Skip to main content

எம் பி ப‌த‌விக்காக‌ அதுர‌லிய‌ தேர‌ரும் ஞான‌சார‌வும் மோத‌ல்.

 பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் . இவ்விடயத்தில் கட்சி மட்டத்தில் எவ்வித தீர்மானத்தையும் எடுக்க முடியாது . ஞானசார தேரரும் , அத்துரலிய ரத்ன தேரரும் ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்திற்காக செய்துகொண்ட ஒப்பந்தங்கள் ஏதும் கட்சிக்கு தெரியாது என அபே ஜனபல வேகய கட்சியின் தலைவர் சமன் பெரேரா தெரிவித்தார் .  அபேஜன வேகய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் குறித்து எழுங்துள்ள முரண்பாடு குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் . அவர் மேலும் குறிப்பிடுகையில் , கடந்த வருடம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் அபேஜனபல வேகய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகளுக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் ஒதுக்கப்பட்டது . அமைய இந்த ஆசனத்திற்கு அபேஜன பல வேகய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் விமல் திஸ்ஸ தேரர் , அபே ஜன பல கட்சியின் வேட்பாளர்களான தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் , பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார த

வெல்லம்பிட்டி அனர்த்தம் இனவாத சதியா? -

வெல்லம்பிட்டி அனர்த்தத்தில் சந்தேகம் ஊடக சந்திப்பில் உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத்
-எம்.வை.அமீர் -
வெல்லம்பிட்டி அனர்த்தத்தை வெறுமனே இயற்கை அனர்த்தம் என்ற வரையறைக்குள் மட்டும் வைத்து ஆராயமுடியாத நிலையில் தங்கள் இருப்பதாக உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தம் மற்றும் அரசியலமைப்பு சபைக்கு உலமா கட்சி முன்வைத்துள்ள முன்மொழிவுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு ஒன்று 2016-05-22  ஆம் திகதி உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் அவர்களின் கல்முனை இல்லத்தில் இடம்பெற்றது.
தொடர்ந்து கருத்துத்தெரிவித்த முபாறக் அப்துல் மஜீத்,
வெல்லம்பிட்டியில் பாரிய  வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தும் வகையில் களனி கங்கையின் வான் கதவுகளை இரவோடிரவாக திறந்து விட்டதில் சதி ஏதும் இருக்கிறதா என்பதை அரசாங்கம் உடனடியாக ஆராய்ந்து மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்
 நாட்டில் அடிக்கடி மழை வருவதும் அனர்த்தங்கள் ஏற்படுவதும் இயற்கையானதுதான். கடந்த காலங்களிலும் வெள்ளம் காரணமாக வெல்லம்பிட்டியில் இரண்டு அல்லது மூன்று அடிக்கு நீர் வருவதுண்டு.  அதுவும் வாரக்கணக்கில் தொடர்ச்சியாக மழை பெய்தாலேயே இவ்வாறு நடப்பதுண்டு. ஆனால் அண்மைய வெள்ளம் என்பது இரண்டு நாட்கள் பெய்த மழைக்கு களனி கங்கையின் வான்கதவுகள் திடீரென்று இரவில் திறக்கப்பட்டு எட்டு அடிக்கு மேல் தண்ணீர் பரவியுள்ளமை வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட செய்றகை அனர்த்தமாஎன்ற கேள்வி எழுகிறது.

அதுவும் வான் கதவுகள் திறக்கப்படும் அவதானமாக இருக்கவும் என்ற சிறிய அறிவித்தல் மட்டுமே அம்மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. களனியின் நீர்ப்பரம்பல் எவ்வளவு,  வான் கதவுகள் திறக்கப்படும் போது அது எந்தளவு தாக்கும் என்பதெல்லாம் தெரியாத படிப்பறிவற்றவர்கள் நீரேந்து பகுதிகளில் பணி புரிகிறார்களா என்று கேட்க வேண்டியுள்ளது. அப்படி அறிவு இருக்குமாயின் ஏன் முன் கூட்டியே மக்களை வெளியேற்றவில்லை என கேட்கிறோம்.
அண்மைக்காலமாக சில இனவாதிகள் வெல்லம்பிட்டி பற்றி இனவாத கருத்துக்களை வெளியிட்டுள்ளர்கள். அங்கு சேக்குகள் சுல்தான்கள் நிலம் வாங்குவதாகவும் பொய்யாக சொல்லியுள்ளனர். இவர்களின் பேச்சைக்கேட்டு வெல்லம்பிட்டி மக்களை ஒரேயடியாக எழுப்பி அந்த இடங்களை கைப்பற்றுவதற்கான சூழ்ச்சியின் ஒரு கட்டமாக இவை நடந்துள்ளதா என்பதை ஆராய வேண்டிய பொறுப்பு அரசுக்குள்ளது என்பதை உலமா கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. அத்தோடு இதன் உண்மைத்தன்மை பற்றி முஸ்லிம் கட்சிகளும் அமைப்புகளும் ஒன்றிணைந்து ஆராய வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிந்தளவு நாம் நிவாரணம் வழங்கிக்கொண்டிருக்கும் இந்நிலையில் இந்த அனர்த்தத்தின் பின்னணியில் இனவாத கரங்கள் உள்ளனவா என்பதை ஆராய்வதும் அம்மக்களுக்கும் எதிர் காலத்தில் இவ்வாறு நடக்காமல் இருப்பதற்கும் நாம் செய்யும் மிகப்பெரிய உதவியாகும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய