அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் மலேசியா சர்வதேச வியாபார கைத்தொழில் அமைச்சர் டாக்டர். முஸ்தபா முகம்மட் அவர்களுக்கும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக் கும் இடையில்; கலந்துரையாடலொன்று நேற்று கொழும்பில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின் போது இலங்கைக்கும் மலேசியாவிற்கும் இடையிலான வியாபார உறவினை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும், இலங்கையின் பல்வேறுபட்ட முதலீடுகளில் கைத்தொழில் முயற்சிகளை உருவாக்குவதில் மலேசியாவினுடைய பங்களிப்பு கோருவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
ஏற்கனவே, இலங்கையினுடைய தொலைத்தொடர்பு துறையில் மலேசியாவின் டயலொக் நிறுவனம் ஆற்றுகின்ற பாரிய பங்களிப்பை இதன் போது பாராட்டிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், எதிர்காலத்தில் கைத்தொழில் துறையில் வாகன உற்பத்தி செய்தல் உட்பட பல்வேறுபட்ட கைத்தொழில் துறைகளுக்கு மலேசியாவின் ஆதரவு – அனுபவத்தை இலங்கைக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இக்கலந்துரையாடலில் மலேசிய சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் நாயகம், மிடா நிறுவனத்தின் தலைவர் உட்பட பல்வேறுபட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Comments
Post a comment