BREAKING NEWS

கிழக்கு முதல்வர் முஸ்லிம் என்பதால் பூதாகரமாக்கப்பட்ட விவகாரம்: ஜனாதிபதி அதிரடி!


---------------------------------------கிழக்கு மாகாண முதலமைச்சர் நடந்து கொண்ட விதம் முற்றிலும் தவறானது. ஆனால், அவர் முஸ்லிம் என்பதனாலேயே இந்தளவுக்கு விவகாரம் பூதாகரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இதே இடத்தில் ஒரு சிங்களவர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஜப்பானின் நகோயா ஹில்டன் ஹோட்டலில் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு நேற்று வழங்கிய பிரத்தியேக நேர்காணலின்போது, “கிழக்கு மாகாண முதலமைச்சர் – கடற்படை அதிகாரி இடையிலான முரண்பாட்டை எப்படிப் பார்க்கின்றீர்கள்?” என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.

“உண்மையைச் சொல்வதென்றால் இலங்கையின் நிர்வாகத்தினர் மத்தியில் இத்தகைய மோதல்கள் ஏற்படுவதொன்றும் புதிய விடயமல்ல. இவ்வாறான பல சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த விடயத்தில் முதலமைச்சர் நடந்துகொண்ட விதம் முற்றிலும் தவறானது. ஆனால், அவர் முஸ்லிம் என்பதனாலேயே இந்தளவுக்கு விவகாரம் பூதாகரப்படுத்தப்பட்டுள்ளது. இதே இடத்தில் ஒரு சிங்களவர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?” என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar