Skip to main content

எம் பி ப‌த‌விக்காக‌ அதுர‌லிய‌ தேர‌ரும் ஞான‌சார‌வும் மோத‌ல்.

 பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் . இவ்விடயத்தில் கட்சி மட்டத்தில் எவ்வித தீர்மானத்தையும் எடுக்க முடியாது . ஞானசார தேரரும் , அத்துரலிய ரத்ன தேரரும் ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்திற்காக செய்துகொண்ட ஒப்பந்தங்கள் ஏதும் கட்சிக்கு தெரியாது என அபே ஜனபல வேகய கட்சியின் தலைவர் சமன் பெரேரா தெரிவித்தார் .  அபேஜன வேகய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் குறித்து எழுங்துள்ள முரண்பாடு குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் . அவர் மேலும் குறிப்பிடுகையில் , கடந்த வருடம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் அபேஜனபல வேகய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகளுக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் ஒதுக்கப்பட்டது . அமைய இந்த ஆசனத்திற்கு அபேஜன பல வேகய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் விமல் திஸ்ஸ தேரர் , அபே ஜன பல கட்சியின் வேட்பாளர்களான தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் , பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார த

சிரேஷ்ட ஊடகவியலாளர் சாய்ந்தமருது அஷ்ஹருக்கு கல்முனைநெனசலவின் உயர் கௌரவம்!


-எம்.வை.அமீர் -
கல்முனை நெனசலவின் பணிப்பாளர் எஸ்.எம். ஹாஜா தலைமையில் ஆசாத் பிளாசா வரவேற்புமண்டபத்தில் 24.07.2016 ஆம் திகதி இடம்பெற்ற 7 வது வருட சான்றிதழ் வழங்கும் நிகழ்வின்போது சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஐ.எம் அஷ்ஹர் உயர் கௌரவம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
எம்.ஐ.எம் அஷ்ஹர் தனது ஊடக வரலாற்றை கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் கல்வி கற்ற காலத்தில் கையெழுத்து பத்திரிகை துறையில் ஆரம்பித்த தனது எழுத்துப் பணியை பின்னர் ஸாஹிரா பத்திரிகையில் தொடர்ந்தார்.
சிறு பராயத்திலிருந்தே விளையாட்டுத்துறையில் ஏற்பட்ட  உத்வேகம் 1980 ஆம் ஆண்டுகளில் தனியான விளையாட்டுக் கழகம் ( பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகம் ) ஒன்றை ஆரம்பிக்கத் தூண்டி அதன் தாக்கம் பின்னர் சாய்ந்தமருது தாமரை விளையாட்டு மைதான அமைப்பில் தொடர்ந்தது. சுனாமியின் பின்னர் அந்த தாமரை விளையாட்டு மைதானம் சாய்ந்தமருது வைத்தியசாலைக்கும ,சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்திற்கும் கூறுபோடப்பட்டு விட்டது.
அந்த கால கட்டத்தில் விளையாட்டுச் செய்திகளை அப்போது பிரதேச செய்தியாளர்களாக இருந்த ஏ.எல்.ஜுனைதீன் , கிராம சேவை உத்தியோஸ்தர் அப்துல் ஹமீட் மூலமாக பத்திரிகைகளில் வெளிவரச் செய்தது.
பின்னர் ஆங்கில் மொழிமூலம் தேசிய விவசாய டிப்ளோமா பட்டப் படிப்பினை மேற்கொண்ட போது ஆங்கில மொழியிலும் , சிங்கள மொழியிலும் தேர்ச்சி பெற்று, ஆங்கில மற்றும் சிங்கள பத்திரிகைகளில் செய்திகளை வெளியியட்டமை.
தனது முதலாவது ஆசிரியர் நியமனம் மல்வான அல் முபாறக் தேசியக்கல்லூரியில்  1985 ஆம் ஆண்டு உயர்தர விஞ்ஞான பிரிவை ஆரம்பித்துஅதன் பகுதித் தலைவராகவும் தாவரவியல் ஆசிரியராகவும்  நியமனம் பெற்றதிலிருந்து 1994 ஆம் ஆண்டு கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று வரும் வரை கிட்டத்தட்ட 10 வருடங்கள் மல்வான பிரதேச செய்திகளை அப்பிரதேச ஊடகவியலாளர்கள் மூலமான வெளியிட்டு வந்தார். .அந்த வகையில் எம்.முபாறக் அலி அவர்களை இன்றும் நினைவு கூருகின்றார்.
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் தாவரவியல் பாடத்தை அக்கால கட்டத்தில் கற்பித்துக் கொண்டிருந்த காலஞ்சென்ற ஏ.எல்.எம்.பளீல், கல்முனை பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்றதனைதொடர்ந்து  தற்போது சாய்ந்தமருது பிரதேச செயலாளராக கடமையாற்றும் ஏ.எல்.எம்.சலீம் அவர்கள் அப்போது கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரிக்குபிரதி அதிபராக இருந்த போது  தாவரவியல் பாடத்தை கற்பிப்பதற்காக இவரை மல்வானையில் இருந்து இங்கு கொண்டு வந்தார்கள்.
ஊடகத்துறையில் மட்டுமல்ல கற்பித்தல் துறையிலும் வல்லமை பெற்ற  இவர் ஒரு சகலகலாவல்லவர்.  மல்வானையிலும் கல்முனையிலும் நூற்றுக்கும் அதிகமான மாணவர்களையும் மாணவிகளையும் மருத்துவம் பல் வைத்தியம் ,விவசாயம் மற்றும் விஞ்ஞானத்துறை பட்டதாரிகளையும் உருவாக்கி பெருமை கண்டவர்.
கல்முனையில் பிரபலம் பெற்ற தனியார் கல்வி நிறுவனமான  பிரிலியன் கல்வி நிலையத்தில் 1994 முதல் 2000 ஆம் ஆண்டு வரை தாவரவியல் பாடத்தை கற்பித்த இவர் 2000 ஆம் ஆண்டு  முதல்  மாணவர்களிடம் பணம் பெற்று கற்பிப்பதில் ஏற்பட்ட மனக்கஸ்டம் காரணமாக அந்த துறையில் இருந்து நீங்கிக் கொண்டார்.
நவமணி பத்தரிகை ஆரம்பிக்கப்பட்ட போது அதன் பிரதம  ஆசிரியர்எம்.பீ.எம்.அஸ்ஹர் மூலமாக அதன் செய்தியாளராக நுழைந்து செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதியதுடன் கல்வி மணி என்ற பகுதியையும் ஆரம்பித்தார். ,மெற்றோ நியுஸ் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட போது அதன் செய்தியாளராக நுழைந்துவிடிவெள்ளி பத்திரிகை வீரகேசரி பத்திரிகையுடன் இணைந்து வந்த போது அதன் ஆரம்ப கால செய்தியாளராக இருந்துள்ளமை.
சுனாமி அனர்த்த்தின் போது  பிரதேச  செய்திகளை  இப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள ஊடகவியலாளர்கள் மூலமாக தினகரன் தினக்குரல் சுடரொளிவீரகேசரி போன்ற பத்தரிகைகளில் பிரசுரித்த இவருக்கு தானும் தேசிய பத்திரிகைக்கு எழுத வேண்டும் என்ற ஆசையில் 2006 ஆம் ஆண்டு  தனது அன்புக்குரிய மாணவன்  அழுத்கமயைச் சேர்ந்த மிஸ்வரின் ( இன்று விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம.எம்.ஹரீஸின் ஊடக செயலாளர்) தூண்டுதலினால் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் மாளிகைக்காடு குறூப் நிருபராக நியமனம் பெற்று அன்று முதல் தினகரன் டெய்லி நியுஸ் , சன்டே ஒப்சேவர் ,தினமின சிலுமின ஆகிய பத்திரிகைகளில் செய்திகளையும் கட்டுரைகளையும்எழுதி வருகின்றார்.
அம்பாறை மாவட்டத்தில் மூன்று மொழிகளிலும் செய்திகளை எழுதுகின்றஒரேயொரு ஊடகவியலாளர் இவர்  என்பதில் பெருமையடைகின்றார். அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் நிர்வாக குழு உறுப்பினராகவும் அதன் ஒழுக்காற்று சபை உறுப்பினரதாகவும் தற்போது கடமையாற்றுகின்றார்.
2007 ஆம் ஆண்டு முதல் தினக்குரல் பத்திரிகையின் சாய்ந்தமருது நிருபராக நியமனம் பெற்று இன்றுவரை எழுதி வருகின்றார்.
ஊடகத்துறையில் சிறந்து பிரகாசிக்கும் எம்.ஐ.எம் அஷ்ஹரை நாமும் வாழ்த்துவோம்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய