அஷ்ரப் ஏ சமத்
சாய்ந்தமருது வீ. கெயாா் போ யு பவுண்டேசன் தலைவா் சர்ஜூன் அபுபக்கா் தலைமையில் கல்முனை, சாய்ந்தமருதுரர்களில் உள்ள 75க்கும் மேற்பட்ட இறை இல்லங்களில் புனித சேவைகளைச் செய்துவரும் மூஆத்தின்களை கௌரவித்து பெருநாள் உடுப்புக்களை வழங்கிவைத்தது. இந் நிகழ்வு நேற்று(17)ஆம் திகதி வெள்ளிக்கிழமை சா்ஜூன் இல்லத்தில் நடைபெற்றது. வி கெயாா் ஆ போ யு பவுண்டேசனின் ஸ்தாபகா் மா்ஹூம் யு. எல்.எம். அபுபக்கா் அவா்களது நினைவு தினம், துஆப் பிராத்தனை இப்தாா் மற்றும் இராப்போசன நிகழ்வும் நடைபெற்றது. இந் நிகழ்வில் சுகாதார பிரதியமைச்சா் பைசால் காசீம், பாராளுமன்ற உறுப்பிணா் அலி சாகீா் மௌலானா, முன்னாள் பிரதியமைச்சா் எஸ். நிஜாமுத்தீன், முன்னா் மேல் நீதிபதி மைமுனா, கல்முனை முகைதீன்ப ள்ளிவசால்கள் சம்மேளனத் தலைவா் டொக்டா் எஸ்.எம்.ஏ அசீஸ், சாய்ந்தமருது பள்ளிவாசல் செயலாளா் எம். ஏ. மஜீத், கிழக்கு முதலமைச்சரின் இணைப்புச் செயலாளா் எம். ஏ பழில் உட்பட பலரும் கலந்து கொண்டனா்
Post a Comment