Skip to main content

முஸ்லிம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ளிடையே மோத‌ல்.

  சமூக பற்றில்லா தவத்தை மக்கள் நிராகரித்ததன் விம்பமே இன்றைய அவரின் காட்டிக்கொடுப்புகள்  : முன்னாள் மாகாண சபை உறுப்பினரை தோலுரிக்கும் மு.கா பிரமுகர்  மாளிகைக்காடு நிருபர்  றாபிக்களும், அலி உதுமான்களும் பிறந்த வீரமிகு மண்ணான அக்கரைப்பற்றில் காட்டிக்கொடுப்பிலும், ஈனசெயலிலும் முத்திரை பதித்த ஒருவராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் இருப்பது அக்கரைப்பற்று மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிங்களுக்கும் அவமானமாக உள்ளது. எச்ச சுகபோகங்களுக்காக முஸ்லிங்களையும், முஸ்லிம் நிலபுலங்களையும் காட்டிக்கொடுத்து வங்கரோத்து தனமிக்க அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரை அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்தது போன்று இனியும் நிராகரிப்பார்கள். இவரின் பருப்பு முஸ்லிம் சமூகத்திடம் இனியும் வேகாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார்.  இன்று கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர்களாக இருந்த

முஸ்லிம்கள் மத்தியிலான மோதல்கள் அனாவசியமானவை


இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் சுன்னத்வல் ஜமாஅத் முஸ்லிம்களாக இருந்தும் அவர்கள் மத்தியில் தேவையற்ற வகையிலான பிளவுகள், மோதல்கள் இருப்பதைக் காணலாம்.
சுன்னத்வல் ஜமாஅத் முஸ்லிம் என்றால் அவன் கத்தம், பாத்திஹா, மௌலீத் ஓத வேண்டும், கொடியேற்றம், கந்தூரி கொடுக்க வேண்டும். இவற்றை செய்துவிட்டால் அவன் பூரணமான சுன்னத்வல் ஜமாஅத் முஸ்லிம் என தம்மை சுன்னத்வல் ஜமாஅத்தினர் என அழைத்துக் கொள்ளும் இலங்கை, இந்திய முஸ்லிம்கள் கூறிக் கொள்கின்றனர். இவற்றைச் செய்யாத ஒரு முஸ்லிம் அவன் ஐவேளை தொழுதாலும், நோன்பு பிடித்தாலும், ஹஜ் செய்தாலும், ஸகாத் கொடுத்தாலும் அவன் வஹ்ஹாபி அல்லது சுன்னத்வல் ஜமாஅத் அல்லாத முஸ்லிம் அல்லது வழிகேடன் என இவர்கள் கூறுகிறார்கள்.
அதேபோல் ஒரு முஸ்லிம் ஐவேளை தொழுபவனாக மற்றும் கடமைகளை செய்பவனாக இருக்கும் நிலையில் கலாசாரம் என்ற வகையில் மௌலீத் ஓதுபவனாக, மீலாத் கொண்டாடுபவனாக, கந்தூரி கொடுப்பவனாக இருந்தால் அவன் பித்அத்வாதி, ஷிர்க் செய்பவன் என்றெல்லாம் கூறி அவனை தீண்டத்தகாதவன் போல பார்க்கும் ஏகத்துவவவாதிகளும்  இருக்கிறார்கள். அவனுக்கு பின்னால் நின்று இவர்கள் தொழுவதில்லை, அவர்களின் பள்ளிவாயல்களுக்கும் செல்வதில்லை, அவர்களுடன் இரண்டற பழகுவதுமில்லை என்ற நிலைப்பாட்டில் இவர்கள் வாழ்வதைக் காண்கிறோம்.
இவ்விருசாராரின் நிலைகளையும் பார்க்கும்போது சிரிப்பும் வேதனையும்தான் வருகிறது. கலிமாச் சொன்ன ஒரு முஸ்லிம் ஐவேளை தொழுது ஏனைய கட்டாய கடமைகளையும் செய்வான் என்றால் அவன் கத்தம், மௌலீது, கந்தூரி போன்றவற்றை செய்யாது விட்டாலும் அவன் உண்மையான முஸ்லிம்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அதேபோல் ஒரு முஸ்லிம் ஐவேளை தொழுபவனாக ஏனைய கடமைகளை செய்து கொண்டு அவன் கலாசாரம் என கத்தம் ஓதினால் என்ன, கந்தூரி கொடுத்தால் என்ன, மௌலீத் ஓதினால் என்ன? அவன் முஸ்லிம்தான் என்பதிலும் எத்தகைய சந்தேகமும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
சில ஏகத்துவவாதிகள்; கந்தூரிகளுக்கு அழைக்கப்பட்டால் அல்லது பாத்திஹாவுக்கு அழைக்கப்பட்டால் அங்கு அவர்கள் செல்வதில்லை. சரி, சாப்பாடுதானே! சாப்பிட்டு விட்டாலாவது வரவேண்டியதுதானே என்றால் அதற்கும் போகமாட்டார்கள். கேட்டால் அங்கு சாப்பாட்டுக்கு முன் பித்அத் நடக்கிறது என்பார்கள்.
ஆனால் இதே ஏகத்துவவாதிகளை பிரதமர் அல்லது ஜனாதிபதி சாப்பாட்டுக்கு அழைத்தால் ஓடிப் போய் போளினில் நின்று சாப்பிட்டுவிட்டு வருகின்றனர். அங்கும் சாப்பட்டுக்கு முன் பௌத்த தேரர்கள் ஒரு மூலையில் ‘பன’ ஓதிய பின்தான் சாப்பாடு வருகிறது. அப்படியும் தவ்ஹீத்வாதிகள் சாப்பிட்டுவிட்டு வருகிறார்கள்.
அதேபோல் அறபு நாடுகளின் தூதரகங்கள் தமது தேசிய தினத்தை இலங்கையில் கொண்டாடும் போது அதற்கு அழைக்கப்பட்டால் தவ்ஹீத்வாதிகளின் தலைவர்கள் தமது சொந்தப் பணத்தையும் செலவு செய்து கொழும்புக்குச் சென்று கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிகழ்வுகளில், அந்த நாட்டின் தேசிய கீதத்துக்கான இசை ஒலிபரப்பாகும். எல்லோரும் எழுந்து நின்று சலாம் அடிப்பார்கள். அதேபோல நமது நாட்டு தேசிய கீதத்தின் இசை மட்டும் ஒலிபரப்பாகும். இதற்கும் எழுந்து விரைத்து நிற்பார்கள். பின்னர் சாப்பாடு கிடைக்கும். சாப்பிட்டுவிட்டு வருவார்கள். இத்தகைய இசைகள் பித்அத்தா, ஷிர்க்கா, சுன்னத்தா என்பது பற்றியெல்லாம் யாரும்; ஆராய்வதில்லை. மாறாக அறபுத் தூதுவரின் சாப்பாடு அல்லவா என்பதில் மட்டும்தான் கவனமும் ஆர்வமும் இருக்கும். இதையே சாதாரண ஏழை மகன் செய்தால் குய்யோ முறையோ என்பார்கள்.
ஆனால் ஒரு இலங்கை முஸ்லிமோ மௌலீத் என்ற பெயரில் இசைக் கருவிகள் இன்றி பொருள் கூடபுரியாத அரபு மொழியில் உள்ள ஏதோ புகழ் பாடலை பாடிவிட்டு சாப்பிடுங்கள் என்றால் அது கூடாது என்பதும் அறபு தூதுவர்கள் இசைக்கருவிகளின் இசையை ஒலித்து விட்டு சாப்பாடு தந்தால் வெட்டோ வெட்டு என வெட்டுவதும் என்ன கூத்து என்பது புரியவில்லை. அது ஹறாமான சாப்பாடு இது ஹலாலான சாப்பாடா? அதே போல் முஸ்லிம் காங்கிரசின் இசையுடனான ஆதவன் பாட்டை போட்டு அரசியல் கூட்டம் நடாத்தினால் இவ்விரு சாராரும் முன் வரிசையில் இருப்பர். ஆனால் ஈ எம் ஹனிபாவின் பாட்டு இசையுடன் ஒலித்தால் அது ஹறாம் என்பா. எப்போது நாம் இந்த மடமையிலிருந்து திருந்துவது?
நம்மை பொறுத்தவரை யார் சாப்பாட்டுக்கு அழைத்தாலும் அதில் கலந்து கொள்ளலாம். நபியவர்கள் யூத பெண்மணியின் விருந்தில் கலந்து கொண்டுள்ளார்கள்.
மொத்தத்தில் சுன்னத்வல் ஜமாஅத் என்போரும் தவ்ஹீத்வாதிகள் என்போரும் தம்மைத்தாமே ஏமாற்றிக் கொண்டு அடுத்தவர்களையும் ஏமாற்றுகிறார்கள் என்பது தவிர வேறு எதையும் கூற முடியவில்லை.
ஆக இந்த பிரிவு பெயர்களுக்காய மோதிக்கொள்ளாமல் நாம் முஸ்லிம்கள் என ஒற்றுமை படுவோம்.
-கலாநிதி முபாறக் அப்துல் மஜீத்


Comments

Popular posts from this blog

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்