அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட கன்டி மாவட்ட பாடசாலைகள் பற்றி பாராளுமன்றத்தில் பேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கல்முனை விவசாயிகள் பற்றி பேச முடியாமல் போனது ஏன் என உலமா கட்சித்தலைவர் கேள்வி எழுப்பினார்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணங்களின் போக்கு சம்பந்தமாக கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில் உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மேலும் தெரிவித்ததாவது,
அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ரஊப் ஹக்கீம் அனர்தத்தால் பாதிக்கப்பட்ட கன்டி மாவட்ட பாடசாலைகள் ஆபத்தை எதிர் நோக்கியிருப்பது பற்றி எடுத்துக் கூறினார். அவர் கன்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவபடுத்துபவர் என்பதால் அம்மாவட்டம் பற்றி பேசும் கடப்பாடு அவருக்குள்ளது. அதே நேரம் அவர் நாடு தழுவிய ஒரு கட்சியின் தலைவர் என்பது அவருக்கு மறந்து விட்டதா என்று கேட்க வேண்டியுள்ளது.
அனர்த்தத்தால் நாட்டின் பல பாகங்களிலுமுள்ள மக்கள் பாதிக்கப்பட்டதோடு விசேசமாக கல்முனை விவசாயிகளும் மிக மோசமாக பாதிக்கப்பட்டார்கள். தமக்கு அரசாங்கம் உடனடியாக நிவாரணம் தர வேண்டும் என அம்மக்கள் பகிரங்கமாக ஆர்ப்பாட்டமும் செய்தார்கள். அப்படியிருந்தும் கல்முனை மக்களின் வாக்குகளை பெற்ற சோம்பேறிகள் அம்மக்களின் பிரச்சினைகளை கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் தூங்கிக்கொண்டிருக்கும் நிலையில் கல்முனையை ஆட்சி செய்யும் மு காவின் தலைவர் கூட அம்மக்களை மறந்து விட்டதானது மிகப்பெரிய கொடுமையாகும்.
விதைத்து சில வாரங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கல்முனை ஏழை விவசாயிகள் பாரிய நஷ்டத்துக்கு முகம் கொடுத்திருப்பதுடன் செய்வதறியாத நிலையில் உள்ளனர்.
ஆகவே தேர்தல் வந்தால் முண்டாசு கட்டிக்கொண்டு கல்முனை மக்களிடம் வந்து அலங்காரம் காட்டி வாக்கு பெறும் மு. கா தலைவர் ஹக்கீம் கல்முனை விவாசியகளின் பாதிப்பு பற்றி பாராளுமன்றத்தில் வாய் திறக்காமைக்காக உலமா கட்சி தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதோடு இது விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு அம்மக்களுக்கு உடனடி நிவாரணம் பெற்றுத்தரவேண்டும் என உலமா கட்சி வலியுறுத்துகிறது.

Post a Comment