மஹிந்த ராஜபக்ச தரப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், மைத்திரி தரப்பினருடன் இணக்கப்பாட்டு பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாக அரச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீரவின் உறுதிப்படுத்தலையும் அது வெளியிட்டுள்ளது.
இதன்போது இந்த சந்திப்புக்கள் தனிப்பட்ட ரீதியிலேயே இடம்பெறுவதாகவும் உத்தியோகபூர்வ சந்திப்புக்கள் எவையும் இடம்பெறவில்லை என்றும் அமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த மேதினத்தின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சுமார் 40 உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்சவின் கிருலப்பனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தநிலையில் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ளும் வகையிலேயே இந்த சந்திப்புக்கள் இடம்பெறுகின்றன என்று கூறப்படுகிறது.
இதேவேளை மேதினத்துக்கு பின்னர் ஒன்றிணைந்து எதிர்க்கட்சியின் அரசியல் செயற்பாடுகள் குறித்து ஆராயும் முகமாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அழைத்த கூட்டம் ஒன்றை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளதா தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக்கூட்டம் எப்போது நடைபெற்றது என்பது தெரியவரவில்லை.
Post a Comment