்டு போட்டிருக்கி. பாத்துக்கொண்டா டின்னருக்குச் செய்ய ஏலும்”

“நீங்க எனக்கு ஏசினத்துக்கு, ஒங்கட வாழ்க்கையும் ஃபோனோடதான்! ம்… இ;ப்பவெல்லாம் புள்ளைகளக் காணக்கெடைக்கிறதே இல்ல. ரொஷானாவக் கொஞ்சம் கூப்பிடுங்கோ!”

“ரொஷானா ரூம்ல, கதவு லொக். எத்தின முற தட்டிப் பாத்திட்டன். பேசுற சத்தம் கேக்குது. ஆனா கதவத் தொறக்கிறா இல்ல”
“மறுபடி தட்டிப் பாருங்கோ!”

டொக்..டொக்
“என்ன மமி இது ஒரே வந்து அலட்ற!”

“எத்தின முற தட்டின! ஏன் கதவத் தொறக்காம இருந்த?”

“மமி, நான் ரீமாக்கு வொய்ஸ் மெஸேஜ் ஒன்டு அனுப்பப் பேசிக் கொண்டிருந்த. அந்த மாதிரி நேரத்துல நீங்க வந்து அலட்ட வேணாம்   மமி! நீங்க கதவு தட்டின சத்தமும் சேந்து பெய்த்திருக்கும்”

“சரி, டடா எத்தினயோ நாளா புள்ளகளோட பேசக் கெடைக்கல்லையாம். இப்பவாவது வாங்கோ!”

“சாட்டரொன்டு! எனக்கேலா இப்ப வர. நான் பிஸி!”
“நீங்க எப்பதான் பிஸியில்லாத? ஊருலகத்தில உள்ள எல்லாரோடயும் பேசுற,ஊட்டுல உள்ளவங்களோட பேசுறல்லயா!”
“எங்கட இன்ட்ரஸ்ட் எல்லாம் ப்ரென்ட்ஸுக்குத்தான் தெரியும். ஒங்களுக்கெல்லாம் அது வெளங்காது. மமி,எனக்கு பேசிக் கொண்டிருக்க ஏலா. ஸபியா instagramல அவள் இன்டைக்கு எடுத்த 15 செல்ஃபி அனுப்பியிரிக்கி. இப்ப நான் இன்டைக்கு எடுத்ததுகள அனுப்ப வேணும். அதுக்குப் பொறகு நேரமிருந்தா வாரன்”
“யா ரப்பே! இதென்ன அநியாயம்! உம்மா,வாப்பாவோட பேசவும் புள்ளைகளுக்கு நேரமில்ல”

“மகள் பரீதா! கொஞ்சம் வாங்களேன்!”
“ஏன் உம்மா? என்ன நடந்த? ஏன் அழுது மொகமெல்லாம் வீங்கி?”
“அந்த மனவருத்தத்த எப்பிடிச் சொல்ல மகள்? நீ பாவம்!”
“என்ன நடந்ததென்டு சொல்லுங்க உம்மா! எனக்கு வெளங்குதில்ல”

“மகள், புள்ளைகளக் கொஞ்சம் அவசரமா டொக்டருக்குக் காட்டுறது நல்லம். கொஞ்சம் மூளக் கோளாறு போல இரிக்கி. எனக்கு சரியான மனவருத்தம் மகள்”
“என்ன உம்மா சொல்ற? அப்பிடியொன்டும் இல்லம்மா!”

“இல்லாம என்ன! நீ கணக்கெடுக்காம இருந்தாலும் நான் எல்லாம் கவனிச்சுக்கொண்டுதான் வாரன். இன்டைக்கு வெள்ளன அவள் ரொஷானா கைய நீட்டி, அதுல ஃபோன வெச்சிக் கொண்டு பே என்டு நாக்க வெளிய போட்டாள், மறுபடி கண்ண உருட்டினாள்பொறகு தொப்பென்டு கீழவிழுந்து, ஃபோன அப்பிடியும் இப்பிடியும் திருப்பினாள். பொறகு ஓடிப் பெய்த்து ப்ரிஜ்ஜக் கட்டிப் புடிச்சிக் கொண்டாள். அதுக்குப் பொறகு ப்ரிஜ்ஜத் தொறந்து தக்காளிக்கா ரெண்ட எடுத்துத் தலைல வச்சிக்கொண்டாள். அந்த ஃபோன அப்பிடியும் இப்பிடியும் திருப்பி என்னவோ செஞ்சி செஞ்சிதான் இந்தக் கூத்தெல்லாம் போட்டாள்”

“இப்ப எனக்கு வெளங்குது உம்மா! அதுக்கு நீங்க அழத்தேவல்ல!”

“எப்பிடிப் புள்ள அழாம இரிக்கிற? நேத்து அவன் அஷ்ரபும் இதே மாதிரிதான்! கையில ஃபோன வச்சிக் கொண்டு, கையால கொண்டைய என்னமோ செஞ்சான், பொறகு ஹீ என்டு பல்லக் காட்டினான்பொறகு தலகீழா நின்டான், மொகத்தச் சுருட்டினான். ஓடிப்பெய்த்து தூணக்கட்டிப் புடிச்சான்என்னமோ எல்லாம் செஞ்சான். ஏன்ட பேரப்புள்ளைகள் ஏன் இப்பிடி மனநோயாளியா மாறியிருக்கிற என்டத யோசிச்சுத்தான் நான் அழுத மகள்”

“உம்மா, இப்ப வந்திருக்கிற பைத்தியமொன்டு செல்ஃபி எடுக்கிறதென்டு அவங்கள அவங்களே போட்டோ எடுக்கிறது. அதுதான் இந்தக் கூத்து”

“ஒனக்கு வெளங்குதில்ல மகள், இது மூளக்கோளாறுதான்! போட்டோ எடுக்கிறதென்டா இப்பிடியா! அழகா உடுத்து, பௌடர் போட்டு, நேரா நின்டுதானே போட்டோ எடுக்கிற”
“அது அந்தக் காலம் உம்மா! இது இந்தக்காலத்துக் கூத்து. கணக்கெடுக்க வேணாம்!”

“புள்ளைகள எத்தினயோ முற கூப்பிட்டுப் பாத்தாச்சி. வாரமாதிரி இல்ல. ஷியாம் ஸ்கைப்ல யாரோடயோ பேசிக்கொண்டிருக்கிற. ஹிஷாம் டுவிட்டரச் செக் பண்ணிட்டு வாராம். ர்யானாக்கு வைபர்ல யாரோடயோ பேச வேணுமாம். வாங்கோ நாங்க சாப்பிட”

அஸ்ஸலாமு அலைக்கும். வாங்கோ ஹஸீனா! மிச்ச நாளைக்குப் பொறகு”

“இது மகனோட பைக்ல எங்கட மாமாட ஊட்டுக்கு வந்த. நீங்க இங்க இரிக்கிறது ஞாபகம் வரவும் அப்பிடியே பாத்திட்டுப் போக வந்த”
“யாரு மமி இது?”
“இது ஏன்ட பெரியப்பாட மருகள்”

“ ஆ..நீங்க ஸஹ்ரான் தானே! ஃபேஸ்புக்ல நான் ஒங்கட ஃப்ரென்ட். தெரியாதா? நான் ரியானா”
“ஆ.. கொழகொழ ரியானா என்ட பேர்ல இருக்கிறது நீங்களா? ஒங்கட தடுமல் இப்ப சொகமா?”
“மகளுக்குத் தடுமல் வந்தது ஒங்களுக்கு எப்பிடித் தெரியும்?”
“நேத்து ரியானா ஃபேஸ் புக்ல போஸ்ட் போட்டிருந்தா, தடுமல் வந்து சரியான அலட்டி, 23முற தும்மல் போன என்டு. அதுக்கு அவட எம்பத்தி ரெண்டு கூட்டாளிமார் ஆறுதல் சொல்லியிருந்தாங்க”
“அதெல்லாத்தையும் நீங்களும் உக்காந்து வாசிச்சீங்களா?”

“ஓ ஆன்டி! சரியான இன்ட்ரஸ்ட். ரெண்டு நாளைக்கு முந்தி 78 தலமுடி கொட்டிட்டுது என்டு கொட்டின தல முடிய போட்டோ எடுத்துப் போட்டிருந்தா. அதுக்கு நூத்துக்கும் மேல கூட்டாளிமார் அனுதாபம் தெரிவிச்சிருந்தாங்க. போனகெழம கத்திரிக்கத்தோல் தொண்டையில சிக்கின என்டு, அத வெளிய எடுத்து போட்டோ எடுத்துப் போட்டிருந்தா”

“ஸஹ்ரான்! நீங்களும் போன கெழம போட்டிருந்ததானே எக்ஸாமுக்குப் படிக்க புக்கக் கையில எடுத்த ஒடனே 18முற கொட்டாவி போன என்டு. மொகத்தக்குப் பூச புதுசா வாங்கின க்ரீமுக்கு சொரிச்சல் வந்த என்டு போட்டிருந்த…இப்ப சரியா?”

“அதெல்லாம் சரி. நீங்க ஆசையா வாங்கிக் கொண்டுவந்த ட்ரெஸ் இறுக்கமென்டு கவலப்பட்டுப் போட்டிருந்த. மாத்தியெடுத்தா? நானாவோட சண்ட படிச்ச என்டு போட்டிருந்த,இப்ப எப்பிடி?”

“அதெல்லாம் ஒடனே ஷேப். அது சரி ஸஹ்ரான், நீங்க கடைசியாப் போட்டிருந்த நாய அணச்சிக் கொண்டு எடுத்த செல்ஃபி பட்ட…”

“மகன்! நீங்க நாய அணச்சிக்கொண்டு போட்டோ எடுத்தா? ஏய்யா..யார்ட நாய்?”
“அடுத்தூட்டு சிரிசேனட”

“சீய்யா..அது ஒடம்பு முழுக்கப் புண் வந்து அவிஞ்சி…”

“உம்மா, முஸ்லிங்க நாயோட செல்ஃபி எடுக்கிறல்ல. மத்தவங்க எடுத்தாலும் அழகான நாயோட நின்டுதான் எடுப்பாங்க. வித்தியாசமா எடுத்தாத்தான் கூட லைக் கெடைக்கும். அதுக்காக அந்த நாயோட செல்ஃபி எடுத்திட்டு, டிட்டோல் போட்டுக்குளிச்சேன்”

“ஹஸீனா! எங்கட புள்ளைகளுக்கு என்ன நடந்திரிக்கி? வெக்கம்கூச்சமில்ல. ரகசியம் ஒன்டுமில்ல, ஊட்டில நடக்கிறது ஊரு முழுக்கத் தெரியும். எனக்கென்டாத் தல வலிக்குது”

“அதுதான் பரீதா நானும் யோசிக்கிற. எனக்கும் சரி அப்சட். எங்கட புள்ளகளிட வாழ்க்க இப்பிடித்தானா வீணாகுது? இவங்க இப்பிடிப்போனா அடுத்த பரம்பரைய எப்பிடி வளப்பாங்க?”

“மகள், நான் சொன்னதானே புள்ளைகள அவசரமா டொக்டருக்குக் காட்டுங்கோ என்டு…..”

“அவங்கள இல்ல உம்மா, இப்ப எங்களத்தான் காட்ட வேணும். இவங்கட நெலமயப் பாத்து எங்களுக்குப் பைத்தியம் வரும் போல இரிக்கி”
 

 Whatsappil padiththathu.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய