முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
ஹிஸ்புல்லாஹ்வின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து காத்தான்குடி,
மண்முனை வடக்கு பகுதிகளுக்கு 4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
2016 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக் கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து காத்தான்குடி மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரவுட்குட்பட்ட சங்கங்கள், பொது நிறுவனங்கள், கழகங்கள், மதஸ்தலங்களுக்கு தேவையான 4 மில்லியன் ரூபா பொறுமதியான உபகரணங்கள் நாளை வெள்ளிக்கிழமை கையளிக்கப்படவுள்ளது.
மண்முனை வடக்கு பகுதிக்கான உபகரணங்கள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மண்முனை வடக்கு பிரேதச செயலகத்தில் நடைபெறவுள்ளது. பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
அத்துடன், நாளை வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு காத்தான்குடி பிரதேசத்திலுள்ள 35 பொது நிறுவனங்களுக்குத் தேவையான உபகரணங்கள் கையளிக்கப்படவுள்ளது. காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளதுடன், இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலளார் றுஸ்வின் மொஹமட் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.
Comments
Post a comment