BREAKING NEWS

Protocol'' அரசியல்.....

''
...............................................
சிங்களத்தில் - அஜித் ஜயசிங்க
தமிழில் - ஸப்வான் பஷீர்
''Protocol'' என்ற ஆங்கில சொல்லிற்கான நேரடி தமிழ் அர்த்தம்
''நெறிமுறை'' என்பதாகும்.ஆனால் ஒருஜனநாயக அரசில்
''Protocol'' என்ற சொல் அரச நிர்வாக,ராஜதந்திர நடவடிக்கைகள்
குறித்த நீதி மற்றும் நெறிமுறைகளைக் குறிக்கிறது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் சாம்பூர்
கடற்படைத்தளத்தின் பொருப்பதிகாரிக்கு ஒரு பாடசாலை
விழாவில் தூற்றும் வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய்ப்
பரவிக்கொண்டு இருக்கின்றது.
குறித்த சம்பவம் குறித்து லங்கா ஈ நிவ்ஸ்
இப்படிக் குறிப்பிடுகிறது......
இந்த கீழ்த்ரமான சம்பவம் நடந்திருப்பது சாம்பூர்
மகாவித்யாலத்திற்கு புதிய விஞ்ஞான ஆய்வுகூடம் மற்றும்
கம்ப்யூட்டர் யுனிட் ஆகியவற்றை கையளிக்கும் ஒரு
நிகழ்விலாகும்.
இந்த செயற்திட்டத்துக்கு ''டேவிட் பீரிஸ்'' நிருவனம் நிதியுதவி
வழங்கியுள்ளதுடன் நிர்மாணப்பணிகளு
க்கான மனிதவளத்தை
இலங்கை கடற்படை வழங்கியுள்ளது.
தனியார் நிறுவனமொன்று இராணுவத்துடன் சேர்ந்து இப்படியான
சமூகசேவைகளில் ஈடுபடுவது அனைவராலும் போற்றப்படுகிறது
ஆனால் இந்த நிலைப்பாடு பிழையாகும்.
பாடசாலைக் கல்வி என்பது அரசியல் அமைப்பின் பிரகாரம்
மாகணசபைக்கு உட்பட்ட விடயமாகும்.இப்பொழுதும்
''தேசியப் பாடசாலை'' என்ற ஒரு பிரிவை உருவாக்கி மத்திய
அரசு மாகாண கல்வி நடவடிக்கைகளுக்க
ு அளவுக்கு அதிகமான
அழுத்தங்களைச் செலுத்துகிறார்கள்.
ஒரு தனியார் நிறுவனம் சமூக சேவையாக நாட்டின்
அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்வது நல்லவிடயம்.
இந்த மாதிரியான சேவைகளுக்கு பங்களிப்பு செய்யும் நிருவனங்களுக்கு வரிச்சலுகைகள் கிடைப்பதாக அறியமுடிகிறது.
எனவே இந்தக் காரியங்களில் சமூக ரீதியாக பயனுடையதாக
இருந்தாலும் பொருளாத ரீதியாக எந்தத் தாக்கமும் செலுத்தப்
போவதில்லை.
இப்படியான நிகழ்வுகளில் இராணுவம் சம்பந்தப்படுவதிலும்
அவர்களுக்கு ஏதும் நலன்கள் இருக்கலாம் என்றும் எண்ணத்
தோன்றுகிறது.எனவே இப்படியான சேவைகளை சென்சிடிவாக
பார்க்கத் தேவையில்லை.
இப்படிக் குறிப்பிடுவதன் நோக்கம் இவ்வாறான காரியங்களை
மட்டந்தட்டுவதல்ல.
ஆனால் தமக்கு இல்லாத அதிகாரங்களை எடுத்துக் கொண்டு
சேவை செய்வது சமூகசேவைக்குப் பொருத்தமல்ல.
சமூக சேவை என்பது நல் எண்ணத்துடன் ஒன்றை செய்துவிட்டு
அமைதியாய் விலகிச் செல்வதாகும்.அதன் மூலம் அதிகாரமோ
வேறுவிதமான அங்கீகாரமோ எதிர்பார்ப்பது தவறு.
வெளிநாட்டுத் தூதுவர் ஒருவரை பாடசாலை நிகழ்வொன்றுக்கு
அழைப்பதானால் அதற்கு மாகாண கல்வியமைச்சின் அனுமதி
இருக்க வேண்டும்.இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி
அமைச்சரையும் காணக்கிடைக்கவில
்லை.
இங்கே முதலமைச்சர் குறிப்பிடுவதில் நியாயம் இருக்கிறது.
குறித்த இராணுவ அதிகாரிக்கு Protocol பற்றித் தெரியாது.முதலமைச்சர்
இங்கே கேட்கும் கேள்வி அதிகாரப்பகிர்வு மற்றும் ஜனநாயகத்தோடு சம்பந்தப்பட்ட மிக முக்கியமான கேள்வியாகும்.
முதலமைச்சர் இந்தக் குற்றச்சாட்டைச் சொல்வது இராணுவ
அதிகாரிக்கல்ல கிழக்கு மாகாண ஆளுனருக்காகும் You The Governor Don't Know the Protocol
என்று கேட்கும் பொழுது அவருது கேள்வியில் இருக்கும்
நியாயத்தை ஆளுனர் ஏற்றுக்கொள்வதையும் உணரமுடிகிறது.
இங்கே ஆளுனருக்கோ இராணுவ அதிகாரிக்கோ Protocol குறித்து
தெரியாது. தெரிந்தால் ஒரு மாகணத்தின் முதலமைச்சருக்கு
வழங்க வேண்டிய கெளரவத்தை வழங்கியிருப்பார்கள்.
இப்போது இந்த சம்பவத்தை வைத்து சிலர் '' ஒரு முஸ்லிம்
சிங்கள இராணுவ வீரரை தூற்றிவிட்டார்'
' என்று இனவாதத்தை
கக்க ஆரம்பித்திருக்கின்றனர்
இவ்வாறான பிரச்சினைகளுக்க
ு பிரதானகாரணம் தமது
பொருப்புக்களை சரியாக நிறைவேற்றாமையும்,தேவை
இல்லாத விடயங்களில் மூக்கை நுழைப்பதுமாகும்.
Protocol எனும் நெறிமுறை குறித்த தெளிவில்லாமல் இருப்பது
இலங்கையில் இருக்கும் முக்கிய பிரச்சினையாகும்.
எல்லா விடயங்களுக்கும் ஒரு சட்ட ஒழுங்கும், நெறிமுறையும்
இருக்கின்றது.
இலங்கையின் அரச சேவையில் நிறைய குறைபாடுகள்
இருக்கின்றன, அவற்றை மேம்படுத்துவதற்கும் அவற்றின்மூலம்
முழுமையான பயனை அடைந்து கொள்வதற்கு சிவில் சமூகமும்
தனியார் நிறுவனங்களும் முயற்சிக்க வேண்டுமே தவிர
அவற்றுக்கு மாற்றீடுகளை உருவாக்கி அவற்றை வலுவிழக்கச்
செய்யக் கூடாது.
மஹிந்த ராஜப்க்ச முதல் சிரச டீவி வரை Protocol விரோதி
மநோநிலையிலேயே செயற்பட்டு வருகின்றனர்.
இந்த ''நெறிமுறை தவறாமை'' என்ற பன்புகுறித்து பாடசாலை
மற்றும் பல்கலைக்கழகங்களில் ஒரு விசேட திறமையாக
வளர்க்கப்பட வேண்டும்.தீர்மாணங்கள் எடுப்பதற்கு இது மிக
முக்கியமான பன்பாகும்.
இராணுவம் என்பது Protocol குறித்த அதிக முக்கியத்துவும் அளிக்கும்
ஒரு நிர்வாக கட்டமைப்பாகும்.சிவில் நடவடிக்கைகளில் ஈடுபடும்
இராணுவ வீரர்கள் Protocol குறித்து மிகுந்த அவதானத்துடன் நடந்து கொள்ள
வேண்டும்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar