Skip to main content

Posts

Showing posts from June, 2016

எம் பி ப‌த‌விக்காக‌ அதுர‌லிய‌ தேர‌ரும் ஞான‌சார‌வும் மோத‌ல்.

 பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் . இவ்விடயத்தில் கட்சி மட்டத்தில் எவ்வித தீர்மானத்தையும் எடுக்க முடியாது . ஞானசார தேரரும் , அத்துரலிய ரத்ன தேரரும் ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்திற்காக செய்துகொண்ட ஒப்பந்தங்கள் ஏதும் கட்சிக்கு தெரியாது என அபே ஜனபல வேகய கட்சியின் தலைவர் சமன் பெரேரா தெரிவித்தார் .  அபேஜன வேகய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் குறித்து எழுங்துள்ள முரண்பாடு குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் . அவர் மேலும் குறிப்பிடுகையில் , கடந்த வருடம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் அபேஜனபல வேகய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகளுக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் ஒதுக்கப்பட்டது . அமைய இந்த ஆசனத்திற்கு அபேஜன பல வேகய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் விமல் திஸ்ஸ தேரர் , அபே ஜன பல கட்சியின் வேட்பாளர்களான தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் , பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார த

ITN ஊடக வலையமைப்பு SD தொழிநுட்பத்திலிருந்து HD தொழிநுட்பத்திற்கு

அஷ்ரப் ஏ சமத் இலங்கையில் முதலாவதாக ஆரம்பிக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி என்ற ரீதியில் ITN ஊடக வலையமைப்பு SD தொழிநுட்பத்திலிருந்து HD தொழிநுட்பத்திற்கு இன்று (30)ஆம் திகதி  முதல் கால்பதிக்கின்றது.. இலங்கையிலுள்ள தொலைக்காட்சி சேவைகளில் இத்தொழிநுட்பமுள்ள ஒரேயொரு ஊடக வலயம் ITN ஊடக வலையமைப்மென்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் உத்தியோகபூர்வமாக  சுபவேலையில்இன்று (30)ஆம் திகதி  ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்துடன் புதிய  எச். டி  தொழில்நுட்ப கட்டிடமும் பிரதமரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஊடக அமைச்சா் கயாந்த கருநாதிலக்க புதிய ஜ.ரீ.என் தலைவா் அத்தாவுட கெட்டி மற்றும் ஊழியா்களும் கலந்து கொண்டனா். 

இப்போது ஒரு படி மேலே போய் இறுதித்தூதர் அவமதிக்கப்பட்டுள்ளார்

முஸ்லிம்களின் உயிரினும் மேலான நபியையும், ஒரே இறைவனான அள்ளாஹ்வையும் பொது பல சேனாவின் செயலாளர் அவமானப்படுத்தியுள்ளதை உலமா கட்சி வன்மையாக கண்டிப்பதுடன் மஹிந்தவை தோற்கடிப்பதற்கு துணை போன பொது பல சேனா நல்லாட்சியின் மீதும் முஸ்லிம்களுக்கு வெறுப்பேற்ற முனையும் வெளிநாட்டு சக்திகளுக்கு துணை போவதாகவே தெரிகிறது என முஸ்லிம் உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார். அண்மைய ஞானசாரரின் கருத்து தொடர்பாக ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த நாட்டில் எந்தவொரு கிளர்ச்சியையும் செய்யாமல் அமைதியாக இருந்த முஸ்லிம்கள் மீது 2012 முதல் பல அடாவடித்தனங்கள் சிங்கள பௌத்த இனவாதிகளால் அரங்கேற்றப்பட்டன. அவ்வேளை இத்தகைய செயல்களில் ஈடு படுவோருக்கெதிராக முன்னாள் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்காததன் காரணமாக உலமா கட்சி அரசாங்க ஆதரவிலிருந்து வெளியேறியது. பின்னர் முன்னாள் ஜனாதிபதியுடன் இருந்த சில இனவாதிகள் ஜனாதிபதி தேர்தலின் போது அவரை விட்டும் விலகியதன் காரணமாகவும் தனக்கு இன்னொரு சந்தர்ப்பம் தந்தால் இனவாதத்தை ஒழித்துக்கட்டுவேன் என அவர்

ஜனாதிபதிக்கு ரிஷாட் கடிதம்!!!

ஞானசார தேரரின் நடவடிக்கைகள் அத்துமீறிவிட்டன . ஜனாதிபதிக்கு ரிஷாட் கடிதம் !!! - சுஐப் எம் காசிம் பொதுபல சேனாவின் செயலாளர் நாயகம் கலகொட அத்த ஞானசார தேரர் இஸ்லாத்தையும் பெருமானாரையும் தொடர்ச்சியாக நிந்தித்து வருவது தொடர்பிலும் அவர் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளும் செயற்பாடுகள் குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவசரக் கடிதமொன்றை எழுதியுள்ளார் . அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது , கடந்த ஆட்சியில் அழுத்கம , பேருவளை பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற அட்டூழியங்கள் அனைத்திற்கும் ஞானசார தேரரே மூல காரணமென ஆதாரங்களுடன் பொலிசாரிடம் தெரிவித்திருந்த போதும் இற்றைவரை எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் அது கிடப்பில் போடப்பட்டு வருகிறது . இந்த அட்டூழியங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை நடாத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டுமெனவும் , முஸ்லிம்களுக்கெதிரான இந்த வன்முறைகள் தொடர்பில் ஆணைக்குழு அமைத்து

ஜக்கிய அமேரிக்காவின் வருடாந்த இப்தாா்

அஷ்ரப் ஏ சமத் ஜக்கிய அமேரிக்காவின் இலங்கையில் உள்ள துாதுவா்  அட்டுல் கேய்சப்  நேற்று(27) வருடாந்த இப்தாா் நிகழவும் இராப்போசன நிகழ்வினையும்  கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் வெகு விமா்சையாக நடாத்தினாா்.  இந் நிகழ்வில் அமைச்சா்கள், முஸ்லீம் மதத் தலைவா்கள், ஊடகவியலாளா்கள், வை.எம்.எம்.ஏ உறுப்பிணா்கள் ஏனைய நாடுகளின் துாதுவா்களும் கலந்து கொண்டனா். அத்துடன் மஹிரிப் தொழுகையும் நடைபெற்றது.

சாய்ந்தமருது மருதம் கலைக்கூடலின் பேரீச்சம்பழம் வழங்கும் நிகழ்வு

-எம்.வை.அமீர் - முஸ்லிம் கலாச்சார அமைச்சின் அனுசரணையுடன் பள்ளிவாசல்கள் ஊடாகவும் ஏனைய சில அமைப்புகள் வழியாகவும் புனித நோன்பு காலத்தில் பேரீச்சம்பழம் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றுவரும் இவ்வேளையில், சாய்ந்தமருது மருதம் கலைக்கூடலின் ஏற்பாட்டில் 2016-06-26 ஆம் திகதி தெரிவுசெய்யப்பட்ட பெண்களுக்கு பேரீச்சம்பழம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. மருதம் கலைக்கூடலின் பிரத்தித் தலைவர் ஸாஹிர் கரீமின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அவ் அமைப்பின் தலைவரும் முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சரும் தபால்துறை அமைச்சருமான எம்.எச்.ஏ.ஹலீமுடைய இணைப்பாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி பிரச்சார செயலாளருமான அஸ்வான் சக்கப் மௌலானா பிரதம அதிதியாக கலந்து உரையாற்றியதுடன் பேரீச்சம்பழங்களையும் வழங்கி வைத்தார். நிகழ்வில் அமைப்பின் செயலாளர் எம்.ஐ.எப்.ஸஜீனாஸ், தபால் அதிபர் முகம்மட் முபாறக் எம்.ஐ.ஜௌபார், எம்.ஆர். ரோஷன், யூ.கே.அஸாம், எம்.ஐ.சித்தீக் மற்றும் தவிசாளர் உவைஸ் முகம்மட் ஆகியோரும் அமைப்பின் நிருவாக அங்கத்தினர்களும் பெண்களும் கலந்து கொண்டனர். குறித்த பேரீச்சம்பழங்கள் சாய்ந்தமருது மருதம் கலைக்

பௌத்த பேரினவாதிகளுடன் மட்டுமல்லாது மற்றவர்களுடனும் போராடவேண்டியுள்ளது. இப்தார் நிகழ்வில் பிரதி அமைச்சர் அமீர் அலி

-எம்.வை.அமீர்- அகதியாக வந்து தற்போது அதிதியாக நமது மனங்களில் வீற்றிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தற்போது பௌத்த பேரினவாதிகளுடன் மட்டுமல்லாது மற்றவர்களுடனும் போராடவேண்டியுள்ளதாக அகில இலங்கை மக்கள்   காங்கிரஸின் தவிசாளரும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சருமான எம்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஸ்மார்ட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் நிகழ்வு அவ்அமைப்பின் தலைவர் கே.ஆர்.றிஸ்கான் முகம்மட் தலைமையில் மாளிகைக்காடு விஸ்மில்லா வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். புலிகளால் துரத்தப்பட்டபோது எவ்வாறு பழைய ரீ சேட்டுடனும் சாரனுடனும் மன்னாரில் இருந்து புத்தளத்துக்கு வந்தாரோ அந்த நிலவரத்திலே இருக்கிற மக்களின் கல்வி விடயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தேசியத்திலே பௌத்த பேரினவாதிகளுடன் மட்டுமல்லாது மற்றவர்களுடனும் போராடவேண்டிய நிலையில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் இருப்பதாக தெரிவித்தார். கடந்த அரசாங்கத்தில்

இன்னும் ஒரு மாதத்தில் நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்- அமைச்சர் றிஷாட்

-எம்.வை.அமீர்- கடந்த  2004  ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி கட ற் பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என கட்டப்பட்ட    நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை, இன்னும் ஒரு மாதத்துக்குள் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக  இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் ,  வணிக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். சாய்ந்தமருது கடலின்   அடிப்பரப்பில் தேங்கியுள்ள சுனாமியினால் கொண்டுசெல்லப்பட்ட ‘கல்’ போன்ற எச்சங்களை துப்பரவு செய்யும் வேலைத் திடடத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் அகில இலங்கை மக்கள்   காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த அம்பாறை மாவடடத்திற்கான இப்தார் நிகழ்வும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்தக   கூட்டுத்தாபானத்தின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் மு.கா.   குழுத்தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தலைமையில்  2016-06-24  ஆம் திகதி அங்குராப்பன நிகழ்வு சாய்ந்தமருது கடற்கரையிலும் இப்தார் நிகழ்வு சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலய முற்றத்திலும்   இடம்பெற்றது. இந்நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் றிஷ

ம‌ஹிய‌ங்க‌னை ச‌ம்ப‌வ‌ம்- உல‌மா க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டித்துள்ள‌து.

ம‌ஹிய‌ங்க‌னை ச‌ம்ப‌வ‌ம் நீதி ம‌ன்ற‌த்தில் இருக்கும் நிலையில் இது ப‌ற்றி ப‌கிர‌ங்க‌மாக‌ பேசி ஆர்ப்பாட்ட‌ம் செய்து இன‌ங்க‌ள் ம‌த்தியில் அச்ச‌த்தை உண்டாக்க‌ முய‌லும் பொது ப‌ல‌ சேனாவையும், அவ‌ர்க‌ளின் ச‌ட்ட‌த்துக்கு முர‌ணான‌ செய‌லை அமைதியாய் பார்த்து ர‌சித்துக்கொண்டிருக்கும் அர‌சின் செய‌லையும் உல‌மா க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டித்துள்ள‌து.  இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் க‌லாநிதி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ள‌தாவ‌து, அண்மையில் ம்ஹிய‌ங்க‌னையில்  இஸ்லாத்தை  பௌத்த‌ ச‌ம‌ய‌த்த‌லைவ‌ர் ஒருவர் தூற்றிய‌மைக்காக‌ முஸ்லிம் இளைஞ‌ர்க‌ள் சில‌ர் பௌத்த‌ கொடியை எரித்த‌மை க‌வ‌லை த‌ரும் செய‌லாகும். இத‌னை முஸ்லிம் ச‌மூக‌ம் வ‌ர‌வேற்க‌வில்லை. ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ இளைஞ‌ர்க‌ள் கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ நிலையிலும் இன‌வாதிக‌ளால் அப்பாவி முஸ்லிம்க‌ள் சில‌ர் தாக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். இத‌ற்காக‌ அர‌சு ச‌ட்ட‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌வில்லை. த‌ற்போது இது விட‌ய‌த்தை பொதுப‌ல‌ சேனா பெரிது ப‌டுத்தி ம‌ஹிந்த‌ அர‌சின் இறுதிக்கால‌த்தின் போது முஸ்லிம்க‌ளுக்கு செய்த‌து போன்ற‌ அநியாய‌ங்க‌ளை இந்த‌ அர‌சிலும்

அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் இப்தார் நிகழ்வு

மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா ஒழுங்கு செய்திருந்த இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வு நேற்று(22) அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான எம்.எச்.எம். மன்ஸில் றீஸா ஸருக்  கொழும்பு மாவட்ட பிரதேச சபையின் முஸ்லிம் உறுப்பினர்கள்இ அமைச்சின் முஸ்லிம் அதிகாரிகள் உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.                               (மினுவாங்கொடை நிருபர்)

வட்டுக்கோட்டைக்கு போகும் வழியைக் கேட்டால் “துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு”

வட்டுக்கோட்டைக்கு போகும் வழியைக் கேட்டால் “துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு” என்கிறார் சி.வி.. றிசாத்தின் மீது வீண்பழி சுமத்தி தாண்டிக்குளம் திட்டத்தை தடுப்பது ஏன்? சுஐப் எம்.காசிம்   வவுனியாவில் பொருளாதார மையம் நிறுவுவதில் ஏற்பட்டுள்ள சர்ச்சை இன்னும் தொடர்கின்றது. இந்தத் திட்டத்துக்கென அரசாங்கம் பல கோடி ரூபா ஒதுக்கியுள்ள போதும், அதற்கான இடத்தை தேர்ந்தெடுப்பதில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஒருபுறமும், வன்னி மாவட்ட எம்.பிக்கள், வன்னியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் மற்றும் விவசாய வர்த்தக சங்கங்கள் மறுபுறமும் நின்று கயிறிழுப்பை நடாத்தி வருகின்றனர். வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தாண்டிக்குளமே பொருத்தமான இடமென தீர்மானிக்கப்பட்டு, ஏகமனதாக முடிவும்   செய்யப்பட்டு உரிய இடம் அடையாளம் காணப்பட்டது. திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் முயற்சிகளுக்கு பின்னர் முதலமைச்சர் தடைக்கல் போட்டார். பொருளாதார மையத்துக்கு தாண்டிக்குளம் பொருத்தமற்ற இடமென அவர் அறிவித்த போதும் அதற்கான வலுவான காரணங்களை வெளிப்படுத்தவில்லை. ஜனாதிபதி,

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய