BREAKING NEWS

ஒரு மாத கால நோன்புக்கான உலா் உணவுப் பொருட்கள்

அஷ்ரப் ஏ சமத்


கொழும்பு வாழ் மாளிகாவத்தை, தெமட்டக் கொட, மருதானை, கிராண்பாஸ் வாழ்  500 முஸ்லீம் விதவைப் பெண்கள்,வறுமைக் கோட்டின் ்வாழ் பெண்களுக்கும்  ஒரு மாத கால  நோன்புக்கான  உலா் உணவுப் பொருட்கள் தெமட்டக் கொட அல்-ஹிஜ்ரா வித்தியாலயத்தில் வைத்து (5) ஆம் திகதி பகிா்ந்தலிக்கப்பட்டன. 
ஒவ்வொருவருக்கும் 5 ஆயிரம் ருபா பெறுமதியான சகா் உணவுக்கான பொருட்கள்  வழங்கப்பட்டன. இதனை  லண்டனில் உள்ள அல் இசான் ரஸ்ட் அமைப்பு இதனை அனுசரனை வழங்கியிருந்தது. கலாநிதி ஹரிஸ்டீன் அவா்களின் ஏற்பாட்டில் தெமட்டக் கொட ஓபன் இன் நீட் பவுன்டேசன் தலைவா் நிஸ்த்தாா் அனீஸ் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம். அஸ்வரும் கலந்து கொண்டு பொருட்களை கையளித்தாா்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar