Skip to main content

இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!!

  முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!!  இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது..  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்

புதியதொரு வாழ்க்கைப் பயணத்திற்கு நாம் எம்மைத் தயார்படுத்திக் கொள்வோம் - அமைச்சர் பைஸர் முஸ்தபா

புதியதொரு வாழ்க்கைப் பயணத்திற்கு
நாம் எம்மைத் தயார்படுத்திக் கொள்வோம்
- அமைச்சர் பைஸர் முஸ்தபா
                                 (ஐ.ஏ.காதிர்கான்)
அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடிபணிந்துஇ புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றுஇ அதனை நிறைவு செய்யும் தருனத்தில்இ இன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இவ்வாறுஇ மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவதுஇ இஸ்லாத்தின் மூன்றாவது கடமையான நோன்பு நிறைவு பெறுவதோடு பெருநாளைக் கொண்டாடும் நாம்இ அதன் தத்துவங்களையும் மகிமைகளையும் அறிந்து தமது வாழ்க்கையில் கொண்டு வரவேண்டும்.
நாம் இன்று நல்லாட்சியொன்றின் கீழ் சுதந்திரமாகவும்இ சந்தோசமாகவும்இ நிம்மதியாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.இந்த நிம்மதியும் சந்தோசமும் நம் வாழ்நாளில் தொடர்ந்தும் நிலைத்து நீடிக்க வேண்டுமெனஇ இப் பெருநாள் தினத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் ஒவ்வொருவரும் பிரார்த்திக்க வேண்டும்.
இன்று அல்லாஹ்வின் அருளால் குதூகலமாக பெருநாளைக் கொண்டாடுவதைப் போன்றுஇ எல்லா வருடங்களிலும் பெருநாளைக் கொண்டாடுவதற்கு அல்லாஹ் துணைபுரிய வேண்டும் எனப் பிரார்த்திப்போமாக. இதற்கு நாம் ஒவ்வொருவரும் மன உறுதியோடு ஒற்றுமைப்பட்டு திடசங்கற்பம் பூண வேண்டும்.
புனித ரமழான் மாத காலப்பகுதியில் நம்மால் ஏற்பட்ட பாவங்களுக்காக மனம் வருந்திஇ அவற்றுக்காக அல்லாஹ்விடத்தில் மன்னிப்புக் கோர இப்பெருநாளில் முற்படுவோமாக! இதே வேளைஇ இப் பெருநாளை ஈமானிய உணர்வுகளோடு வரவேற்றுஇ இஸ்லாத்துடன் பின்னிப்பிணைந்த வாழ்க்கைக்கான திட்டத்தை தீட்ட இந்நன்நாளில் முனைவோமாக.
ஒவ்வொரு ஆண்டும் மலரும் இப்பெருநாளின் போதும் இதனை நாம் நினைவு படுத்திஇ நமது வாழ்நாளில் உருவாகியிருக்கும் அத்தனை தீய செயல்களையும் விட்டும் ஒதுங்கிஇ புதியதொரு வாழ்க்கைப் பயணத்திற்கு நாம் எம்மைத் தயார்படுத்திக் கொள்வோமாக. பிறந்துள்ள இப்பெருநாளில்இ நம் மத்தியில்  காணப்படும் சகல பிளவுகளையும்இ மனக் கசப்புகளையும்இ அடியோடு ஒழித்துஇ சகோதரத்துவத்தையும் சமாதானத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் கட்டியொழுப்பிஇ அல்லாஹ்வின் அருளால் இஸ்லாத்தின் இலட்சினையை உயர்த்திஇ இந்நன்நாளில் அல்லாஹ்விடம் இருகரமேந்தி பிரார்த்திப்போமாக!


Comments

Popular posts from this blog

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313

*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்

*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்* *(தொடரும்)* 146.23.11.2017அரசாங்க  தேசிய பாடசாலையான கண்டி மகளிர் உயர் பாடசாலைக்குநியமனம் பெற்று சென்ற  முஸ்லிம் ஆசிரியைக்கு பாடம் நடத்தஅதிபர் மறுப்பு வெளியிடப்பட்டது. http://www.madawalanews.com/2017/11/blog-post_373.html 145. காலி – தூவ பிரதேசத்தில் அமைந்துள்ள சமகிவத்தை குடியிடுப்பு பகுதியிலுள்ள முஸ்லிம் நபரொருவரின் வீடொன்றின்  மீது அதிகாலை வேளையில், பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.  http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_912.html 144. 20.11.2017 வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் அதிகாலை 1.20 மணியளவில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியது. http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_180.html 143. 17.11.2017    300க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் பல குழுக்களாகப் பிரிந்து கிந்தோட்டைக்குப் பிரவேசிக்கும் பாதைகளை எல்லாம் இடைமறித்த வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் பிரவேசித்து இரவு 9.30 மணியளவில் தம

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத