BREAKING NEWS

இஸ்லாத்தை அரசியல்மயப்படுத்தியது யார் ?


அறபு மூலம்: கலாநிதி யூஸுப் அல்கர்ழாவி
தமிழில்:  எஸ் .எம் .மஸாஹிம் (இஸ்லாஹி )

இஹ்வான்களை நோக்கி முன்வைக்கப்படும் பழைய, புதிய குற்றசாட்டு  இஹ்வான்கள்  '' தீனை (மார்க்கத்தை) அரசியல்மயப்படுத்துகிறார்கள் " என்பது அல்லது ''அரசியலுடன் மார்க்கத்தை கலக்கிறார்கள்'' என்பது அல்லது மார்க்கத்தை அரசியலுக்குள் அரசியலை மார்கத்துக்குள் புகுத்துகிறார்கள்  என்ற குற்றச்சாட்டு

ஆட்சியாளர்களில் ஒருவர் ஒரு நாள் கூறியிருந்தார்  அரசியலில் மார்க்கம் இல்லை , மார்க்கத்தில் அரசியல் இல்லை என்று .

அண்மைய ஆண்டுகளாக பேச்சுக்களிலும் ,எழுத்துக்களிலும் ''அரசியல் இஸ்லாம்'' என்ற சொற்தொடரை   பார்க்கிறேன் -இதன் மூலம் அவர்கள் நாடுவது இஸ்லாம், அல்லாஹ் இறக்கியவற்றைக்  கொண்ட  ஆட்சியை நோக்கி அழைப்பதை,   அதை நம்பிக்கை கொண்டவர்கள் மத்தியில் ஷரீயாவை நிலைநாட்டுவதை  ,   இஸ்லாத்தின் பூமியை விடுவிப்பதை , அதன் மீதான அத்துமீறல்  அனைத்தையும் எதிர்த்தலை  , அறபு  சமூகம் , இஸ்லாமிய சமூகம்  ஆகியவற்றை ஒன்றுபடுத்த செயலாற்றுதலை  - அல்லது குறைந்த பட்சம் - ஒருவருக்கு ஒருவர் எதிராக செல்லாது அல்லது ஒருவர் மற்றவரை தாக்குவதை விட்டும் அதன் மத்தியில் நெருக்கத்தை ஏற்படுதுவதை .

அவர்கள் விளக்கும்போது - இஹ்வான்களின் எதிர்தரப்பினர்  - அரசியல் இஸ்லாத்தின் உள்ளடக்கம் தொடர்பில்   நாம் கூறியவற்றுடன்  நிறுத்திக்கொள்ளாமல் வேறு அர்த்தத்தையும் அதில் சேர்ந்துவிடுகிறார்கள் வன்முறை ,கண்மூடித்தனமான கொலை, அப்பாவிகளை  அச்சுறுத்தல், மற்றவர்களுக்கு எதிரான  சகிப்பின்மை,  இறந்தகாலத்தை  நோக்கி போதல் , நிகழ்காலத்துடன் தொடர்பற்று  இருத்தல் , எதிர்காலம் பற்றிய  பார்வை இன்றி இருத்தல் ஆகியவையாம் .

அரசியல் -இஸ்லாத்தின் ஒரு பகுதி என்றும்  அதில்  இருந்துதான் அரசியல் பெறப்பட்டது என  நீங்கள் ஒப்புகொண்டால் அந்த வெளிச்சத்தில் பயணித்தால் உங்களுடன்  தொடர்புபடாத வற்றை உங்களுடன் தொடர்பு படுத்துவார்கள்  வன்முறையின் ,பயங்கரவாதத்தின் ,இரத்தஓட்டலின் ஆதரவாளர்கள் என உங்களுக்கு  எதிராக தீர்ப்பு வழங்குவார்கள் .

இங்கு நான் ஒரு விடயத்தை கூற விரும்புகின்றேன்    இஹ்வான்கள் மார்க்கத்தை (இஸ்லாத்தை ) அரசியல்மயப்படுத்தியவர்கள் இல்லை, ஆனால் இந்த மார்க்கத்தை  சட்டமாக ஆக்கியவன் ,சர்வ வல்லமையுள்ள அல்லாஹ் அவன்தான் அரசியலுடன் தொடர்பான சட்டங்களை ஆக்கும்போது இந்த மார்க்த்கதை அரசியல்மயப்படுத்தியவன்.

அல்லாஹ்வின் வேதத்தில் உள்ள கீழ் காணும் இரு வசனங்களையும் நாங்கள் அரசியல் பகுதியில்  உள்ளதாக கருதாவிட்டால் அவற்றை எந்த பகுதியில் உள்ளதாக நாம்  கருதுவது என்பதை உங்கள் இறைவனுக்காக எனக்கு அறியத்தாருங்கள்.

4:58   اِنَّ اللّٰهَ يَاْمُرُكُمْ اَنْ تُؤَدُّوا الْاَمٰنٰتِ اِلٰٓى اَهْلِهَا ۙ وَاِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ اَنْ تَحْكُمُوْا بِالْعَدْلِ‌ ؕ اِنَّ اللّٰهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهٖ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ سَمِيْعًۢا بَصِيْرًا 

4:58. நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.4:59   يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْـعُوا اللّٰهَ وَاَطِيْـعُوا الرَّسُوْلَ وَاُولِى الْاَمْرِ مِنْكُمْ‌ۚ فَاِنْ تَنَازَعْتُمْ فِىْ شَىْءٍ فَرُدُّوْهُ اِلَى اللّٰهِ وَالرَّسُوْلِ اِنْ كُنْـتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَـوْمِ الْاٰخِرِ‌ ؕ ذٰ لِكَ خَيْرٌ وَّاَحْسَنُ تَاْوِيْلًا 

4:59. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.- ஸூரத்துல் நிஸா, 58 59


இமாம் இப்னு தைமியா தனது ''ஆள்பவன்,  ஆளப்படுபவனின்  சீராக்கலில் அரசியல் ஷரியத்''  என்ற கிதாபில்  முக்கிய கருப்பொருளாக மேற்குறிப்பிட்ட இரு ஆயத்துக்களையும் பயன்படுதியுள்ளார்கள். .

அதன் பின்னர் (கீழ்காணும் )வந்த ஆயத்  வசனங்கள்  அல்லாஹ்விடமும் ,அவனின் தூதரிடமும் தீர்ப்பு கோருவதை  கட்டாயமாக்குகிறது (வாஜிப்) அல்லாஹ்வின் வார்த்தையால் அது (தீர்ப்பு கோருவது கட்டாயம் என) முத்திரையிடப்பட்டுள்ளது. .

4:65   فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُوْنَ حَتّٰى يُحَكِّمُوْكَ فِيْمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوْا فِىْۤ اَنْفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوْا تَسْلِيْمًا 

4:65. உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்.

இது போன்று அல்லாஹ் ஸூரத்துல் நூரில்  கீழ்வருமாறு கூறுகிறார்24:51   اِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِيْنَ اِذَا دُعُوْۤا اِلَى اللّٰهِ وَرَسُوْلِهٖ لِيَحْكُمَ بَيْنَهُمْ اَنْ يَّقُوْلُوْا سَمِعْنَا وَاَطَعْنَا‌ؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ 

24:51. முஃமின்களிடம் அவர்களுக்கிடையே (ஏற்படும் விவகாரங்களில்) தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்கள் சொல்(வது) எல்லாம் “நாங்கள் செவியேற்றோம், (அதற்குக்) கீழ்படிந்தோம்” என்பது தான்; இ(த்தகைய)வர்கள் தாம் வெற்றியடைந்தவர்கள்.

இந்த ஆயத்துக்கள், இது போன்ற ஆயத்துக்கள் அரசியலில் இதயமாக அதை விட அரசியலின் அடித்தளமாக காணப்படவில்லையா ? (இவை) அரசுக்கும் ,சமூகத்துக்கும் உயர்வான மூலத்தை வரையருப்பதுடன்  தொடர்பு படவில்லையா ?.

பயன் இன்றி கதைத்துகொண்டிருக்கும் இவர்கள் மார்க்கத்தை அரசியல்மயப்படுத்தும் ஸூரத்துல் மாயிதாவில் வரும் வசங்கள் பற்றி என்ன கூறுகிறார்கள் ?

وَمَنْ لَّمْ يَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْكٰفِرُوْنَ
எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காபிர்கள்தாம். –(மாயிதா:44)

وَمَنْ لَّمْ يَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ 
எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்களே! (மாயிதா:45)

وَمَنْ لَّمْ يَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ 
இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள்.- (மாயிதா:47)

இவர்கள் ( பயன் இன்றி கதைத்துகொண்டிருப்பவர்கள்)  இந்த வசனங்கள் இன்ஜீல் ,தவ்றாத் ஆகியவற்றை தீர்ப்புக்கு பயன்படுத்துவது தொடர்பில் வேதத்தை உடையவர்களுக்கு இறக்கப்பட்டது என கூறுவார்கள் !!

 நாம் அவர்களுக்கு கூறுவோம் ஆம் , அப்படிதான் (அது வேதத்தை உடையவர்களுக்கு இறக்கப்பட்டது) ஆனால் அதன் படிப்பினை ( சட்டம் )பொதுவான சொற்களில் வருகின்றது ( சட்டம் பொதுவானது ) அது ஒரு குறித்த காரணத்துடன் (மட்டுப்படுத்தி )வரவில்லை (என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்)

(இங்கு யூஸுப் அர்ழாவி படிப்பினை, பொதுவான சொற்களில் உள்ளது குறிப்பான காரணத்தில் அல்ல என்ற  ( العبرة بعموم اللفظ لا بخصوص   السبب )   பிக்ஹு  காயிதாவை  பயன்படுத்தி பதில்வழங்கியிருக்கிறார்)


முஸ்லிம்களுக்கு   அல்லாஹ் இறக்கியது, வேதத்தை உடையவர்களுக்கு இறக்கப்பட்டது அல்லாததா ? அல்லாஹ் இறக்கியதை அவர்கள் கைவிடும்போது அவர்கள் காபீர்களாகவும் , பாவிகளாகவும் , அணியாகக் காரர்களாகவும் இருந்தார்கள் (ஆனால்)     முஸ்லிம்களுக்கு இறக்கிய  அல் குர்ஆனை அதில் இருந்து தீர்ப்பு பெறுவதை முஸ்லிம்கள் விட்டுவிட்டால்   அவர்கள் நிராகரிப்பாலும், பாவத்தாலும், அணியாயத்தாலும்  வர்ணிக்கப்படுவதில்லையா?

அல்லாஹ் இரண்டு விதமாக (சட்டத்தை)  பிரயோகின்றானா ? இன்ஜீல் ,தவ்றாத்தை பெற்றவர்கள் அவர்கள் தங்கள்  வேதத்தை விட்டுவிடும்போது அவர்களுக்கு மேற்குறிப்பிட்ட மாதிரியான தீர்ப்பும் ,  முஸ்லிம்கள் அவர்களின் வேதமான அல் குர்ஆனை விட்டுவிடும்போது அவர்களுக்கு முன்பிருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு வழங்காது இருக்கிறானா ?

 அப்படியானால் மனிதர்கள் மீதான அல்லாஹ்வின் நீதி எங்கே ??( என்ற கேள்விஎழுகிறது)

அல் குர்ஆனை யார்   வாசிக்கிறார்களோ அவர்கள் அதில் அதிகமான உள்நாட்டு அரசியல் ,வெளிநாட்டு அரசியலுடன் தொடர்பான ஆயத்துக்களையும் யுத்தகாலத்தில், சமாதான் காலத்தில் மற்றவர்களுடனான தொடர்புகள் பற்றிய ஆயத்துக்களையும் காண்பார்கள்.  அல் குர்ஆனுடன் குறைந்த பரிச்சயம் உள்ளவர்களுக்கும் அவை மறைந்தாக இருக்காது.

நாங்கள் மக்கிய (மக்கா கால) அல்குர்ஆன் வசங்கள்  , முஸ்லிம்களை ( எண்ணிக்கையில் குறைந்தவர்களாகவும்,பலவீனர்களாகவும்  இருந்தபோது  ) அவர்களை சூழவுள்ள அரசியல்  மற்றும்  சர்வதேச  இராணுவ போராட்டங்களுடன்   தொடர்பு படுத்துவதை பார்க்கிறோம்.

இரு பெரும் நாடுகள் உலக இறைமை தொடர்பில் தமக்குள் மோதிக்கொண்டன ,கிழக்கில் பாரசீக பேரரசும் மேற்கில் கிரேக்க பைசண்டைன் பேரரசுமே அவை - முஸ்லிம்களும் ,முஷ்ரிக்கீன்களுக்கும் இடையில் எதிர்காலம் தொர்பிலும் இறுதியில் யார் வெற்றிபெறுவார்கள் என்பது பற்றியும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன இதில் அல் அல்குர்ஆன் தலையீடு செய்திருந்தது. .

முஸ்லிம்கள் ரோமர்களுக்கு ஆதரவாக இருந்தார்கள் ஏனெனில் ரோமர்கள் வேதத்தையுடைய கிறிஸ்தவர்களாக இருந்தார்கள் அவர்கள் முஸ்லிம்களுக்கு நெருக்கமானவர்கள் ,முஷ்ரிக்கீன்கள்  பாரசீக பேரரசுக்கு ஆதரவாக இருந்தார்கள்  ஏனெனில் அவர்கள் நெருப்பு வணங்கிகளாக இருந்தார்கள் அவர்கள்  சிலைவணக்கத்துக்கு  நெருக்கமவர்கள் .

முஸ்லிம்களை ஆதரித்து அல்குர்ஆன் ஸூரத்துல் ரோமியில் ஆரம்ப வசனங்கள் இறங்கியது


30:2   غُلِبَتِ الرُّوْمُۙ ,فِىْۤ اَدْنَى الْاَرْضِ وَهُمْ مِّنْۢ بَعْدِ غَلَبِهِمْ سَيَغْلِبُوْنَۙ 

 ரோம் தோல்வியடைந்து விட்டது.அருகிலுள்ள பூமியில்; ஆனால் அவர்கள் (ரோமர்கள்) தங்கள் தோல்விக்குப்பின் விரைவில் வெற்றியடைவார்கள்.சில வருடங்களுக்குள்ளேயே! (இதற்கு) முன்னும், (இதற்கு) பின்னும், (வெற்றி தோல்வி குறித்த) அதிகாரம் அல்லாஹ்வுக்குத்தான்; (ரோமர்கள் வெற்றி பெறும்) அந்நாளில் முஃமின்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

யார்  நபியின் ஸுன்னாவை படிகிறார்களோ அவர்கள் நபிகளாரின் ஷிராவில் அவரின்  செயல்பாட்டில்   (அரசியல் செயல்பாட்டை  ) தெளிவாக காண்பதை போன்று ,  இதை ( அரசியல் தொடர்பான வற்றை ) சுன்னாவில் கூடிய விளக்கத்துடன் கண்டுகொள்வார்கள் ,

இமாம் அல் கிறாபி (ரஹ்மஹுல்லாஹ்) வின் வார்த்தைகளில் கூறும்போது (நபியவர்கள்) அவர்கள் உயர் அறிவுடைய முப்தியாகவும் ,சட்டத்தின் நீதிபதியாகவும் இருந்ததை போன்று மிகப் பெரும் இமாமாக இருந்தார்கள். இங்கு ''மிகப்பெரும் இமாம்'' என்பது நாட்டின் அதியுயர் தலைவர் முரண்பாடு இல்லாத நிலையில் அவர் அப்படி இருந்தார், அவர் தீன் மற்றும் அழைப்பு விடயத்துக்கு தன்னை முழுமையாக அர்பணித்தவராக இருந்த போதும் அவருக்கு அருகாமையில் அரசியலை நிர்வகிக்க வேறுஒரு  தலைவரோ ,மன்னனோ இருக்கவில்லை , மாறாக அவர் கையில் நாடும் , அழைப்பும் இருந்தது . அவர் தொழுகையில் மனிதர்களுக்கு தலைமை வகிப்பவராகவும் , யுத்தத்திலும் ,சமாதானத்திலும் அவர்களை வழிநடாத்துபவராகவும் இருந்தார் ,அவர் ஒப்பந்தங்களை செய்தார் ,  தூதுக் குழுக்களை அனுப்பினார் ,கவர்னர்கள் மற்றும் நீதிபதிகள் , ஆசிரியர்களை நியமிக்கிறார், அவர்களை இஸ்லாத்தின் பால் வந்த நாடுகளுக்கு அனுப்பிவைத்தார்.

 ஷரீயாவின் அரசியல் பிக்ஹில்  நன்கு அறியப்பட்ட   ''நபித்துவ செயல்களில் தஸற்றுபாத் ''  ஒரு வகை  அதை சட்டவல்லுனர்கள்
 இமாமத்துக்கு கீழ் வரும் நபித்துவ     செயல் ,என கூறியுள்ளார்கள்  அதாவது அரசுக்கான அதிஉயர் தலைமைத்துதுவத்துக்கு கீழ் வரும் “”செயல்””( தஸற்றுப்).

இது அல்லாஹ்வை பற்றிய தப்லீக்கிற்கு கீழ் வரும்   “”செயல்கள்”” போன்றது அல்ல ,இது ஹதீஸ் ஒன்றில் அவர்கள் கூறியதைப் போன்றது  "யார் இறந்த நிலத்தை உயிர்ப்பிக்கிறாரோ (வளப்படுத்துகிறாரோ) அது அவருக்கு''- (அல்லாஹ்வின் தூதர் கூறியது)

'இது இமாம் அபூ ஹனீபாவும் அவருடன் (கருத்தில் ) உடன்பட்டவர்களும் கூறியதை போன்றது :(அதாவது )இது அவரின் இமாமத்தின்(நபியின் ) கீழ் அவர் கூறியது என கூறுகிறார்கள் : (மேற்கண்ட ஹதீஸை அவர் விளக்கும்போது )எவரும்  உயிர்ப்பித்த நிலத்தை  இமாமின் அனுமதி இன்றி சொந்தமாகக்கிக் கொள்ள முடியாது  என விளக்கியுள்ளார்கள்.  


எல்லா மத்ஹப்புகளின் சட்ட வல்லுனர்களும் அல்ஷரியத் என்பது  அனைத்து  பொறுப்பு சாட்டப்பட்டவர்கள் (மக்களின் நடத்தைகள் ) )மீதான ஒரு தீர்ப்பு ஆகும் அதில் இருந்து எந்தவொறு செயலும் (நடத்தையும்)- எந்த நிலையிலும் - ஷரியாவின் வட்டத்தில் இருந்து   விளகிக் கொள்ளாது, ஷரியாவின் நன்கு அறியப்பட்ட ஐந்து (வாஜிப் ,மன்தூப் , முஹர்ரம் ,மக்ரூஹ் ,முபாஹ் )சட்டங்களில் இருந்து ஒரு சட்டத்தின் மூலம் கட்டாயம் தீர்ப்பு வழங்க வேண்டும் என தீர்மானித்துள்ளார்கள்.

அல் குர்ஆன் இந்த (ஷரீயாவின் )முழுமைத் தன்மையை நபியுடன் உரையாடும்போது உறுதிப்படுத்துகிறது - وَنَزَّلْنَا عَلَيْكَ الْـكِتٰبَ تِبْيَانًا لِّـكُلِّ شَىْءٍ وَّ هُدًى وَّرَحْمَةً وَّبُشْرٰى لِلْمُسْلِمِيْنَ
இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம்.-நஹ்ல் 16:89

அதேபோன்று ஸூரத்துல் யூஸுபின் இறுதிப் பகுதியில் அல்லாஹ் இப்படிக் கூறுகிறான் ....

(لَقَدْ كَانَ فِي قَصَصِهِمْ عِبْرَةٌ لِّأُوْلِي الأَلْبَابِ مَا كَانَ حَدِيثاً يُفْتَرَى وَلَـكِن تَصْدِيقَ الَّذِي بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيلَ كُلَّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً لِّقَوْمٍ يُؤْمِنُونَ ) (يوسف).  12:111. (நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது; இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை, மாறாக இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது.

தர்ஜுமானுள் குர்ஆன் என வர்ணிக்கப்படும் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் நான்  ஒட்டகத்தின் தலைப்பட்டி தொலைந்தாலும் அதை அல்லாஹ்வின் வேத நூலில் கண்டு கொள்வேன் என்ற அளவுக்கு அதன் முழுமைத் தன்மையை கூறியுள்ளார்கள் .


சீஷருக்கு உரியதை சீஷருக்கும் அல்லாஹ்வுக்கூறியதை அல்லாஹ்வுக்கும் விட்டுவிடுங்கள் என(இன்ஜீல் ) பைபிள் சொல்கிறது என்றால் அல் குர்ஆன் சீஷரையும் சீஷருக்கு உரியதையும்  ஏக ஒரு அல்லாஹ்வுக்கு மட்டுமே என கூறுகிறது  - இதை அல் குர்ஆன் இப்படிக் கூறுகிறது -

قُلْ اِنَّ الْاَمْرَ كُلَّهٗ لِلّٰهِ‌ؕ
“நிச்சயமாக இக்காரியம் முழுவதும் அல்லாஹ்விடமே உள்ளது” என்று (நபியே!) நீர் கூறுவீராக!- 3: 154

பூமியில் உள்ளவர்களும் ,வானங்களில் உள்ளவர்களும் ,பூமியில் உள்ளவைகளும்  ,வானங்களில் உள்ளவைகளும் அல்லாஹ்வுக்கே உரியன அவர்கள் மீது அவன்  ஆட்சி  செலுத்துகிறான்

அவனுடைய கட்டளைக்கு அவர்களின் அடிபணிவையும் அவர்களின் அடிமைத்தனத்தை அவனுக்கு வெளிபடுத்தி  முழுமையாக கட்டுபாட்டை அவனுக்கு வழங்குவது அவர்களுக்கு கடமையாகும்.

தீன் என்பது ஷரியாவின் பொறுப்புகளின்/கடமைகளின்   கட்டடம்  நிலைகொண்டுள்ள ஐந்து அல்லது ஆறு  முக்கியஅம்சங்களில் ஒன்றாகும் என அடிப்படையியலாளர்கள் (ஷரீயா சட்டத்துறை அறிஞர்கள்)   முடிவு செய்துள்ளனர், அவை தீன்( தீனை பாதுகாத்தல் ) ,ஆன்மா ( ஆன்மாவை பாதுகாத்தல்) , சந்ததி ( சந்ததியை பாதுகாத்தல் ), சிந்தனை( சிந்தனையை பாதுகாத்தல் ), பொருளாதாரம் ( பொருளாதாரத்தை பாதுகாத்தல் ), சிலர்  மானம்  (மானத்தை  பாதுகாத்தல் ) என்பதையும் சேர்த்திருக்கிறார்கள்.

தீனுக்குள் மட்டும் இஸ்லாத்தை சுருக்கிக்கொள்ள விரும்புகின்றவர்கள் ,அடிப்படையியலாளர்கள் ஷரியாவின் ஒன்று பட்டிருக்கும் இந்த ய தார்த்தத்தை மறந்து விடுகிறார்கள் .

இஸ்லாத்தின் முழுமை என்பது இஹ்வான்களின்  கண்டுபிடிப்பு  அல்ல , மாறாக அல் குர்ஆன், அஸ்ஸுன்னாஹ் என்பன அதனை முடிவு செய்துள்ளன  அதன் மீது உம்மத் உடன்பட்டுள்ளது ,அதன் மீது கலாசாரமும் ,நாகரீகமும் நிறுவப்பட்டுள்ளது ,வரலாறு மற்றும் பாரம்பரியம் அதைக் கொண்டு பறந்து விரிந்துசென்றுள்ளது.

முஸ்லிம் உம்மாவின் ஆகாயத்தில் மின்னும்  நட்சத்திரங்களை பதித்த அனைந்து சீர்திருத்தவாதிகள் அதன் மூலம் , இன்றைய நவீன சமுதாயத்தில் எழுச்சியை ஏற்படுத்த முயற்சித்தவர்கள் அனைவரும் மார்கத்தினுள்    அரசியலை  புகுத்தியுள்ளார்கள் ,அரசியலுக்குள் மார்கத்தை புகுத்தியுள்ளார்கள். .

முஹம்மது அப்துல் வஹ்ஹாப் , அல் சனூசி ,அல் மஹ்தி ,அல் அமீர் அப்துல் காதர், அல் ஆப்கானி ,அல் கவாகிபி ,மொஹம்மது அப்துஹு , ரஷீத் றிழா ,இப்னு பாதீஸ்  மற்றும் பலரும் (ரஹ்மாஹுல்லாஹ்) மார்கத்தையும் அரசியலையும் ,பிரிக்காத இந்த முழுமயான பார்வையைக் கொண்டிருந்தனர்.
அவர்கள் அனைவரும் மார்க்கத்தை அரசியல்மயப் படுத்துவதில் பங்குகொண்டவர்களாக இருந்தார்கள்.

ஹஸன் அல் பன்னா சீர்திருத்தவாதிகளில் ஒரு புதிய கண்டுபிடிப்பாக இருக்கவில்லை அதேபோல் அவரின்  சீர்திருத்தம் மற்றும் புதுப்பித்தலின்  அழைப்புக்களும் அப்படி    இருக்கவில்லை.

 மார்க்கத்தில் அரசியல் இல்லை அரசியலில் மார்க்கம் இல்லை என அறிவித்த அந்த ஆட்சியாளன்( அண்மையில் இந்த கருத்தை வெளியிட ஆட்சியாளர் ஒருவரை யூஸுப் அல் கர்ழாவி குறிப்பிடுகிறார் ) தனது அரசியலுக்கு ஆதரவாக மார்க்கத்தின் பெயரால்   பேசுவதையும் , அவர் மார்க்க அறிஞர்களிடம் தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தி பத்வா வெளியிடுமாறு கோருவதைதையும் அதிமாக கேட்டும் பார்த்தும் இருக்கிறோம்.

இஸ்லாத்துடன் பினைந்திருப்பவர்கள் மற்ற குடிமக்களை போன்றவர்களே அவர்கள் தமது நம்பிக்கை ,மற்றும் புரிதலுக்கு  ஏற்ப அரசியலில் ஈடுபட உரிமை உடையவர்கள் அவர்களின் மார்க்க ஈடுபாட்டை காரணமாக காட்டி அவர்களை அதில் இருந்து தடுக்க முடியாது

நிச்சயமாக முஸ்லிம் அவனது றப்பை இபாதத் செய்வதில் மூழ்கி இருக்கும்போது அரசியலின் ஆழத்தினுள் நுழைய முடியும்,    குனூதுல் நவாசிளில்   அதைத்தான் நாங்கள் காண்கிறோம், முஸ்லிம் அவனது தொழுகையில்  பலஸ்தீன் மீது அத்துமீறும் சியோனிசத்துக்கு எதிராகவும் , பொஸ்னியா கர்ஷக் ,கொசோவோ மீது அத்துமீறும் செர்பியாவுக்கு எதிராக அல்லது முஸ்லிம்களின்  புனிதத்தன்மையை எதிராக அத்துமீறும்  எவருக்கு எதிராகவும்   துவா கோர  முடியும்.

ஒரு முஸ்லிம்  அல் ஜிஹாத் , நீதியை நிலைநாட்டல்  அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பு வழங்கல் , என வாழ்க்கையின்  பல்வேறு துறைகளில்  உள்ளடக்கிய  ஆயத்துகளை கொண்ட அல்  குர்ஆனை அவனுக்கு ஓத முடியும் எவருக்கும் அவனை  எதிர்க்க முடியாது என்பதை போன்றுதான் (அரசியலில் ஈடுபடுவதும்)

 ஏனைய குற்றசாட்டுகள் நீங்குவதைப்  போன்று இதன் மூலம் இஹ்வான்களை  விட்டும் தீனை அரசியல்மயப்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டு நீங்குகிறது.

(நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக. 17:81.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar