Skip to main content

වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි

   වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි ( ( Photos ) මවිබිම දැන් ම තාරක සම්මාන්  කොළඹ , වේල්ල වීදියේදී ගමන් මල්ලක දමා තිබියදී සොයාගත් හිස නොමැති කාන්තා මළ සිරුර කුරුවිට , තෙප්පනාව ප්‍රදේශයේ පදිංචි 30 හැවිරිදි අවිවාහක කාන්තාවකගේ බවට හඳුනාගෙන තිබේ .  නියෝජ්‍ය පොලිස්පති , පොලිස් මාධ්‍ය ප්‍රකාශක අජිත් රෝහණ මහතා සඳහන් කළේ , අදාළ මළ සිරුර ඩී.එන්.ඒ. පරීක්ෂණයක් සඳහා යොමු කර එය එම කාන්තාවගේ ද යන වග තහවුරු කරගැනීමට කටයුතු කරන බවය . එමෙන් ම , අදාළ ගමන් මල්ල රැගෙන ආ සැකකරු පිළිබඳව ද තොරතුරු අනාවරණය කරගෙන ඇති අතර පොලිස් මාධ්‍ය ප්‍රකාශකවරයා සඳහන් කළේ . සැකකරු බුත්තල පොලිසියට අනුයුක්තව සේය කරන නිවාඩු ලබා සිටි උප පොලිස් පරීක්ෂකවරයෙකු බවය . එම කාන්තාව සමග ඇති කරගත් අනියම් සම්බන්ධතාවයක් හේතුවෙන් ඇති වූ ප්‍රතිඵලයක් ලෙස මෙම ඝාතනය සිදුව ඇති අතර , සැකකරු අත්අඩංගුවට ගැනීමට විශේෂ පොලිස් කණ්ඩායම් යොදවා ඇති බව ද පොලිස් මාධ්‍ය ප්‍රකාශකවරයා සඳහන් කළේය . සැකකරු බඩල්කුඹුර ප්‍රදේශයේ පදිංචිකරුවෙක් බවට පොලිසිය හඳුනා ගෙන තිබේ . කෙසේ වෙතත් , මේ වන විට සැකකරු නිවසින් බැහැරට ගොස් ඇතැයි වාර

கிழக்கு மக்களுக்கு மட்டும் ஒரு கட்சி தேவை என்பதோ, முஸ்லிம்களின் தலைவர் கிழக்கை சேர்ந்தவராக மட்டுமே இருக்க வேண்டும் என்றோ நாம் சொல்வதில்லை

கிழக்கு மக்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை ஒதுக்கி விட்டு உலமா கட்சி கூட்டிணைந்துள்ள அ இ மக்கள் காங்கிரஸ் தலைமையை பலப்படுத்தி அதற்கொரு சந்தர்ப்பம் கிழக்கில் வழங்க வேண்டும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

கட்சித்தலைமை காரியாலயத்தில் நடைபெற்ற உலமாக்களுடனான சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

ரஊப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் இந்த பதினாறு வருடங்களுள் கிழக்கு முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல அதற்கு வெளியில் உள்ள மக்களுக்கும் பெரிதாய் எதையும் சாதிக்கவிலலை என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. இதற்கு அக்கட்சியின் ஆரம்ப கால உறுப்பினர்களே சாட்சியாகும்.  முஸ்லிம் காங்கிரசின் தலைமை கிழக்குக்கு வேண்டும் என சொல்லும் நீங்கள் அ இ மக்கள் காங்கிரசின் தலைமை கிழக்குக்கு வேண்டும் என ஏன் கேட்பதில்லை என சிலர் எம்மை கேட்கின்றனர்.

முதலில் இவர்கள் தெளிவாக ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் மு காவின் தலைமை கிழக்குக்கு வேண்டும் என்பது உலமா கட்சியின் கோரிக்கை அல்ல. மாறாக கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகளை விற்று பிழைக்கும் முஸ்லிம் காங்கிரசை கிழக்கு மக்கள் குப்பையில் தூக்கி போட வேண்டும் என்றே உலமா கட்சி சொல்லி வருகிறது.

ஆனாலும் கிழக்கு மக்கள் தமது கிழக்கை தலைமையாகவும், தளமாகவும் கொண்ட கட்சியை பலப்படுத்தி அந்தக்கட்சி தேசிய தலைமைகளுடன் இணைந்து கூட்டாக செல்வதன் மூலம் மட்டுமே கிழக்குக்கான விசேட சலுகைகள், உரிமைகள் போன்ற அரசியல் வெற்றிகளை பெற முடியும் என்பதே எமது கட்சிக்கொள்கையாகும். இந்த உண்மையின் ஒரு பக்க உணர்வே கிழக்கின் எழுச்சியாகும்.

மேலும் கிழக்கு மக்களுக்கு மட்டும் ஒரு கட்சி தேவை என்பதோ, முஸ்லிம்களின் தலைவர் கிழக்கை சேர்ந்தவராக மட்டுமே இருக்க வேண்டும் என்றோ நாம் சொல்வதில்லை. ஆனால் கிழக்குக்கு வெளியிலான அரசியல் தலைமகள் எவரும் கிழக்கு முஸ்லிம்களின் தனியான உரிமைகள் விடயத்தில் இது வரை கவனம் செலுத்தவுமில்லை, எதையும் பெற்றுத்தரவுமில்லை என்பதே எமது குற்றச்சாட்டு. இதனை ஹக்கீமின் பதினாறு வருட தலைமை மிகப்பெரிய உதாரணமாகும்.

ஆனாலும்  அ இ மக்கள் காங்கிரஸ் இன்னமும் பெரும்பான்மையான கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகளை பெறாத நிலையிலும் கிழக்கு மக்கள் விடயத்தில் அதிக கரிசணயுடன் செயற்படுவதை நாம் காண்கிறோம். அ இ ம காங்கிரஸ், கிழக்கில் முஸ்லிம் காங்கிரசை விட அதிக வாக்குகள் பெற்று அதன் பின் தற்போது மு கா, கிழக்கு மக்களை ஓரங்கட்டுவது போல் நடந்து கொண்டால் நிச்சயம் நாம் அ இ ம கா தலைமைக்கெதிராக பேசவும் தயங்க மாட்டோம். இருந்த போதும் இந்த நாட்டில் கிழக்கு அல்லது வடக்கை சேர்ந்த முஸ்லிம் அரசியல் தலைமைகளே வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் உரிமைக்காகவும் ஏனைய மாகாண முஸ்லிம்களுக்காகவும் பாடுபடுகிறது என்ற உண்மையை நாம் மறுக்க முடியாது. இந்த வகையில் அமைச்சர் அஷ்ரபுக்குப்பின் அமைச்சர் ரிசாத் பதியுதீனை சிறந்த தேசிய தலைமையாக காண்கிறோம். அதே போல் கிழக்கை தளமாகவும், தலைமையாகவும் கொண்ட உலமா கட்சி தேசிய அளவில் முஸ்லிம்களின் உரிமை குரலாக தனித்தும் கூட்டிணைந்தும்  செயற்படுகிறது என்பதை முழு முஸ்லிம் சமூகமும் அறியும்.

Comments

Popular posts from this blog

*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்

*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்* *(தொடரும்)* 146.23.11.2017அரசாங்க  தேசிய பாடசாலையான கண்டி மகளிர் உயர் பாடசாலைக்குநியமனம் பெற்று சென்ற  முஸ்லிம் ஆசிரியைக்கு பாடம் நடத்தஅதிபர் மறுப்பு வெளியிடப்பட்டது. http://www.madawalanews.com/2017/11/blog-post_373.html 145. காலி – தூவ பிரதேசத்தில் அமைந்துள்ள சமகிவத்தை குடியிடுப்பு பகுதியிலுள்ள முஸ்லிம் நபரொருவரின் வீடொன்றின்  மீது அதிகாலை வேளையில், பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.  http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_912.html 144. 20.11.2017 வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் அதிகாலை 1.20 மணியளவில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியது. http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_180.html 143. 17.11.2017    300க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் பல குழுக்களாகப் பிரிந்து கிந்தோட்டைக்குப் பிரவேசிக்கும் பாதைகளை எல்லாம் இடைமறித்த வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் பிரவேசித்து இரவு 9.30 மணியளவில் தம

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313