Skip to main content

Posts

Showing posts from August, 2016

சுதந்திரக் கட்சி முஸ்லிம்களுக்கும் சொந்தம்! கட்சியைப் பலப்படுத்த ஹிஸ்புல்லாஹ் அழைப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு சமூகம் - பிரதேசம் சார்ந்த கட்சியல்ல அது முஸ்லிம்களுக்கும் சொந்தம் எனத்தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இக்கட்சியைப் பலப்படுத்த்தி கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக எதிர்வரும் 4ஆம் திகதி குருநாகலையில் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டுக்கு அதிகளவு முஸ்லிம்கள் பங்கேற்க வேண்டும் எனவும் அழைப்புவிடுத்தார்.  அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:- கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முஸ்லிம்களுக்கு அதிகம் சேவைகளை செய்த கட்சி என்ற வகையில் அதனைப் பலப்படுத்துவதில் முஸ்லிம்களும் அதிகம் பங்களிப்புச் செய்ய வேண்டும். முஸ்லிம்களது உரிமைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசில் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை  எமக்கு இருக்கின்றது. நாங்கள் பல வருடங்களாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வினை இந்த அரசின் கீழ் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் ஜனாதிபதி…

பசஹ் என்ற முறையில் விவாகரத்து பெறும் பெண்ணுக்கு கணவன் நஷ்டஈடு கொடுக்க வேண்டியதில்லை

தனது சொந்த விருப்பத்தின் பேரில் அதாவது பசஹ் என்ற முறையில் விவாகரத்து பெறும் பெண்ணுக்கு கணவன் நஷ்டஈடு கொடுக்க வேண்டியதில்லை என்ற இஸ்லாமிய திருமண சட்டத்தை மாற்ற வேண்டும் என பொதுபலசேனாவை இயக்கும் பின்னணியில் உள்ள நாடுகளின் பண உதவிகளை பெற்றுக்கொண்டு சில முஸ்லிம் பெண்கள் கோருவது இஸ்லாத்தை அவமதிக்கும் செயலாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார்.

கட்சித்தலைமையகத்தில் இது சம்பந்தமாக நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது, ஒரு முஸ்லிம் பெண் தனது சொந்த விருப்பத்தின் பேரில் தனது கணவனை விவாக ரத்து செய்ய முடியும் என்ற உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது என்பதை முதலில் சகலரும் புரிந்து கொள்ள வேண்டும். ஐரோப்பிய பெண்களுக்குக்கூட இந்த உரிமை அண்மைய சில நூற்றாண்டுகளுக்கு முன்பே கிடைத்தது.
அதேவேளை பெண் தனது சொந்த விருப்பின் பேரில் கணவனை விவாகரத்து செய்யும் போது கணவன் அவளுக்கு நஷ்டஈடு கொடுக்கத்தேவை இல்லை என்ற இஸ்லாமிய திருமண சட்டத்தில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. அவை கூட பெண்களினதும் அவர்களின் பிள்ளைகளுக்கும் உதவக்கூடியனவாகும்.
இஸ்லாம் பொதுவாக விவாகரத்தை வ…

எந்தவோர் மாற்றத்திலும் அநீதிஇழைக்க இடமளியோம்.. அமைச்சர் றிசாத்

“ராமர் இந்தியாவில் பிறக்கவில்லை. அவர் ஒரு நபியாக இருக்கலாம்”

மருதூர் ஏ. மஜீத் எழுதிய “ராமர் இந்தியாவில் பிறக்கவில்லை. அவர் ஒரு நபியாக இருக்கலாம்” என்ற நூல் கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்ட போது நூலின் சிறப்பு பிரதி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவிக்கு வழங்கி வைப்பதையும் ருகில் டாக்டர் அப்துல் கையூம், கவிஞர் தாஜ்மஹான், இம்ரான் நய்னார் ஆகியோரை காணலாம்.

சாய்ந்தமருதில் களைகட்டிய கலைஞர்களின் கரவாகுச் சந்தி!

-எம்.வை.அமீர்-

கரவாகு கலை இலக்கியச் சந்தியின் தொடக்க நிகழ்வும், முதலாவதுஅமர்வும் 2016-08-27 ஆம் திகதி சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் காரவாகுச்சந்தியின் ஸ்தாபகர் கவிஞர் எஸ். ஜனூஸ் தலைமையில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வுக்கு தென்கிழக்கின் மூத்த இலக்கியகர்த்தாக்களும், கவிஞர்களுமான பாலமுனை பாரூக், ஆசுகவி அன்புடீன்,தீரன்ஆர்.எம்.நௌஷாத் ,கலாபூஷணம் கே.எம்.ஏ.அஸீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்விற்கு அதிதியாக கவிஞரும் எழுத்தாளருமான முபாரக் அப்துல் மஜீத் கலந்துசிறப்பித்தார்.
ஊடக அதிதியாக சிரேஷ்ட ஊடகர் எம்.வை.அமீர் கலந்துசிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக Image Gate Digital Printing நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் முஹம்மத் மபாஸ் கலந்து கொண்டார்.
கரவாகுச் சந்தி கலை இலக்கிய செயற்பாடுகள் இறை துதியுடன்ஆரம்பமானது. இதன் அறிமுகம் மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றி எஸ்.ஜனூஸ்விளக்கமித்தார். கரவாகுச் சந்தியின் எதிர்கால செயற்பாடுகள், நகர்வுகள்பற்றிய ஆலோசனைகள், கருத்துக்கள் பொது வெளி உரையாடலுக்கு விடப்பட்டது.இவ்வுரையாடலில் பாலமுனை பாரூக், ஆசுகவி அன்புடீன்,றியாஸ் குரானா ஆகியோர் பங்குபற்றி ஆக்கபூ…

தாhய்லாந்து பயணமாகிறது நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உதைபந்தாட்ட அணி

இலங்கையின் பல்வேறு அரச திணைக்களங்களிடையேயான உதைபந்தாட்டப்போட்டியில் ஊ பிரிவில் இடம்பிடித்த இலங்கை நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊழியர் அணியினர் லீக் போட்டிகள் நொக் அவுட் போட்டிகள் மற்றும் அணிக்கு ஏழு பேர் கொண்ட போட்டிகள் அணைத்திலும் வெற்றி பெற்று தாய்லாந்து நாட்டில் இடம்பெறவுள்ள உதைபந்தாட்டப் போட்டிகளுக்காக இந்த வாரம் பயணமாகவுள்ளார்கள்.பயணமாகவுள்ள இந்த அணியில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த ஏழு பேர் உள்ளடங்கியிருக்கின்றமை பெருமைக்குரிய விடயமாகும்.அத்தோடு இவ்வணியில் இடம்பிடித்துள்ள பெரும்பாலான வீரர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊழியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வணியில் இடம்பிடித்து பெருமை சேர்த்துள்ள காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊழியர்களை நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சினுடைய இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் அவர்கள் சந்தித்து தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதோடு இவ்வணியினரின் பயண ஒழுங்குகள் தொடர்பான கலந்துரையாடலையும் மேற்கொண்டார்கள்.

கிழக்கில் சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்த ஹிஸ்புல்லாஹ்விடம் விசேட பொறுப்பு

கட்சித் தலைவர், செயலாளர் ஆலோசனை +++++++++++++++++++++++++++++++++++++++++++++
கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துவதற்கான விசேட பொறுப்பு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சிப் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் கையளித்துள்ளனர்.  இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கருத்துத் தெரிவிக்கையில்,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாடு எதிர்வரும் 4ஆம் திகதி குருநாகலையில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக செய்து வரப்படுகின்ற நிலையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் சுமார் 300 பேர் வீதம் ஆயிரக்கணக்கானவர்கள் அதில் கலந்து கொள்ளவுளளனர்.  கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கரங்களை பலப்படுத்தி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலமான சக்தியாக மாற்றி எதிர்காலத்தில் சகல சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கட்சியாக மாற்றுவதற்கான அன…

மக்கள் காங்கிரசின் தேர்தல் திருத்தச்சட்ட வரைபு

வடக்கு - கிழக்கு இணைப்புக்கு எதிராக முஸ்லிம் கட்சிகள் ஒன்றினைய வேண்டும்

சமாதானத்துக்கான தேசிய இளைஞர் முன்னணி பகிரங்க அழைப்பு
வடக்கு – கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியாகவுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தைப் பிரதிநித்துவப்படுத்தும் 21 முஸ்லிம் எம்.பிக்களும் இதற்கு கூட்டு எதிர்ப்பினை வெளியிட வேண்டும் என சமாதானத்துக்கான தேசிய இளைஞர் முன்னணி பகிரங்க அழைப்பைவிடுத்துள்ளது.  சமாதானத்துக்கான தேசிய இளைஞர் முன்னணியின் தலைவர் மொஹமட் நிப்றாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்;டுள்ளார். அவர் அதில் மேலும் கூறியுள்ளதாவது:- இலங்கையில் முஸ்லிம்கள் கிழக்கு மாகாணத்திலேயே செரிந்து வாழ்கின்றனர். இந்த மாகாணத்திலே முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுக்கு நிகரான உரிமைகளைப் பெற்றும் வாழ்கின்றனர். இருந்த போதிலும் கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்கள் தற்போதும் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.  இளைஞர் - யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புக்கள் இங்கு குறைவாக காணப்படுகின்றது. ஆதலால் தலைநகரை நோக்கியே அதிகமானவரது கவனம் திரும்பியுள்ளது. இவ்வாறான நிலையில் கிழக்கு மண்ணில் மேலும் பல நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.  அந்தவகையில் மஹிந்த ராஜப…

கொலேஜ் ஒப் ஹெல்த் சயன்ஸ். மருத்துவக் கல்லூரியின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு,

மினுவாங்கொடையை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் அட்டாளைச்சேனை கொலேஜ் ஒப் ஹெல்த் சயன்ஸ். மருத்துவக் கல்லூரியின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, (27)சனிக்கிழமை கல்லூரி மண்டபத்தில், கல்லூரி வேந்தர் டாக்டர்.  எம்.எச்.எம் முனாஸிக் தலைமையில்நடைபெற்றது. இதன் போது ஆயுர்வேத மருத்துவ மாணவர்களுக்குகான மாதாந்த பரீட்சை இடம்பெற்றதுடன், பெற்றோர்களின் நலன்கருதி அடிப்படை ஆங்கிலக்கல்வி பகுதி ஒன்றைப் பூர்த்தி செய்த  பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
டாக்டர்  எம்.எச்.எம்.முனாஸிக்,பணிப்பாளர் டாக்டர் றிமாஸா,முகாமையாளர் சுபியான் ஆகியோரினால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
படங்கள்:ஐ.ஏ.காதிர் கான்.

அம்பாறை மாவட்ட மக்களுக்கான நடமாடுடம் சேவை தொடர்பாக அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் கூட்டம்

அம்பாறை மாவட்ட மக்களின் பல்வேறு குறைபாடுகளையும் தீர்த்து வைக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் நகர திட்டமிடல் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான றவூப் ஹகீம் அவர்களின் பணிப்புரைக்கமைய நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சும் கிழக்கு மாகாண முதலமைச்சும் இணைந்து பொதுமக்களுக்கான நடமாடும் சேவையொன்றினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பில் அம்பாறை மாவட்டத்திலுள்ள அரச உயரதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் கூட்டமானது அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் கிழக்கு மாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் இந்நடமாடும் சேவையின் ஏற்பாட்டாளராரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சினுடைய இணைப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் ஆகியோரின் இணைத்தலைமையில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்.எம்.ஐ.அமீர்தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உதவிப் பொது முகாமையாளர் நசீல் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்.கே.முருகாணந்தம் உள்@ராட்சி உதவி ஆணையாளர் எம்.றாப…

அமெரிக்க STR நிறுவனத்துடன் மட்டக்களப்பு கெம்பஸ் பேச்சு

மட்டக்களப்பு கெம்பஸில் அறிமுகப்படுத்தப்படவுள்ள உல்லாசப் பயணத்துறை,  முகாமைத்துவப் பட்டதாரி பயிற்சிகள் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு கெம்பஸ் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கும், அமெரிக்காவைத் தளமாகக்கொண்டு இயங்கும் STR  நிறுவனத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்குப் பொறுப்பான பணிப்பாளர் ஜெஸ்பர் பாம் குயிட்ஸுக்கும் இடையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.  சர்வதேச ரீதியில் பல நாடுகளில் ஹோட்டல் மற்றும் உல்லாசப் பயணத்துறைகள் தொடர்பான விசேட பயிற்சிகளை வழங்குகின்ற அமெரிக்காவைத் தளமாகக்கொண்டு பல நாடுகளில் இயங்குகின்ற  STRநிறுவனத்துடன் மட்டக்களப்பு கெம்பஸ் இணைந்து இலங்கையில் இருக்கின்ற மாணவர்களுக்கு உல்லாசத்துறை  ஹோட்டல்துறை மற்றும் கப்பல் வேலைகள் தொடர்பான விசேட பயிற்சி ஒத்துழைப்புகளை வழங்குவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.  அத்துடன்,  மட்டக்களப்பு கெம்பஸில் அமைக்கப்படவுள்ள உல்லாசத்துறை தொடர்பான பீடத்தை நவீன வசதிகள் கொண்டதாக அமைப்பது தொடர்பாகவும், சர்வதேச  STR  நிறுவனத்தின் இலங்கைப் பிரதநிதியாக மட்டக்…

கோவிலுர் செல்வராஜனின் இரு நூல்களின் அறிமுகவிழா நாளை

நாடறிந்தகலைஞர்கோவிலூர்செல்வராஜனின்இருநூல்களின்அறிமுகவிழாநாளை 27ஆம்திகதிசனிக்கிழமைமாலை 5.00மணிக்குகொழும்புதமிழ்ச்சங்கமண்டபத்தில்தினகரன்வாரமஞ்சரிபிரதமஆசிரியர்தே.செந்தில்வேலவர்தலைமையில்நடைபெறவுள்ளது. 'இல்லாமல்போனஇன்பங்கள்' எனும்கட்டுரைத்தொகுப்புநூலும் 'ஊருக்குதிரும்பணும்'எனும்சிறுகதைத்தொகுப்புநூலும்வெளியிட்டுவைக்கப்படவுள்ளது. பிரதமஅதிதியாகநாடறிந்தபிரபலதிறனாய்வாளர்கே.எஸ்.சிவகுமாரன்கலந்துசிறப்பிக்கவிருக்கின்றார் . நூல்நயவுரைகளைஎழுத்தாளர்உடுவைதில்லைநடராஜாமற்றும்பவானிமுகுந்தன்ஆகியோர்நிகழ்த்துவர். லண்டனில்வாழும்திருக்கோவிலைச்சேர்ந்தகோவிலுர்செல்வராஜன்இதுவரை 10நூல்களைஎழுதிவெளியிட்டுள்ளார். தற்சமயம்இலங்கைவந்துள்ளஅவரைதேசியதொலைக்காட்சிஅலைவரிசைகள்பேட்டிகண்டுகௌரவித்துவருகின்றன. இலங்கைவானொலிஇலங்கைதொலைக்காட்சிஆகியவற்றில்முன்னர்சேவையாற்றியகோவிலுர்செல்வராஜன்சிறந்தஎழுத்தாளராவார்.