Skip to main content

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்பு

   ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள

அரசியல் யாப்பு திருத்த சபைக்கு உலமா கட்சியினால் மட்டுமே பிரேரணைகள்



M Y Ameer

அரசியல் யாப்பு திருத்த சபைக்கு முஸ்லிம் கட்சி என்ற வகையில் முஸ்லிம் உலமா கட்சியினால் மட்டுமே பிரேரணைகள் இதுவரை முன் வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி குறிப்பிட்டார். அவரின் இல்லத்தில் நடைபெற்ற கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு அவர் தெரிவித்ததுடன் தம்மால் முன் வைக்கப்பட்ட பிரேரணைகளையும் விளக்கினார் அதில் உலமா கட்சியால் முன்வைக்கப்பட்ட யாப்பு திருத்த ஆலோசனைகள் வருமாறு:
;.

1. ஜனாதிபதி முறைமை:
ஐ. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையையே  உலமா கட்சி ஆதரிக்கின்றது.  ஆனாலும் ஜனாதிபதி தனது செயல்கள் பற்றி  பாராளுமன்றத்துக்கு பதில் கொடுத்தல், நீதி மன்றத்தின் கேள்விக்குட்படுத்தல் என்பன உள்வாங்கப்பட வேண்டும். ஜனாதிபதியினால் நிறைவேற்றப்படும் ஒரு தீர்மானத்துக்கெதிராக பாராளுமன்றத்தில் பிரேரணை கொண்டு வந்து அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் ஜனாதிபதியின் தீர்மானம் செல்லுபடியற்றதாக்கப்பட வேண்டும். அதே போல் ஜனாதிபதியின் ஏதாவாதொரு தீர்மானம் இன நல்லறவுக்கு குந்தகமாக அமையும் பட்சத்தில் அதற்கெதிராக நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டால் நீதி மன்றத்தின் உத்தரவுக்கு ஜனாதிபதி கட்டுப்பட வேண்டும்.
ஐஐ. ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களாகும்.
ஐஐஐ. ஒரு ஜனாதிபதி இரண்டு தடவைகளுக்கு மேல் பதவி வகிக்க முடியாது.
ஐஏ. உப ஜனாதிபதிகளாக இருவர் இருப்பர். ஒருவர் முஸ்லிம் மற்றவர் தமிழ் சமூகத்தை சேர்ந்தவர். இவர்கள் பதிவு செய்யப்பட்ட கட்சிகளை சேர்ந்தோராக இருக்க வேண்டும். இவர்களை ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து தெரிவு செய்ய வேண்டும்.

2. தேர்தல் சீர்திருத்தம்
1. உள்ளுராட்சி தேர்தல் முறை என்பது வட்டாரம் மற்றும் விகிதாசார தேர்தல் முறைமை கொண்டதாக அதாவது  50 க்கு 50 என்றிருக்க வேண்டும். அத்துடன் புதிய தொகுதிகள் வட்டாரங்கள் உருவாக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கக்கு வெளியே உள்ள சிறு பான்மை மக்களின் நலனை கருத்திற் கொண்டு முஸ்லிம்களுக்கும் தமிழ் மக்களுக்குமாக  மேலதிக வட்டாரங்கள் ஒவ்வொரு தொகுதிக்குள்ளும் உருவாக்கப்பட வேண்டும். ஐந்து வீதத்துக்கும் கீழ் சிறுபான்மை மக்கள் வாழும் கிராமங்களின் சிறு பான்மை மக்களை ஒன்றிணைத்து இவ்வட்டாரங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

2. புதிய தொகுதிகள் பல உருவாக்கப்பட வேண்டும். அவற்றில் அக்கரைப்பற்று, காத்தான்குடி, கிண்ணியா, ஆகிய தொகுதிகளாக்கப்பட வேண்டும்.

3. பாராளுமன்ற தேர்தல் என்பது விகிதாசார முறைப்படியே இருக்க வேண்டும். அனைத்து தொகுதிகளுக்கும் உறுப்பினர் தேவை என்பதை கருத்திற் கொண்டு இரண்டு தொகுதிகளை ஒரு தேர்தல் மாவட்டமாக கருதி அதற்கேற்றாற் போல் பாராளுமன்ற அங்கத்துவம் பகிரப்பட வேண்டும் அத்துடன் தேர்தல் மூலம் 200 பேரும் தேசிய பட்டியல் மூலம் 30 பேரும் நியமனம் பெறுவர். அத்துடன் சமயத்தலைவர்கள் 10 பேர் ஜனாதிபதியினால் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும். இவர்கள் முறையே பௌத்த துறவி  ஐவர், இந்து குருக்கள்  மூவர், மௌலவிமார் இருவர், கிறிஸ்தவர் பாதிரி ஒருவர். நியமிக்கப்படும் சமயத்தலைவர்கள் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் பதிவு செய்யப்பட்ட ஏதாவது அரசியல் கட்சியை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். அரசியல் கட்சியை சாராத ஒருவரால் அரசியல் ரீதியில் பேச முடியாது போகும்.

ஆக பாராளுமன்ற மொத்த உறுப்பினர்கள் 240.

4. இனப்பிரச்சனைக்கான தீர்வு:
1. வடக்கும் கிழக்கும் எக்காரணம் கொண்டும் மீண்டும் இணைக்கப்படக் கூடாது.
2. எம்மை பொறுத்த வரை மாகாண சபைகள் தேவையற்றவை என்பதால் அவை கலைக்கப்பட்டு மூன்று தேர்தல் தொகுதிகளுக்கு ஒரு சபை என்ற வகையில்  மாவட்ட சபைகள் உருவாக்கப்பட்டு அவை மாகாண சபை சட்டத்தின் கீழ் இயங்க வேண்டும். இதன் மூலம் மக்களுக்கான சேவைகள் செயலுறுப்பெறும். இந்த சபைகளுக்கான தேர்தல் ஐந்து வருடங்களுக்கொரு முறை விகிதாசார முறையில் நடத்தப்படும்.
3. அப்படித்தான் மாகாண சபைகள் இருக்க வேண்டும் என்றால் பிரிந்த வடக்கு கிழக்கின் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பிரதிநிதிகள் விரும்பினால் கிழக்கில் உள்ள தமிழ் பெரும்பான்மை பிரதேசங்களை வடக்குடன் இணைக்க முடியும். அதே போல் அம்பாரை மாவட்ட சிங்கள மக்களின் பிரதிநிதிகள் விரும்பினால் அம்மக்கள் ஊவா மற்றும் மத்திய மாகாணத்துடன் இணைந்து கொள்ள முடியும். அதே போல வட மாகாண முஸ்லிம் பிரதிநிதிகள் விரும்பினால் வட மாகாண முஸ்லிம் பிரதேசங்களை ஒன்றிணைத்து தனி பிராந்திய சபை ஒன்றை வழங்க வேண்டும். இவை சாத்தியப்படாது என கருதினால் கிழக்கு கிழக்காகவே இருக்க வேண்டும்.
4. வடக்கையும் கிழக்கையும் இணைத்து விட்டு தனி அலகொன்று முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் என்ற கபடத்தனமான திட்டத்தை முற்றாக நாம் மறுக்கின்றோம். இது கிழக்கு முஸ்லிம்களை இன்னொரு இனத்துக்கு அடிமையாக்க முயல்வதாகும்.
5. கல்முனை கரையோர மாவட்டம் என்ற சொல்லை நாம் மறுப்பதுடன் கல்முனை தேர்தல் மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறோம். இதற்குள் கல்முனை, சம்மாந்துறை, புதிதாக உருவாக்கப்படும் அக்கரைப்பற்று என்பன உள்ளடக்கப்பட வேண்டும்.
6. வட மாகாண முஸ்லிம்கள் அனைத்து நஷ்டஈடும் வழங்கப்பட்டு மீள் குடியேற்றப்பட வேண்டும்.  அவர்கள் வெளியேற்றப்படு முன் அவர்களுக்கென இருந்த சகல நிலங்களும் அவர்களிடம் வழங்கப்பட வேண்டும்.
7. இலங்கை பல்தேசிய இனங்களினதும், மதங்களினதும் தாயக பூமியாகும். ஆகவே சகல மதங்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டும். எந்தவொரு மதத்துக்கும் இனத்துக்கும் எதிராக மனிதாபிமானமற்ற முறையில் எவராவது அவமரியாதை செய்தால் அவருக்கெதிராக சம்பந்தப்பட்ட மதத்தின் அமைச்சு வழக்குத்தொடர வேண்டும்.
8. மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதி தலைமையில் இணக்க சபை உருவாக்கப்பட வேண்டும். அதில் ஒவ்வொரு மதங்களிலிருந்தும் 40 வயதுக்கு மேற்பட்ட சமயத்தலைவர்கள் ஐவர் வீதம் இருக்க வேண்டும். அவர்கள் ஏதாவது அரசியல் கட்சிகளிலிருந்து தெரிவு செய்யப்பட வேண்டும். பொதுவாக அரசியல் நலன்களுக்காகவே இனவாதம், மதவாதம் பேசப்படுவதால் கட்சி சார் சமயத்தலைவர்கள் கொண்ட இணக்க சபை மூலமே அவர்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த முடியும்.

5. வேட்பாளருக்கான தகுதி:
ஐ. அனைத்து தேர்தலிகளினதும் வேட்பாளர்களும் ஆக குறைந்தது ஏதாவது கல்வித்துறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கல்வி நிறுவனத்தில் டிப்ளோமா பெற்றிருக்க வேண்டும்.
ஐஐ. வேட்பாளர் பட்டியலில் இடம் பெறுபவர் செலுத்தும் பணம் கட்சியாயின் ஆயிரம் ரூபாவும் சுயேற்சையாயின் இரண்டாயிரம் ரூபாவுக்கு மேற்படக்கூடாது. இதனை அதிகரிப்பது ஜனநாயக தேர்தலில் போட்டியிடும் ஏழை மக்களின்; ஜனநாயக உரிமை மீறலாக நாம் காண்கிறோம்.
ஐஐஐ. வேட்பாளர் பட்டியலில் குறிப்பிட்ட அளவு இளைஞர்கள், பெண்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்பது நீக்கப்பட வேண்டு;ம். சில சபைகளில் இளைஞர்களை விட முதியவர்கள் சிறந்த சேவைகளை செய்வதையும், இளைஞர்களே பெரும்பாலும் துஷ்பிரயோகத்தில் ஈடு படுகிறார்கள் என்பதையும் யதார்த்தத்தில் காண்கிறோம். ஆகவே வேட்பாளர் பட்டியல் என்பது முழுக்க முழுக்க இளைஞர்களையும் கொண்டிருக்கலாம் முதியவர்களையும் கொண்டிருக்கலாம். இதில் வரையறை தவிர்க்கப்பட வேண்டும்.
ஐஏ. வெளிநாட்டில் வாழ்வோhருக்கான வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும். அவர்கள் தமது வாக்குகளை தேர்தல் திணைக்களத்துக்கு ஒன்லைன் மூலமாக அவர்களின் சொந்த ஈ மெயில் மூலமாக அளிக்கும் வiகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

தலைவர்  

மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
முஸ்லிம் உலமா கட்சி
0777570639

Comments

Popular posts from this blog

*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்

*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்* *(தொடரும்)* 146.23.11.2017அரசாங்க  தேசிய பாடசாலையான கண்டி மகளிர் உயர் பாடசாலைக்குநியமனம் பெற்று சென்ற  முஸ்லிம் ஆசிரியைக்கு பாடம் நடத்தஅதிபர் மறுப்பு வெளியிடப்பட்டது. http://www.madawalanews.com/2017/11/blog-post_373.html 145. காலி – தூவ பிரதேசத்தில் அமைந்துள்ள சமகிவத்தை குடியிடுப்பு பகுதியிலுள்ள முஸ்லிம் நபரொருவரின் வீடொன்றின்  மீது அதிகாலை வேளையில், பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.  http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_912.html 144. 20.11.2017 வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் அதிகாலை 1.20 மணியளவில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியது. http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_180.html 143. 17.11.2017    300க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் பல குழுக்களாகப் பிரிந்து கிந்தோட்டைக்குப் பிரவேசிக்கும் பாதைகளை எல்லாம் இடைமறித்த வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் பிரவேசித்து இரவு 9.30 மணியளவில் தம

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313