எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
உலக சமாதான அமையத்தினதும் , நேபாள நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களின் சமாதான பேரவையின் அனுசரனையிலும் ”இடரார்ந்த தற்கால சவால்களை வெல்வதற்கான அரச நிறுவனங்கள் ,சிவில்-சமூக அமைப்புகள் மற்றும் நம்பிக்கைமிகு அரசார்பற்ற நிறுவனங்களின் வகிபங்கு ” என்ற தொனிப்பொருளில் சர்வதேச தலைமைத்துவ மகாநாடு-2016 (International Leadership Conference-2016) கடந்த 28ம் திகதி தொடக்கம் (30) இன்று வரை நேபாள நாட்டின் தலைநகரான காத்மன்டுவில் நடைபெற்றது. குறித்த மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட அதேவேளை எமது நாட்டில் இருந்து சிறுபான்மை மக்கள் எதிர் நோக்கும் சவால்களை தெளிவுறுத்துவதற்கான ஒரு முஸ்லிம் பிரதிநிதியாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. ஊடகப்பிரிவு