BREAKING NEWS

மக்காவில் அறிவிக்கப்படும் பிறை முழு உலகுக்கும் சாத்தியமா? -உலமா கட்சித்தலைவர்

பிறை பற்றிய விடயத்தில் முஹம்மது நபி சல்லல்லாஹ{ அலைஹி வசல்லம் அவர்களின் ஒரு ஹதீத் மிகவும் பிரபல்யம் வாய்ந்தது. அதுதான் “பிறை கண்டு பிடியுங்கள் பிறை கண்டு விடுங்கள்” என்பதாகும். இந்த ஹதீதில் நபியவர்கள் குறிப்பிட்ட ஒரு ஊர் மக்களே என்றோ, குறிப்பிட்ட ஒரு நாட்டு மக்களே என்றோ அல்லது உலக முஸ்லிம்களே என்றோ சொல்லாமல் பொதுவாக முஸ்லிம்களை நோக்கி இவ்வாறு சொன்னதன் மூலம் எக்காலத்துக்கும் எந்த ஊருக்கும் எற்ற வகையில் இந்த ஹதீத இடம் பெற்றுள்ளது என்பது அற்புதமான ஒன்றாகும்.
நபியவர்கள் காலத்தில் மதீனாவில் பிறை கண்டால் அதனை மக்காவுக்கு அறிவிப்பதாயின் கிட்டத்தட்ட ஐந்து நாட்களுக்கு மேலாகும். இதனால் அன்று வாழ்ந்த மக்கள் தங்கள் தங்கள் ஊர்களில் காணும் பிறையை வைத்து தமது நோன்பு, பெருநாள் போன்றவற்றை தீர்மாணித்தார்கள். அதில் தப்பும் இல்லை. அதற்கு ஏற்ற வகையிலும் இந்த ஹதீத் அமைந்துள்ளது. சுமார் 100 வருடங்களுக்கு முன் இலங்கையில் வாழ்ந்த முஸ்லிம்களும் முழு இலங்கைக்கும் ஒரு பிறை என நோன்பு பிடிக்கவில்லை. காரணம் கொமும்பில் கண்ட பிறையை மட்டக்களப்புக்கு அறிவிப்பதாயின் மாட்டு வண்டியில்தான் செல்ல வேண்டும். இதற்கு குறைந்தது 5 நாட்கள் செல்லும். எனவே  இலங்கை மக்கள் ஒவ்வொரு ஊரிலும் தாம் காணும் பிறையை வைத்தே தமது நோன்பை ஆரம்பித்தனர். பின்னர் தந்திச்சேவை, வானொலி போன்றவை கண்டு பிடிக்கப்பட்ட பின் கொழும்பின் அறிவிப்பை ஏனைய ஊர் மக்களும் ஏற்றுக்கொண்டனர். தாங்கள் இது வரை காலமும் ஒவ்வொரு ஊரிலும் காணும் பிறையை வைத்துத்தான் நோன்பு பிடித்தோம் இது என்ன நாட்டுக்கு ஒரு பிறை என்று அம்மக்கள் முட்டாள்தனமாக கேட்கவில்லை.
இன்று உலகம் என்பது ஒரு கிராமமாக மாறியுள்ளது. மக்காவில் தொழுவதை இலங்கையின் ஒரு கிராமத்தவன் கூட நேரடியாக பார்க்கும் வசதி உள்ளது. இந்த நிலையில் உலகம் முழுவதும் ஒரு பிறை என்பது மிகவும் இலகுவான ஒன்று. இது எப்படி என தலையை பிய்த்துக்கொள்ள தேவையில்லை. அப்போது கூட நபியவர்கள் சொன்னதற்கிணங்க நாம் பிறை கண்டு தான் நோன்பை பிடிக்கிறோம் என்பதே நிலை நாட்டப்படுகிறது. அத்தோடு உலகளாவிய முஸ்லிம்கள் மக்கா என்ற ஒரு தலைமைக்கு கபட்டுப்பட்டு ஒற்றுமையாக நோன்பு பிடிக்கும் உன்னதமானதொரு வரலாற்றுப்பதிவை ஏற்படுத்துகிறோம்.
நபியவர்கள் ஒவ்வொரு நாட்டவரும் தத்தமது நாட்டில் பிறை கண்டு பிடிக்க வேண்டும் என மேற்படி ஹதீதில் சொல்லவில்லை என்பதை நாம் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். .
அத்துடன் பிறையை வெற்றுக்கண்ணால் கண்டு பிடியுங்கள் என நபியவர்கள் சொல்லவில்லை.
ஆகவே உலகமெல்லாம் ஒரு பிறை போதும் என நாம் சொல்லும் அதே வேளை உலகில் எங்கு பிறை கண்டாலும் அதனை அனைத்துரக மக்களும் ஏற்க வேண்டும் என்பதை நாம் ஏற்கவில்லை. காரணம் அதுவும் முஸ்லிம்கள் மத்தியில் குழப்பத்தையே ஏற்படுத்தும். இந்த நிலையில் மக்காவில் இருந்து வரும் பிறை அறிவித்தலை உலக முஸ்லிம்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வதன் மூலம் நாம் அனைவரும் மிகப் பெரும்பாலும் உலகம் முழுவதும் ஒரே நாளில் சில மணி நேர வித்தியாசங்கள் இருந்த போதும் ஒரே நாளில் நோன்பு மற்றும் பெருநாளை எடுக்க முடியும். மக்கா என்பது இஸ்லாத்தில் எத்தகைய முக்கியத்துவம் பெறுகிறது, உலகின் மத்தியில் மக்கா அமைந்துள்ளது என்பவற்றை வைத்து நாம் சிந்தித்தால் மக்காவில் அறிவிக்கப்படும் பிறையை ஏற்று நோன்பு பிடிப்பதே பிறையை கண்டு  பிடியுங்கள், விடுங்கள் என்ற நபியவர்களின்  வாhத்தைக்கு கட்டுப்பட்டதாக முடியும்.
-மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
தலைவர்
முஸ்லிம் உலமா கட்சி
05.06.2016

Share this:

1 comment :

 1. ஒரு பிறை தான் எதார்த்தம்👍🏼
  சவூதியில் அதே பிறை சீனாவிலும் அதே பிறை
  இலங்கையிலும் அதே பிறை.. நியாயம் தான்.
  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
  'ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும். எனவே பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் முப்பது நாள்களாக எண்ணிக்கையை முழுமைப் படுத்துங்கள்.'
  என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
  (ஸஹீஹுல் புகாரி: 1907.)
  இந்த ஆதாரப்பூர்மான ஹதீஸை பற்றிய உங்கள் கருது கோள் யாது?
  நீங்கள் உங்கள் என வரும் இந்த மேற்கோள் ஹதீஸ் பிறையை கண்டு பிடிக்கவும் பிறையை கண்டு விடவும் எத்தனிக்கிறது.
  அதே போல் மார்க்கம் தலைமைத்துவத்திற்கு கட்டுப்படவல்லவா சொல்கிறது?
  நாம் இருப்பது சவுதி அரேபியாவின் தலைமைத்துவத்தின் கீழோ இந்தியாவின் தலைமைத்துவத்திற்கு கீழோ அல்லவே..
  நாம் இருப்பது இலங்கை நாட்டின் முஸ்லீம் கலாசார தலைமைத்துவத்தின் கீழ்..
  அண்டை வீட்டாரின் தலைவர் எங்களுக்கு ஓர் வேலையை செய்ய எத்தனித்தால் எம் வீட்டு தலைவர்(தந்தை)அதை செய்ய வேண்டாமென்றால் நாம் எதற்கு கட்டுப்படுவோம்..
  தந்தைக்கா?
  அல்லது அண்டை வீட்டருக்கா?
  எதார்தத்தையும் நிதர்சனத்தையும் புரிந்து கொள்ளுதல் அவசியம்..

  என‌ ஒருவ‌ர் கூறியுள்ளார். உல‌குக்கு ஒரு பிறைதான் என்ப‌தை இவ‌ர் ஏற்றுக்கொண்ட‌மை ந‌ல்ல‌ விட‌ய‌ம். ஆனால் த‌லைமைத்துவ‌த்துக்கு க‌ட்டுப்ப‌ட‌ வேண்டும் என‌வும் முஸ்லிம் ச‌ம‌ய‌ க‌லாசார‌ திணைக்க‌ள‌த்துக்கு க‌ட்டுப்ப‌ட‌ வேண்டும் என‌வும் சொல்வ‌த‌ன் மூல‌ம் இவ‌ருக்கு இஸ்லாம் த‌லைமைத்துவ‌ம் ப‌ற்றி சொல்லியுள்ள‌வை புரிய‌வில்லை.

  எந்த‌த்த‌லைமைத்துவ‌மாக‌ இருந்தாலும் ச‌ரி, சொந்த‌ த‌ந்தையாக‌ இருந்தாலும் ச‌ரி இஸ்லாத்துக்கு மாற்ற‌மாக‌ க‌ட்ட‌ளையிட்டால் அத‌ற்கு நாம் ப‌ணிய‌ முடியாது என்ப‌தை ந‌பிய‌வ‌ர்க‌ள் மிக‌ தெளிவாக‌ சொல்லிவிட்டார்க‌ள்.
  لا طاعة للمخلوق في معصية الخالق
  ப‌டைத்த‌வ‌னுக்கு பாவ‌ம் செய்வ‌தில் ப‌டைக்க‌ப்ப‌ட்ட‌வ‌னுக்கு ப‌ணிய‌ முடியாது என்ப‌த‌ன் மூல‌ம் மிக‌ தெளிவாக‌ இத‌னை புரிகிறோம்.

  மார்க்க‌ விட‌ய‌ விட‌ய‌ங்க‌ளில் ந‌ம‌க்கான‌ த‌லைமைத்துவ‌ம் யார்?
  முஸ்லிம் ச‌ம‌ய‌ க‌லாசார‌ திணைக்க‌ள‌ம் என்ப‌து அர‌சாங்க‌த்தின் ஒரு ப‌குதியே த‌விர‌ சுய‌மாக‌ இய‌ங்கும் ஒன்ற‌ல்ல‌. இந்நிறுவ‌ன‌ம் அர‌சின் நிக‌ழ்ச்சிநிர‌லுக்கு மாற்ற‌மாக‌ செயற்ப‌டாது.

  முஸ்லிம்க‌ளுக்கான‌ த‌லைமைத்துவ‌ம் என்ப‌து அர‌சிய‌ல் அதிகார‌மும் மார்க்க‌ அறிவும் உள்ள‌ த‌லைமைத்துவ‌மாகும். அத்த‌கைய‌ த‌லைமைத்துவ‌ம் ஒன்றை முஸ்லிம்க‌ள் உருவாக்க‌வில்லை.

  அதே போல் ச‌வூதியை, ஈரானை முஸ்லிம்க‌ளின் த‌லைமைத்துவ‌ம் என‌ நாம் சொல்ல‌வில்லை. ஆனாலும் உண்மையான‌, ந‌ம‌க்கான‌ த‌லைமைத்துவ‌ம் முஹ‌ம்ம‌து நபி (ச‌ல்) அவ‌ர்க‌ளும் அவ‌ர்க‌ள் ஆட்சி செய்த‌ ம‌க்கா, ம‌தீனாவுமாகும்.

  ம‌க்காவை உல‌க‌ளாவிய‌ முஸ்லிம்க‌ளின் த‌லைமை என்ப‌தை இறைவ‌ன் குர்ஆனில் ந‌ம‌க்கு சொல்கிறான்.

  அத்துட‌ன் பிறை பிர‌ச்சினைக்கும் ம‌க்காவுக்கும் நேர‌டி தொட‌ர்பு உள்ள‌து. பிறையை வைத்தே ஹ‌ஜ் கிரியைக‌ள் ந‌ட‌க்கின்ற‌ன‌.

  அது ம‌ட்டும‌ல்லாது உல‌கின் ப‌ல‌ முஸ்லிம் நாடுக‌ளால் ஏற்றுக்கொள்ள‌ப்ப‌ட்ட‌துதான் ம‌க்காவின் உம்முல் குரா க‌ல‌ண்ட‌ராகும்.
  இல‌ங்கைக்கு ஒரு பிறைத்திக‌தி, இந்தியாவுக்கு ஒரு திக‌தி, ச‌வூதிக்கு ஒரு திக‌தி என்ப‌தெல்லாம் கேலிக்கூத்தாகும்.

  என‌வேதான் சொல்கிறோம் உல‌க‌ளாவிய‌ முஸ்லிம்க‌ளின் த‌லைமைத்துவ‌மான‌ ம‌க்காவில் என்ன‌ பிறை திக‌தி அமுல்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌தோ அத‌னை உல‌க‌ முஸ்லிம்க‌ள் அனைவ‌ரும் ஏற்போம்.
  -முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

  ReplyDelete

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar