கலை இலக்கிய சமுக அபிவிருத்தி ஊடக வலைப்பின்னல் அமைப்பின் 21 வது வருட நிறைவை முன்னிட்டு மே மாதம் 29ல் காரைதீவு சன்முக மகாவித்தியாலயத்தில் மாலை 3 மணிக்கு மருதூர் அன்சார் தலைமையில் நடைபெறவுள்ளது. கல்முனை தமிழ் எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து நடத்தும், கிழக்கு படைப்பாளிகளின் ஒன்று கூடும் தமிழ் படைப்பாளிகளின் இலக்கிய மாநாடும் இமயம்; சஞ்சிகை வெளியீடும் திறமைக்கான தேடல் விருதுவிழாவும், கவிக்குயில் ஸப்னா அமீன் எழுதிய கவிதைகள் உள்ளம் கேட்குமே ஒலிஇ ஒளிஇ இருவட்டு வெளியீடும் பல்துறை சார்ந்த எழுத்தாளர்களின் புத்தக விற்பனையும் படைப்பாளிகள் பங்களிப்புடன் மிக பிரமாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இலக்கிய நிகழ்வுகள் மணிப்புலவர் மருதூர் எ. மஜீத் தலைமையிலும், கவியரங்கு மருதமாமணி ஏ. பீர் முஹம்மதின் தலைமயிலும், திறமைக்கான தேடல் விருது விழா கவிஞர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தலைமையிலும் இடம் பெறவுள்ளது. இதன் முன்னிலை அதிதியாக டொக்டர் புரவலர் ஏ. பி. அப்துல் கையூம் அவர்களும், முதன்மை அதிதிகளாக மாகாண சபை சகாதார அமைச்சர் நசீர் அவர்களும், முன்னாள் ஊடக பிரதி அமைச்சர் வேதாந்தி சேகு இஸ்ஸதீன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம். அப்துல் ரஸ்ஸாக் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
விசேட அதிதிகளாக தொழிலதிபர் யஹ்யாகாண், அமைச்சர் ரஊப் ஹக்கீமின் இணைப்பளர் ரஹ்மத் மன்சூர், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ எல் முஹம்மத் ஜமீல் ஆகியோரும் கௌரவ அதிதிகளாக பிறை எப் எம் கட்டுப்பாட்டாளர் பசீர் அப்துல் கையும், தமிழ் மிரர் ஆசிரியர் ஏ. பி. மதன், எழுத்தாளர் முஸ்டீன், ஊவா வானொலி தயாரிப்பாளர் ரிஸ்வானா, காரைதீவு பிரதேச சபை செயலாளர் எஸ் நாகராஜா, சட்டத்தரணி நிசார் ஆகியோரும் விசேட பேச்சாளர்களாக தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மொழித்துறை பொறுப்பாளர் ரமீஸ் அப்துள்ளா, கவிஞர் அக்கரை மாணிக்கம், உமா வரதராஜன், ஆசிரிய ஆலோசகர் சுப்ரமணியம், வி. ரி. சகா தேவராஜா ஆகியோருடன் சிறப்பதிதிகளாக ஊடகம் சார்ந்தோரும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிகழ்வு பிறை எப் எம் அறிவிப்பாளர் சியாஹ{ல் ஹக், கவிஞர் சப்னா அமீன் ஆகியோரது றெநிப்படுத்தலில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் இலக்கிய படைப்பாளர்கள் அனைவருக்கும் சிறப்புச்சான்றிதழ் வழங்கப்படவுள்ளதுடன் லக்ஸ்;டோ நடாத்திய ஊடக செயலமர்வில் கலந்து கொண்டோருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment