Skip to main content

வ‌ங்கியின் சேமிப்பில் வ‌ரும் மேல‌திக‌ ப‌ண‌ம் ஹ‌ராமான‌ வ‌ட்டி அல்ல‌.

 ஒருவ‌ர் த‌ன‌து ப‌ண‌த்தை வ‌ட்டி த‌ர‌ வேண்டும் என்ற‌ அடிப்ப‌டையில் ஒருவ‌ரிட‌மோ, வ‌ங்கியிலோ க‌ட‌னாக‌ கொடுக்கும் போதுதான் அங்கு ஹ‌ராமான‌ வ‌ட்டி என்ப‌து உருவாகும். க‌ட‌ன் என்றில்லாது த‌ன‌து ப‌ண‌த்தை சேமிப்ப‌த‌ற்காக‌ அல்ல‌து பாதுகாப்புக்காக‌ வ‌ங்கியின் சேமிப்பில் போட்டு அத‌ன் வ‌ருமான‌ம் ஹ‌ராமான‌ வ‌ட்டி ஆகாது. குர்ஆனில் ஒரு ச‌ம்ப‌வ‌ம் ந‌ல்ல‌தாக‌ கூற‌ப்ப‌டுகிற‌து. ஒருவ‌ர் த‌ன் ஆடுக‌ள் சில‌தை ஒருவ‌ரிட‌ம் ஒப்ப‌டைத்து விட்டு செல்கிறார். ப‌ல‌ வ‌ருட‌ம் க‌ழித்து என‌து ஆடுக‌ளை தா என‌ அவ‌ர் கேட்ட‌ போது ஒரு ப‌ட்டியை காட்டி இவை அனைத்தும் உன‌து  ஆடுக‌ளால் அதிக‌ரித்த‌வைதான் என‌ சொல்கிறார். அந்த‌ ம‌னித‌ரும் என‌து ஆடுக‌ள் ம‌ட்டும் போதும் என‌ சொல்லாது அனைத்து குட்டி வ‌ட்டிக‌ளையும் எடுத்துச்செல்கிறார். இத‌னை இறைவ‌ன் க‌ண்டிக்காம‌ல் ந‌ல்ல‌ செய‌ல் என்கிறான். ஆடுக‌ளை பாதுகாப்புக்காக‌ விட்டு அத‌ன் விளைவால் ஏற்ப‌ட்ட‌ குட்டிக‌ள் வ‌ட்டி அல்ல‌. அது போல் வ‌ங்கிக்கு நாம் க‌ட‌ன் என்ற‌ பெய‌ரில் கொடுக்காம‌ல் சேமிப்பில் போட்டால் வ‌ரும் மேல‌திக‌ ப‌ண‌ம் ஹ‌ராமான‌ வ‌ட்டி அல்ல‌. வ‌ட்டியில் ஹ‌ராமான‌ வ‌ட்டி ஹ‌லாலான‌ வ‌ட்டி உள்ள‌த

இஸ்லாமிய ஆட்சியும் சிறுபான்மையினரும்

இஸ்லாமிய ஆட்சியும் சிறுபான்மையினரும்
#இஸ்லாமிய கலீபாவின் Magna Carta
குற்றவாளிக் கூண்டில் கலீபா அலி (ரலி)

இன்று உலகளாவிய ரீதியில் முஸ்லிம் சிறுபான்மையினர் அரசியல்சமூகபொருளாதார மற்றும் மத அடிப்படையில் பல இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஆனால், 1400வருடங்களுக்கு முன்பே 25 இலட்சம் சதுரமைல் பரப்பளவைக் கொண்ட இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் (கிலாபத்தில்) சிறுபான்மையினராக வாழ்ந்த ஆர்மீனியக் கிறிஸ்தவர்கள் எப்படி சகல உரிமைகளையும் பெற்றுசட்ட பாதுகாப்போடு வாழ்ந்தார்கள் என்பதற்கு கீழே கூறப்படும் நிகழ்வுகள் சிறந்த ஆதாரங்களாக அமைந்துள்ளன.

1905ஆம் ஆண்டு கிழக்கு ரஷ்யாவின் அஸார்பைஜான் மாகாணத்திலுள்ள  ஆர்தபைன் எனும் கிறிஸ்தவ மடாலயத்தில் கண்டெடுக்கப்பட்ட கலிபா ஹஸரத் அலி (ரலி) அவர்களால் வரையப்பட்ட ஒரு சமாதான உடன்படிக்கைப் பத்திரம் சிறந்ததோர் அத்தாட்சிப் பத்திரமாக உள்ளது. இந்த ஒப்பந்தம் இஸ்லாமிய ஆட்சியின் (கிலாபத்தின்) நான்காவது கலீபாவாகிய  (ஜனாதிபதி) முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் மருமகனான அலி (ரலி) (கி.பி.656 – 661) அவர்களினால் தனது ஆட்சியின் கீழிருந்த அஸார்பைஜான் மாகாணத்தின் ஆளுநருக்கு (கவர்னர்) தங்களது கைப்பட அரபு கூபி எழுத்து வடிவில் எழுதப்பட்ட கடிதமாகும்அதன் விவரங்கள் முதலில் ரஷ்ய
(2)
பத்திரிகைகளில் வெளிவந்தன. அடுத்து, ஹப்லுல் மதீன்என்ற பத்திரிகையில்1906ஆம் ஆண்டு அல்-ஹுகம் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதன் பிரதிகள் துருக்கிகெய்ரோ மற்றும்  பெய்ரூத் ஆகிய நகரங்களில் வெளியிடப்பட்டன. அதன் அசல் பிரதி இன்றும் ரஷ்யாவிலுள்ள நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதில் கலீபா (ஜனாதிபதி) அலி (ரலி) அவர்கள் பின்வருமாறு அஸர்பைஜான் கவர்னருக்கு எழுதியிருந்தார்.அஸர்பைஜானிலுள்ள ஆர்மீனியக் கிறிஸ்தவர்களின் பாதுகாப்புஅவர்களின் சொத்துரிமைசமுதாய அந்தஸ்து,அவர்களின் கௌரவம் அத்துடன் எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் மதசுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். இக்கட்டளை எல்லா அதிகாரிகளினாலும்அவர்களுக்குப் பின் வரும் அதிகாரிகளினாலும் பின்பற்றப்பட வேண்டும். அங்குள்ளகிறிஸ்தவர்கள்முஸ்லிம் அல்லாதவர்கள் என்பதற்காக இம்சைக்குட்படுத்தப்படவோ,கௌரவகுறைவாகவோ நடாத்தப்படக் கூடாது. அவர்கள் நாட்டுக்கும், அரசுக்கும் துரோகமிழைக்காமல் விசுவாசமாக இருக்கும் வரையில் அவர்கள் துன்புறுத்தப்படவோ,இம்சைக்குட்படுத்தவோ கூடாது. தங்களுடைய மதத்தை சுதந்திரமாகவும் பகிரங்கமாகவும் அனுஷ்டிக்க அனுமதியளிக்கப்பட வேண்டும்.

இஸ்லாம் சமாதானத்தைப் போதித்து சமுதாயத்தின் நிலையை அபிவிருத்தி செய்யும்படிதான் கூறுகிறது. நாங்கள் எங்கிருந்தாலும் எங்கு போனாலும் சமூகங்களுக்கிடையில் நட்புறவையும்ஒத்துழைப்பையும் உருவாக்குவது எமது கடமையாகும். எனவேமுஸ்லிம்கள் எல்லாமக்கள் மத்தியிலும் நட்புறவையும் ஒத்துழைப்பையும் வளர்ப்பதோடு– எக்காரணம்
(3)
கொண்டும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யவோ அல்லது தவறாக உபயோகிக்கவோ கூடாது. சிறுபான்மையினரை அவமானப்படுத்தக்கூடாது. மேலும், தங்களது வீடுகள்நிலம் மற்றும் வியாபரத் தளங்களிலிருந்து வெளியேற்றப்படக்கூடாதுஅவர்களுடைய மதகுருமார்கள் தகுந்த மரியாதையோடு கவனிக்கப்பட வேண்டும்.

மடாலயங்கள் சிறப்பாக பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் தங்களுடைய மதத்தை சுதந்திரமாக பின்பற்றவும் – தமது மதப்பிரச்சாரங்களை சுதந்திரமாக மேற்கொள்ளவும் அனுமதிக்கப்பட வேண்டும். தேவாலயங்களில் நிகழ்த்தப்படும் மதப்பிரச்சாரங்கள் தடைசெய்யப்படக்கூடாது. அவர்கள்,தங்களது வணக்கஸ்தலங்களை நிர்மாணிப்பதற்கு நிலம் கேட்டால் தகுதியான – பெறுமதி மிக்க நிலங்கள் வழங்கப்பட வேண்டும். யார் இந்த கட்டளைகளை மீருகின்றார்களோ  - அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் ரசூல் (ஸல்) அவர்களுக்கும் விரோதமாக செயல்படுகிறார்கள் என்று கருதப்பட்டு – தெய்வீக கோபத்துக்குள்ளாவார்கள்.

இந்தக் கட்டளைகளை உள்ளடக்கிய கடிதம் (பத்திரம்) அன்றைய இஸ்லாமிய ஆட்சியில் (கிலாபத்தில்) – எந்தளவு முஸ்லிமல்லாத மாற்று மதத்தவர்களுக்கு மதசுதந்திரம் உட்பட, மதசகிப்புத்தன்மையோடுகூடிய நேசத்தன்மை மற்றும் சமூக அந்தஸ்து என்பன வழங்கப்பட்டிருந்தன என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.

கலீபா (ஜானதிபதி) அலி (ரலி) அவர்களுடைய ஆட்சியில் நடந்த மேலும் இரண்டு சம்பவங்களை ஞாபகப்படுத்துவதின் மூலம் அவர்களின் இஸ்லாமிய ஆட்சி எந்தளவு நீதி நேர்மையாக
(4)
இருந்தது என்பதற்கு அத்தாட்சியாய் அமையும் என்று எண்ணுகிறேன்.:

கலீபா அலி (ரலி) அவர்களுடைய ஆட்சியில் ஒரு யூதன் கலீபா அலி (ரலி) அவர்களுடைய யுத்த  கேடயத்தை திருடிவிட்டான். இது பற்றி கலீபாவினால் காதி நீதிபதியிடம் முறையிடப்பட்டது. விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டது. நீதிபதி கலீபாவைப். பார்த்து கலீபாவே! இது உங்கள் கேடயம் என்பதற்கு ஏதாவது சாட்சியங்கள் உண்டா?” என்று கேட்டார். கலீபா அலி (ரலி) அவர்கள் அதற்கு இதோ! என் மகன் ஹஸன் (ரலி) யும் எனது வேலையாலும் உள்ளனர். என்றார். அதற்குநீதிபதி (காதி) அவர்கள் கலிபாவைப் பார்த்துஇஸ்லாத்தில் உறவினர்களுடைய சாட்சியங்களும் வேலைகாரர்களுடைய சாட்சியங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. என்றும், வேறு சாட்சியங்கள் இல்லாத படியால் கேடயம் யூதனுடையதுதான் என்று தீர்ப்பு வழங்குகிறேன்.” என்று வழக்கை முடித்தார்.  கலீபா அலி (ரலி) அவர்கள் இத் தீர்ப்புக்கு தலை சாய்த்தவண்ணம் விலகிச்சென்றார்கள்.  .  இந்த நேர்மையையும் - பெருந்தன்மையும் – இஸ்லாமிய நீதி முறைமையையும் கண்ட யூதன் உண்மையைக்கூறி கேடயத்தை கலிபாவிடம் திருப்பிக் கொடுத்து இஸ்லாத்தில் இணைந்துக் கொண்டான். இது வரலாற்றில் ஒரு சுவடியாகும்.

இதே போன்று இன்னொரு சம்பவத்தை இங்கு குறிப்பிட விரும்புகின்றோம். – ஒரு சாதாரண குடிமகனின் குற்றச்சாட்டின் பேரில்; கலீபா அலி (ரலி)  அவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகின்றார்கள்.. வழக்கு தினமன்று இருவரும் நீதிமன்றில் ஆஜரானார்கள். கலீபாவைக் கண்ட நீதிபதி

(5)
மரியாதையின் நிமித்தம் எழுந்து நின்றார். இதனை அவதானித்த கலீபா அலி (ரலி) வழக்காளியைப் பார்த்து நீ உனது வழக்கை
வேறு நீதிபதியிடம் கொண்டுசெல். ஏனெனில்இந்த நீதிபதி எனக்கு எழுந்து நின்று மரியாதை செய்ததினால்,  நீ இவரிடம் இருந்து உரிய நீதியைப் பெற்றுக் கொள்ளமாட்டாய்- என்றார்கள்.
இதிலிருந்து விளங்குவது யாதெனில்  தான் பெரும் சாம்ராஜ்யத்தின் தலைவராக இருந்தாலும்தனக்கு விரோதமாக தீர்ப்பு வழங்கிய நீதிபதியை மதித்தும் – தனக்கு மரியாதை செலுத்திய நீதிபதியை கண்டித்தும் தனது எதிரியிடமே உண்மையை விளக்கிய கலீபா அலி (ரலி) போன்றோர் இஸ்லாமிய ஆட்சியில் – சாதாரண பொதுமக்கள் அவர்கள் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களாக இருந்தபோதும்கூட – அவர்களுடைய உயிர் - உடமை நிலவுரிமைவாழ்வாதாரம்மத சுதந்திரம் – மதப் பிரச்சாரம் பிற வணக்கத்தலங்கள் என்பவற்றுக்கு எவ்வளவு தூரம்  பாதுகாப்பு வழங்கினார்கள் என்பது நமக்கு நன்கு புரிகின்றது. எனவே, இஸ்லாமிய ஆட்சி சிறுபான்மையினத்தவர்களுக்கும் வேற்றுமதத்தவர்களுக்கும் பூரண பாதுகாப்பு வழங்கிய ஆட்சியாகவே இருந்தது என்பது நன்கு புலனாகின்றது. இத்தகைய நீதிவழுவா ஆட்சிமுறைகள் நிலவுமேயானால் இன்றைய நாடுகள் அனைத்தும் சமாதான பூங்காவாக மிளிரும் என்பதில் சந்தேகமில்லை.

எஸ்.சுபைர்தீன்
பொதுச் செயலாளர்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய