அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில
நுண் நிதியளிப்பு திட்டத்தில்
ஷரியா சட்டத்தை அமுல்படுத்துக!
ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை மத்திய வங்கி ஆளுனர் இணக்கம்
நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சமர்பிக்கப்பட்ட நுண் நிதியளிப்பு (அiஉசழகiயெnஉந) சட்ட மூலத்தை வரவேற்ற புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், நுண்நிதியளிப்பு சட்டத்திலுள்ள நன்மைகளை முஸ்லிம்களும் பெற்றுக் கொள்வதற்காக வேண்டி அதில் மத்திய வங்கி அனுமதி வழங்கியுள்ள இஸ்லாமிய ஷரியா சட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை முன்வைத்தார்.
இன்று நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன் மஹேந்திரன் தலைமையிலான குழுவினருடன் இது தொடர்பில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்ட போது அவர் இந்த கோரிக்கையை விடுத்தார். இதன் போது குறித்த கோரிக்கை நியாயமானது என வரவேற்ற மத்திய வங்கி ஆளுனர் அதனை சட்ட வரைபில் உள்வாங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இன்று நாடாளுமன்றத்தில் நுண் நிதியளிப்பு சட்ட மூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாவத்தில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் அங்கு கூறியதாவது:-
நுண் நிதியளிப்பு கம்பனிகளை பதிவுசெய்தல்; மற்றும் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக கைத்தொழில்களில் ஈடுபடும் மக்களுக்கு நிதியினை சிறு கடன் அடிப்படையில் வழங்குவதற்கும், அது தொடர்பிலான சட்ட திட்டங்களை ஆக்குவதற்கும் நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட நுண் நிதியளிப்பு சட்ட மூலத்தை நான் வரவேற்கின்றேன்.
இவ்வாறான கடன் வழங்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் போது அதனை முஸ்லிம்கள் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளனர். இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் வட்டி முஸ்லிம்களுக்கு (ஹராம்) விலக்கப்பட்டுள்ளது. இந்த நுண்நிதியளிப்பு முறையில் குறைத்த சதவீதத்தில் வட்டி உள்ளது. இதனால் முஸ்லிம்கள் இதிலுள்ள நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளனர்.
எனவே, இந்த நுண்நிதியளிப்பு சட்டம் முஸ்லிம்களின் மார்க்க வரையரைகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட வேண்டும். இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய ஷரியா வங்கி சட்ட முறைமையை இந்த நுண் நிதியளிப்பு சட்டத்திலும் இணைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றேன்- என்றார்.
மேற்படி உறையை அடுத்து நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் மத்திய வங்கி ஆளுனர் டாக்டர். அர்ஜூன் மஹேந்திரன் தலைமையிலான குழுவினருடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்ட இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், நுண்நிதியளிப்பு சட்டத்தில் மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய வங்கி நடைமுறையை அமுல்படுத்துமாறு வலியுறுத்தினார்.
பின்னர், இராஜாங்க அமைச்சர் முன்வைத்த ஆலோசனைகள் - கோரிக்கைகள் தொடர்பில் முஸ்லிம்களுக்கு சாதகமான பதிலை வழங்கிய மத்திய வங்கி ஆளுனர், நுண்நிதியளிப்பு சட்ட உருவாக்கத்தின் போது அதனை முஸ்லிம்கள் பயன்பெறும் விதத்தில் ஷரியா சட்ட விதிகளை அமுல்படுத்துவதாக வாக்குறுதி வழங்கினார்.
Comments
Post a comment