மஹியங்கனை சம்பவம் நீதி மன்றத்தில் இருக்கும் நிலையில் இது பற்றி பகிரங்கமாக பேசி ஆர்ப்பாட்டம் செய்து இனங்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்க முயலும் பொது பல சேனாவையும், அவர்களின் சட்டத்துக்கு முரணான செயலை அமைதியாய் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கும் அரசின் செயலையும் உலமா கட்சி வன்மையாக கண்டித்துள்ளது.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளதாவது,
அண்மையில் ம்ஹியங்கனையில் இஸ்லாத்தை
பௌத்த சமயத்தலைவர் ஒருவர் தூற்றியமைக்காக முஸ்லிம் இளைஞர்கள் சிலர் பௌத்த கொடியை எரித்தமை கவலை தரும் செயலாகும். இதனை முஸ்லிம் சமூகம் வரவேற்கவில்லை. சம்பந்தப்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையிலும் இனவாதிகளால் அப்பாவி முஸ்லிம்கள் சிலர் தாக்கப்பட்டனர். இதற்காக அரசு சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.
தற்போது இது விடயத்தை பொதுபல சேனா பெரிது படுத்தி மஹிந்த அரசின் இறுதிக்காலத்தின் போது முஸ்லிம்களுக்கு செய்தது போன்ற அநியாயங்களை இந்த அரசிலும் செய்ய முனைவது கண்டிக்கத்தக்கதாகும். இது போன்ற விடயத்தில் மஹிந்த அரசு சட்டநடவடிக்கை எடுக்க தவறியமை காரணமாக உலமா கட்சி அரசுக்கு ஆதரவு என்ற நிலையிலிருந்து விலகி அந்த அரசை கடுமையாக கண்டித்தது.
ஆனாலும் இதற்கெல்லாம் மறு கரமாக செயற்படும் ஹெல உறுமய மஹிந்தவை விட்டு விலகியதால் அவர்கள் கூட்டிணையும் ஆட்சியில் மீண்டும் இனவாதம் தலை தூக்கும் என்பதை அன்றே சரியாக உலமா கட்சி மட்டுமே கூறியதோடு ஹெல உறுமய இல்லாத மஹிந்தவுக்கு தேர்தலில் ஆதரவளித்தது.
தற்போதைய இந்த ஆட்சியின் ஆரம்பத்திலேயே இனவாத சக்திகள் மீண்டும் தலையெடுப்பது இன்னும் பல வருடம் ஆட்சி செய்யவிருக்கும் இவ்வாட்சி பற்றிய அச்சம் ஏற்படுகிறது.
பேருவல சம்பவம் சம்பந்தமாக இந்த அரசும் எதுவித சட்ட நடவடிக்கையும் எடுக்காமை பொதுபல சேனாவுக்கு தைரியத்தை கொடுத்துள்ளது.
இதேவேளை முஸ்லிம்களின் வாக்குகள் பெற்ற ஒரே முஸ்லிம் கட்சி என சொல்லிக்கொள்ளும் முஸ்லிம் காங்கிரஸ் சேனாவை இது வரை கண்டிக்க முடியாமல் பதவிகளுக்காக நாடகமாடிக்கொண்டிருக்கிறது.
Post a Comment