BREAKING NEWS

அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலையும், தற்போதைய பரிமாணமும்.எம்.எஸ்.நபார் அதிபர்-எம்.வை.அமீர் -

பாடசாலைகளின் தரத்தை மேம்படுத்தும் அரசின் புதிய திட்டமான “அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் திட்டம் தொடர்பாக சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலய அதிபர் எம்.எஸ்.நபார் அவர்களிடம் வினவினேன் அதுதொடர்பில் அவர் வழங்கிய தகவல்களை இங்கு தருகிறேன்.
மாணவர்களின் எதிர்கால கல்வி மேம்பாடு கருதி அரசு காலத்துக்குக் காலம் புதிய நடைமுறைகளையும், மாற்றங்களையும் கொண்டு வருவது வழக்கமாகும். இதனடிப்படையில் தற்போதைய நல்லாட்சி அரசினால், இதுவரையுள்ள அரசாங்கங்களிடம் கல்வியியலாளர்களினால் முன்வைக்கப்பட்ட கல்வித்துறை ஒதுக்கீடுகள் போதாமை எனும் பெரும் குறைபாட்டை நீக்கும் பொருட்டும் கல்வி முறையில் சமவாய்ப்பை சகல மாணவர்களுக்கும் வழங்கும் பொருட்டும் 2016ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தில் அண்ணளவாக 6மூ ஒதுக்கீட்டை கல்விக்கு வழங்க முயற்சித்தமை  குறிப்பிடத்தக்கதாகும்.இதற்கேற்ப பாடசாலைகளின் சமசந்தர்ப்பத்தை உருவாக்கும் பொருட்டு கொண்டு வரப்பட்டதே “அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” (THE NEAREST SCHOOL IS THE BEST SCHOOL)

செயற்திட்டமாகும். இது 2016-2020 வரை 5 வருடங்களில் அமுலாக்கம் செய்யப்பட கொண்டு வரப்பட்டதாகும்.

கல்வியின் வரலாற்றுப் பின்னனி:
ஆரம்பத்தில் 18ம், 19ம் நூற்றாண்டுகளில் காணப்பட்ட பாடசாலைகளும், ஆங்கிலேயரின் மிஷனரிப் பாடசாலைகளும், அதற்கடுத்து வந்த  பௌத்த, இந்து, இஸ்லாமிய சமய அடிப்படையிலான பாடசாலைகளும்(புனித தோமஸ், சென்பீட்டர்ஸ், ஆனந்த,தர்மராஜ, சாஹிறா கல்லூரிகள்) அடிப்படையில்சுதந்திர முன்னோடிகளின் பங்களிப்புகளுடனும் தோன்றியதாகும். சுதந்திரத்தின் பின்னர் இப்பாடசாலை அமைப்பானது புதிய மத்திய கல்லூரிகளை உள்ளீர்த்தன. அவை 1946 ம் ஆண்டு கல்விக் கொள்கை மூலமாக (ஊறுறு.கன்னங்கரா கல்வி அமைச்சரினது) இவ்வாறு நாட்டின் நகரங்களுக்கு மேலதிகமாக 54 மத்திய கல்லூரிகள் அமைக்கப்பட்டன. மீண்டும் 1961ம் ஆண்டில் உதவி நன்கொடை பெறும் பாடசாலைகள் உருவாகின. இக்காலப்பகுதியில் அநேக பாடசாலைகள்  அரசினால் பொறுப்பேற்கப்பட்டன. இதற்கு சுவீகரிக்கும் சட்டம் உதவியது. எனினும் இதுவரையும் அரசிடம் கையளிக்கப்படாத தனியார் பாடசாலைகளாக 71 பாடசாலைகள் காணப்படுகின்றன.
இதனைத்தொடர்ந்து ஒரு தசாப்தத்த்pன் பின் கல்வியமைச்சர்.ஈரியக் கொல்லவின் கொள்கையாக (1970களில்) நாடு பூராகவும் நகரங்கள் சார்ந்தபாடசாலைகளாக சில உருவாக்கப்பட்டன.(னு.ளு.சேனநாயக்கா, சிறிமாவோ பண்டாரநாயக்க போன்ற பாடசாலைகள்).
மீண்டும் தற்போதைய பிரதம மந்திரி கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கல்வி அமைச்சராக காணப்பட்டபோது உருவாக்கப்பட்ட செயற்திட்டங்களும் கல்வியில் சமவாய்ப்பையும், சமசந்தர்ப்பங்களையும் ஏற்படுத்தியதை குறிப்பிட முடியும்.
1. ஒரே வடிவான 3மாடி விஞ்ஞான ஆய்வு கூடங்கள்.
2. கல்வியியற் கல்லூரிகள்.
3. கல்வி நிருவாக சேவை புனருத்தானம்.

இவ்வாறு பல்வேறுபட்ட சமய, அரசியல், சமூக விடயங்களை அடியொற்றிதோன்றிய பாடசாலைகளுக்குள் புதிய பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன.
1. அரசினால் பொறுப்பேற்கப்பட்ட நகர கேந்திரப் பாடசாலைகள்.
2. அரசினால் பொறுப்பேற்கப்படாத பாடசாலைகள்.

பௌதீக மற்றும் மானிட வளங்கள் ஊடாக அதி உயர்வான நிலையை அடைந்ததுடன், இதனால் பெற்றோர்களின் மிகவும் நேசிக்கப்பட்ட பாடசாலைகளாகவும் மாற்றம் பெற்றன. 
ஒரு தசாப்தத்தின் பின் மீண்டும் நகரங்களை அடிப்படையாகக் கொண்ட பிரதேசங்களில் (1980 களில்) சர்வதேச பாடசாலைகள் இச்சமூகத்திற்கு கவர்ச்சியை வழங்கப் புறப்பட்டன. இதற்கான வர்த்தகப் பதிவுச் சான்றிதழ் மூலம் ஆரம்பமான:

A. சர்வதேசப் பாடசாலைகள்
B. அதிசிறந்த தனியார் பாடசாலைகள்
C. அரச பாடசாலைகள்  போன்றன கொழும்பில் கட்டியெழுப்பப்பட்டன.

புதிய திட்டத்தின் பின்னனி:
இதனால் 2015 ஆம் ஆண்டில் (2015.01.08) ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசு இதுவரை தீர்க்கப்படாதிருந்த மேலுள்ள பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து இதன் இறுதி விளைவாக முன்வைத்த புதிய தீர்வாக சகல மாணவர்களுக்கும், பிரதேச வேறுபாடின்றி கல்வியில் சமவாய்ப்பை வழங்கும் நோக்குடன் முன்மொழியப்பட்டதே “அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” என்பதாகும்.

இத்திட்டத்தின் மூலம் எதிரபார்க்கப்படும் பிரதான நன்மைகளாவன:
1. அனைத்து மாணவர்களுக்கும் கல்வியில் சமசந்தர்ப்பத்தை வழங்கல், சமவளங்களை வழங்குதல்.
2. ஒரு பிரதேச செயலாளர் மட்டத்தில் சம்பூரணமான வளமுள்ள பாடசாலைகள் இரண்டை விருத்தி செய்தல்.
3. சகல வளங்களும் பொருந்திய பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்த்துக் கொள்ள முடியாமல் போகும் பெற்றோர்களின் விரக்தியை தணித்தல்.
4. பிரபல்யமான பாடசாலைகளின் நெருக்கடியை குறைப்பதற்கு உதவுதல்.
5. பெரும்பாலும் அனைத்துப் பாடசாலைகளையும் சிறப்புப் பாடசாலைகளாக மீள அமைத்தல்.
6. அப்பாடசாலைகளில் உயர்தரப் பாடவிதானம் ஐந்தினை ஆரம்பித்தல். (கலை, வர்த்தகம், விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம்).
7. 6ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட வகுப்புக்களில் சிங்கள மொழிக்கு மேலதிகமாக ஆங்கிலம், தமிழ் மொழிகளையும் கற்பித்தல்.
8. குறைந்த பட்சம் விளையாட்டு, இணைப்பாடவிதான செயற்பாடுகள் 20ஐ உருவாக்கல்.
9. நவீன தகவல் தொழில்நுட்ப அனுகுமுறையை கல்வி செயன்முறைக்கு அறிமுகப்படுத்தி கல்வியில் தரவிருத்தி ஏற்படுத்துவதற்காக புதிய திட்டத்தின் (Nearest School is the Best School  படி பாடசாலை அதிபர், ஆசிரியர் என்பன மீள் சொல்லுருவாக்கத்திற்குட்படுத்தப்படவுள்ளன. அவை:

I.                   Standard,Smart School and Premium Smart School (One in every Education Zone)
II.                  Smart Teachers
III. Smart Principals 

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar