கிழக்கு முஸ்லிம்கள் கிழக்கு தலைமையிலான கட்சியை பலப்படுத்த வேண்டும் என நாம் சொன்னால் அது பிரதேச வாதம் என கூறுவது அறிவற்றவர்கள் செயலாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார். கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் மேலும் கூறியதாவது,
கிழக்கு மாகாணத்தை தளமாக கொண்ட முஸ்லிம் கட்சிக்கு கிழக்கை சேர்ந்த ஒருவர் தலைவராக இருக்க வேண்டும் என்றோ அல்லது கிழக்கை தலைமையாக கொண்ட கட்சியை கிழக்கு முஸ்லிம்கள் பலப்படுத்த முன் வர வேண்டும் என்றோ நாம் சொன்னால் நாம் பிரதேச வாதம் பேசுவதாக சிலர் சொல்கிறார்கள். இத்தகையவர்கள்; யதார்த்;தத்துக்கு அப்பால் உள்ளனர் என்பதே தெரிகிறது.
அரசியல், அதிகாரம் என்பன வெறுமனே அலங்காரங்கள் அல்ல. அவை மக்களுக்கு சேவை செய்வதற்கான வழிகளாகும். இதனால்த்தான் தேர்தல் திருத்தம், வட்டார முறை என்றெல்லாம் அரசாங்கம் யோசித்துக் கொண்டிருக்கிறது. ஒரு தேர்தல் மாவட்டத்துக்குள் தெரிவாகும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரால் தனது மாவட்ட மக்களுக்கு பரந்த சேவைகளை செய்ய முடியாது என்ற காரணத்தினாலேயே தொகுதி முறையை மீண்டும் கொண்டு வருவதற்கு அரசாங்கம் முயற்சி செய்கிறது. அதே போல் ஒரு பிரதேச சபைக்குள் தெரிவாகும் உறுப்பினரால் அதே பிரதேச சபை எல்லைக்குள்ளேயே சேவை செய்ய முடியாதுள்ளது என்பதாலேயே வட்டார முறை பற்றி பேசப்படுகிறது.
இந்த நிலையில் ஒரு மாகாணத்தில் அதிக வாக்குகள் கொண்ட கட்சிக்கு பிறிதொரு மாகாணத்தினை சேர்ந்தவர் தலைமை வகித்தால் அவரால் அந்த மாகாண மக்களை கவனிக்க முடியாது என்பதைக்கடந்த 16 வருடங்கள் நமக்கு உணர்த்தியுள்ளன. இதைக்கூட புரிய முடியாத நிலையில் முஸ்லிம் சமூகம் நாம் பிரதேச வாதம் பேசுவதாக சொல்வதன் மூலம் யதார்த்தத்தை உணராமலிருக்கிறது.
எத்தகைய பிரதேச வாதம் கூடாது என்பதை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதன் தனது பிரதேசம் சிறப்புற வேண்டும், தனது பிரதேசத்தை தனது பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே பிரதிநிதித்துவ படுத்த வேண்டும் என நினைத்தால் அத்தகைய பிரதேச வாதம் ஏற்புடையதாகும். அதற்கு மாறாக தனது பிரதேசம் மட்டுமே முன்னேற வேண்டும், ஏனைய பிரதேசங்கள் முன்னேறக் கூடாது என நினைப்பதே ஏற்க முடியாத பிரதேச வாதமாகும். நாம் நமது பிரதேசங்களை வளப்படுத்துவதில் கட்டாயம் நம்மிடம் பிரதேசவாதம் இருக்க வேண்டும்.
முஸ்லிம் அரசியலை பொறுத்தவரை வடக்கு கிழக்கில் மட்டுமே முஸ்லிம் கட்சிகளுக்கான தளம் உள்ளது. இந்தத்தளத்தை பாதுகாத்து வழி நடாத்தக்கூடிய சரியான தகைமை அந்த மாகாணங்களை சேர்ந்தவர்களுக்கே உண்டு என்பதை உலமா கட்சி மிகத்தெளிவாக சொல்லிக் கொண்டிருக்கிறது. இலங்கையின் வரலாற்றை நாம் பார்க்கும் போது கிழக்கிலிருந்து பறப்பட்ட தலைமைகளே தென்னிலங்கை முஸ்லிம்களையும் அரவணைத்து அவர்களுக்கும் சேவை செய்பவர்களாக நாம் கண்டுள்ளோம். இதற்கு மறைந்த தலைவர் அஷ்ரப் ஓர் உதாரணமாகும். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கூட தமது தலைமையை வடக்கு கிழக்கை சேர்நதவர்களாகவே வைத்திருப்பதை பார்த்தாவது நாம் பாடம் படிப்பதில்லையா? சிங்களம் தெரிந்த தென்னிலங்கை தலைமையை வைப்பது அவர்களுக்கு கஷ்டமானதா என்பதை ஏன் சிந்திக்க மறுக்கிறோம்?
கிழக்கு வடக்கு என்று சொன்னால் கூட முஸ்லிம்களை பிரிப்பதாக இவர்கள் கூறுவது வேடிக்கையாக உள்ளது. வட மாகாண சபை கிழக்கு மாகாண சபை, மேல் மாகாண சபை என்று அரசாங்கமே பிரித்து வைத்துள்ளது. அதே போன்று ஜம்இய்யத்துல் உலமா சுட அம்பாரை மாவட்ட சபை, கொழும்பு மாவட்ட சபை என பிரித்து வைத்துள்ளது. இதெல்லாம் எதற்காக? மக்களுக்கு நிர்வாகத்தை இலகு படுத்துவதற்காகவே தவிர முஸ்லிம்களை பிரிப்பதற்காக அல்ல என்பது புத்தியுள்ளவர்களுக்கு தெரியும். இந்த வகையிலேயே கிழக்கு மாகாண மக்கள் கிழக்கு தலைமையிலான கட்சியை பலப்படுத்த முன் வர வேண்டும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவி குறிப்பிட்டார்.

Post a Comment