சம்பூரில் நடைபெற்ற வைபவத்தின் போது, ஆளுநரின் அழைப்பின் பேரில் மேடையில் ஏறிய போது, கடற்படை அதிகாரி தன்னை தடுத்தன் காரணமாகவே தான் அவரை திட்டியதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
வைபவம் நடைபெற்ற போது, தனக்கும் கிழக்கு மாகாண கல்வியமைச்சருக்கும் மேடைக்கு வருமாறும் அழைப்பு விடுக்கவில்லை.
கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ தன்னை மேடைக்கு அழைத்தன் பின்னர் தான் மேடையில் ஏற முயற்சித்த போது, கடற்படை அதிகாரி தனது வயிற்று பகுதியை பிடித்து, மேடையில் ஏறவிடாமல் தடுத்தார்.
இதன் போது தான் பேசிய வார்த்தைகள் பதிவான காணொளிகளே ஊடகங்களில் வெளியாகியுள்ளதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், சம்பூர் பாடசாலையில் இடம்பெற்ற சம்பவமானது தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அவமதிப்பு அல்ல ஒட்டுமொத்த கிழக்கு மாகாண நிருவாகத்திற்கும் ஏற்பட்ட அவமதிப்பாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment