Skip to main content

Posts

Showing posts from May, 2016

“பதவி இராஜினாமா செய்தி உண்மைக்கு புறம்பானது” இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விளக்கம்

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சை தான் இராஜினாமா செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.  இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தனது பதவியை இராஜினாமா செய்து விட்டு வெளிநாடு சென்றுள்ளதாக இன்று செவ்வாய்க்கிழமை சில ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியிருந்தது. இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது:- நான் இராஜாங்க அமைச்சுப் பதவியினை இராஜினாமா செய்து விட்டு வெளிநாடு சென்றுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது. இதில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை.  அதேவேளைஇ மட்டக்களப்பு கெம்பஸ் விரிவாக்கம் தொடர்பில் கலந்துரையாடல்கள் மற்றும் ஒப்பந்தங்களை செய்து கொள்வதற்காக வேண்டி மலேசியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளேன். அதேவேளை  இராஜாங்க அமைச்சர்களது பதவிகள் - அதிகாரங்கள் உடனடியாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்று சகல இராஜாங்க அமைச்சர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிற

அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலையும், தற்போதைய பரிமாணமும்.எம்.எஸ்.நபார் அதிபர்

-எம்.வை.அமீர் - பாடசாலைகளின் தரத்தை மேம்படுத்தும் அரசின் புதிய திட்டமான “அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் திட்டம் தொடர்பாக சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலய அதிபர் எம்.எஸ்.நபார் அவர்களிடம் வினவினேன் அதுதொடர்பில் அவர் வழங்கிய தகவல்களை இங்கு தருகிறேன். மாணவர்களின் எதிர்கால கல்வி மேம்பாடு கருதி அரசு காலத்துக்குக் காலம் புதிய நடைமுறைகளையும், மாற்றங்களையும் கொண்டு வருவது வழக்கமாகும். இதனடிப்படையில் தற்போதைய நல்லாட்சி அரசினால், இதுவரையுள்ள அரசாங்கங்களிடம் கல்வியியலாளர்களினால் முன்வைக்கப்பட்ட கல்வித்துறை ஒதுக்கீடுகள் போதாமை எனும் பெரும் குறைபாட்டை நீக்கும் பொருட்டும் கல்வி முறையில் சமவாய்ப்பை சகல மாணவர்களுக்கும் வழங்கும் பொருட்டும் 2016ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தில் அண்ணளவாக 6மூ ஒதுக்கீட்டை கல்விக்கு வழங்க முயற்சித்தமை  குறிப்பிடத்தக்கதாகும்.இதற்கேற்ப பாடசாலைகளின் சமசந்தர்ப்பத்தை உருவாக்கும் பொருட்டு கொண்டு வரப்பட்டதே “அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை”  ” ( THE NEAREST SCHOOL IS THE BEST SCHOOL) செயற்திட்டமாகும். இது 2016-2020 வரை 5 வருடங்களில் அமுலாக்கம் செய்யப்பட

தென்கிழக்கு பல்கலையில், இஸ்லாமிய கற்கை மற்றும் அரபு மொழி பீடத்தின் மூன்றாவது சர்வதேச ஆய்வரங்கு!

-எம்.வை.அமீர்- இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக, இஸ்லாமிய கற்கை மற்றும் அரபு மொழி பீடத்தின் ஏற்பாட்டில், குறித்த பீடத்தின் பீடாதிபதி எஸ்.எம்.எம்.மசாஹிர் தலைமையில், பீடத்தின் கேட்போர் கூடத்தில்,  2016-05-30  ஆம் திகதி தென்கிழக்கு பல்கலையின், இஸ்லாமிய கற்கை மற்றும் அரபு மொழி பீடத்தின் மூன்றாவது சர்வதேச ஆய்வரங்கு இடம்பெற்றது. “தேசிய அபிவிருத்தியில் இஸ்லாமிய கற்கை மற்றும் அரபு மொழிக் கல்வியின் பங்கு” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த மூன்றாவது சர்வதேச ஆய்வரங்குக்கு இணைப்பாளராக கலாநிதி எம்.ஐ.எம்.ஜெஸில் செயற்பட்டார். நிகழ்வின் பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் கலந்துகொண்ட அதேவேளை முக்கிய பேச்சாளராக  (Keynote Speech)  மலேசியாவின்  USIM  பல்கலைக்கழக பிரதி உபவேந்தர் பேராசிரியர் துல்கிபிலி பின் அப்துல் ஹனி பங்குகொண்டு, ஆய்வரங்கின் தொனிப்பொருளான தேசிய அபிவிருத்திக்கு இஸ்லாமிய கற்கை மற்றும் அரபு மொழி கல்வியின் ஊடாக எவ்வாறு பங்களிக்க முடியும் என்ற விரிவான சொற்பொழிவை மலேசியா மற்றும் சர்வதேசத்துடன் தொடர்புபடுத்தி நிகழ்த்தினார். நன்றியுரையை சர

நசீர் விவகாரத்தை கையாண்ட, கருணாசேன ஹெற்றியாராச்சிக்கு எதிராக நடவடிக்கை..?

சம்பூர் விவகாரத்தைக் கையாண்டது தொடர்பாக பாதுகாப்புச் செயலருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்வுகளை முப்படையினரும் புறக்கணிப்பதென்றும், அவரை முப்படையினரின் முகாம்களுக்குள் அனுமதிப்பதில்லை என்றும், பாதுகாப்பு அமைச்சு எடுத்த முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியுடன் கலந்துரையாடி  இந்த முடிவை எடுத்திருந்தனர். ஆனால், இது அரசியலில் முப்படையினரின் நேரடித் தலையீடு என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இன்று -30- முப்படைகளின் தளபதிகளும் அவசர ஆலோசனை ஒன்றை நடத்தினார். இதையடுத்தே, கிழக்கு முதல்வருக்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவுகளை கைவிடுவதென முப்படைகளினதும் தளபதிகள் தீர்மானித்தனர். இந்த முடிவு, இராணுவ, கடற்படைப் பேச்சாளர்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அதேவேளை, கிழக்கு முதல்வரின் செயலக்கு எதிர்வினையாக, படைத்தரப்பு எடுத்த முடிவை ஊடகங்களுக்குப் பகிரங்கப்படுத்திய, பாதுகாப்பு அமைச்சுக

கண்டி மாவட்டத்தில் மேலும் நான்கு தையல் பயிற்சி நிலையங்கள் அமைப்பதற்கு அமைச்சர் றிசாத் முடிவு,,,

கண்டி மாவட்டத்தில் மேலும் நான்கு  தையல் பயிற்சி நிலையங்களை அமைத்துத் தருவதற்கு அமைச்சர் றிசாத் முன்வந்துள்ளதாக மடவளை வை.எம்.எம்.ஏ. தலைவர் ஏ.எம்.சலாஹுதீன் தெரிவித்தார். அக்குரணை, கெலியோயா, கண்டி, கம்பளை ஆகிய இடங்களில் இந்த தையல் பயிற்சி நிலையங்களை அமைத்துத் தருவதாக அமைச்சர் தெரிவித்ததாக வை.எம்.எம்.ஏ.தலைவர் மேலும் குறிப்பிட்டார். மடவளை மதீனா கல்லூரி அஷ்ரப் கேட்போர் கூடத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விழாவில் கலந்துகொண்ட அமைச்சர், மடவளைக்கு தையல் பயிர்ச்சி நிலையம் ஒன்றை அமைத்துத் தருவதாக வழங்கிய வாக்குறுதியை நேற்று நிறைவேற்றினார். இதற்கிணங்க ஏற்கனவே தையல் பயிற்சி வழங்கப்பட்ட 20 யுவதிகளுக்கு அமைச்சர் றிசாத், நேற்று தையல் இயந்திரங்களை வழங்கி வைத்தார். அத்துடன் மடவளையில் இன்னும் 20 பேருக்கு தையல் பயிற்சியை வழங்கி, தையல் இயந்திரங்களையும் கையளிப்பதாக தெரிவித்திருக்கிறார். வெகுவிரைவில் கண்டி மாவட்டத்தில் மேலும் நான்கு இடங்களில் இந்த தையல் பயிற்சியை வழங்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் அறிவித்தார். இந்த நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், கூட்டுறவு அபிவிர

முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளுக்கு சாட்டை அடியாக அமைந்துள்ளது ஹக்கீமின் அறிவிப்பு

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சம்பூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கடற்படை அதிகாரியுடன் முரண்பட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என ரவூப் ஹக்கீம்  அறிவித்துள்ளமை முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளுக்கு சாட்டை அடியாக அமைந்துள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். அதேவேளை, இவ்வறிவிப்பு இனவாதிகளின் முகங்களில் கரி பூசும் வகையில் அமைந்துள்ளதுடன், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளுக்கும் - சந்தேகங்களுக்கும் ஹக்கீம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார்.  அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:- கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ்; நஸீர்; அஹமட் கடற்படை அதிகாரியுடன் முரண்பட்டமையினால் முஸ்லிம் சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டியேற்பட்டது. இச்சம்பவத்தை இனவாத அடிப்படையில் சில ஊடகங்களும், அமைப்புக்களும் திரிவு படுத்தி சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் தொடர்பில் பிழையான கருத்தை ஏற்படுத்த முற்பட்;டது. குறிப்பாக இணையதளங்கள் மூலமாக முஸ்லிம்களுக்கு எதிரான பரவலான கருத

கிழக்கு முதல்வர் முஸ்லிம் என்பதால் பூதாகரமாக்கப்பட்ட விவகாரம்: ஜனாதிபதி அதிரடி!

---------------------------------------கிழக்கு மாகாண முதலமைச்சர் நடந்து கொண்ட விதம் முற்றிலும் தவறானது. ஆனால், அவர் முஸ்லிம் என்பதனாலேயே இந்தளவுக்கு விவகாரம் பூதாகரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இதே இடத்தில் ஒரு சிங்களவர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஜப்பானின் நகோயா ஹில்டன் ஹோட்டலில் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு நேற்று வழங்கிய பிரத்தியேக நேர்காணலின்போது, “கிழக்கு மாகாண முதலமைச்சர் – கடற்படை அதிகாரி இடையிலான முரண்பாட்டை எப்படிப் பார்க்கின்றீர்கள்?” என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் கூறினார். “உண்மையைச் சொல்வதென்றால் இலங்கையின் நிர்வாகத்தினர் மத்தியில் இத்தகைய மோதல்கள் ஏற்படுவதொன்றும் புதிய விடயமல்ல. இவ்வாறான பல சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த விடயத்தில் முதலமைச்சர் நடந்துகொண்ட விதம் முற்றிலும் தவறானது. ஆனால், அவர் முஸ்லிம் என்பதனாலேயே இந்தளவுக்கு விவகாரம் பூதாகரப்படுத்தப்பட்டுள்ளது. இதே இடத்தில் ஒரு சிங்களவர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?” என்று அவர் மேலும் தெரிவித

ஹக்கீம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கல்முனை விவசாயிகள் பற்றி பேச முடியாமல் போனது ஏன்?

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட கன்டி மாவட்ட பாடசாலைகள் பற்றி பாராளுமன்றத்தில் பேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கல்முனை விவசாயிகள் பற்றி பேச முடியாமல் போனது ஏன் என உலமா கட்சித்தலைவர் கேள்வி எழுப்பினார். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணங்களின் போக்கு சம்பந்தமாக கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில் உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மேலும் தெரிவித்ததாவது, அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ரஊப் ஹக்கீம் அனர்தத்தால் பாதிக்கப்பட்ட கன்டி மாவட்ட பாடசாலைகள் ஆபத்தை எதிர் நோக்கியிருப்பது பற்றி எடுத்துக் கூறினார். அவர் கன்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவபடுத்துபவர் என்பதால் அம்மாவட்டம் பற்றி பேசும் கடப்பாடு அவருக்குள்ளது. அதே நேரம் அவர் நாடு தழுவிய ஒரு கட்சியின் தலைவர் என்பது அவருக்கு மறந்து விட்டதா என்று கேட்க வேண்டியுள்ளது. அனர்த்தத்தால் நாட்டின் பல பாகங்களிலுமுள்ள மக்கள் பாதிக்கப்பட்டதோடு விசேசமாக கல்முனை விவசாயிகளும் மிக மோசமாக பாதிக்கப்பட்டார்கள். தமக்கு அரசாங்கம் உடனடியாக நிவாரணம் தர வேண்டும் என அம்மக்கள் பக

Protocol'' அரசியல்.....

'' ............................................... சிங்களத்தில் - அஜித் ஜயசிங்க தமிழில் - ஸப்வான் பஷீர் ''Protocol'' என்ற ஆங்கில சொல்லிற்கான நேரடி தமிழ் அர்த்தம் ''நெறிமுறை'' என்பதாகும்.ஆனால் ஒருஜனநாயக அரசில் ''Protocol'' என்ற சொல் அரச நிர்வாக,ராஜதந்திர நடவடிக்கைகள் குறித்த நீதி மற்றும் நெறிமுறைகளைக் குறிக்கிறது. கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் சாம்பூர் கடற்படைத்தளத்தின் பொருப்பதிகாரிக்கு ஒரு பாடசாலை விழாவில் தூற்றும் வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய்ப் பரவிக்கொண்டு இருக்கின்றது. குறித்த சம்பவம் குறித்து லங்கா ஈ நிவ்ஸ் இப்படிக் குறிப்பிடுகிறது...... இந்த கீழ்த்ரமான சம்பவம் நடந்திருப்பது சாம்பூர் மகாவித்யாலத்திற்கு புதிய விஞ்ஞான ஆய்வுகூடம் மற்றும் கம்ப்யூட்டர் யுனிட் ஆகியவற்றை கையளிக்கும் ஒரு நிகழ்விலாகும். இந்த செயற்திட்டத்துக்கு ''டேவிட் பீரிஸ்'' நிருவனம் நிதியுதவி வழங்கியுள்ளதுடன் நிர்மாணப்பணிகளு க்கான மனிதவளத்தை இலங்கை கடற்படை வழங்கியுள்ளது. தனியார் நிறுவனமொன்று இராணுவத்துடன் சேர்ந்து

கிழ‌க்கு முத‌ல்வ‌ர் க‌ட‌ற்ப‌டை அதிகாரியை க‌ண்டித்த‌மையை உல‌மா க‌ட்சி பாராட்டுகிற‌து.

கிழ‌க்கு முத‌ல்வ‌ர் த‌ன்னை ப‌கிர‌ங்க‌மாக‌ அவ‌மான‌ப்ப‌டுத்திய‌ க‌ட‌ற்ப‌டை அதிகாரியையும் ஆளுன‌ரையும் அதே மேடையில் வைத்து க‌ண்டித்த‌மையை உல‌மா க‌ட்சி பாராட்டுகிற‌து. அண்மைய‌ கிழ‌க்கு முத‌ல்வ‌ர் ப‌கிர‌ங்க‌ மேடையில் ந‌ட‌ந்து கொண்ட‌ வித‌ம் ப‌ற்றிய‌ கேள்விக்கு உல‌மா க‌ட்சி த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி மேலும் தெரிவித்த‌தாவ‌து உண்மையில் கிழ‌க்க மாகாண‌ முத‌ல‌மைச்ச‌ர் என்ப‌வ‌ர் ம‌க்க‌ளால் தெரிவு செய்ய‌ப்ப‌ட்ட‌வ‌ர். ஆனால் ஆளுன‌ரோ க‌ட‌ற்ப‌டை தள‌ப‌தியோ ம‌க்க‌ளால் தெரிவு பெற்ற‌வ‌ர்க‌ள் அல்ல‌ மாறாக‌ அர‌சாங்க‌த்தால் நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌ ஊழிய‌ர்க‌ள். ஒரு ஜ‌ன‌நாய‌க நாட்டில் அர‌ச‌ ஊழிய‌ரை விட‌ ம‌க்க‌ள் பிர‌திநிதிக்கே அதிக‌ க‌வுர‌வ‌ம் உண்டு. இத‌னால்த்தான் பாராளும‌ன்ற‌த்தில் கூட‌ அத‌ன் பிர‌திநிதிக‌ளுக்கு இந்த‌ நாட்டில் யாருக்கும் இல்லாத‌   த‌னி க‌வுர‌வ‌ம் உண்டும். இந்த‌ வ‌கையில் கிழ‌க்கு முத‌ல்வ‌ர் அமெரிக்க‌ தூதுவ‌ர் முன்பாக‌ அவ‌மான‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து என்ப‌து முழு கிழ‌க்கு ம‌க்க‌ளையும் அவ‌மான‌ப்ப‌டுத்திய‌தாக‌வே பார்க்கிறோம்.  இத‌ற்கு ஹாபிஸ் அந்த‌ இட‌த்திலேயே ப‌தில் கொடுக்காம‌ல் வ

ரவுப் ஹகீம் இனியாவது வாய் திறப்பாரா?

செட்டிகுளம் சர்ஜான்  நாட்டில்  தற்பொழுது  முக்கியமான சில பிரச்சனைகள் தொடர்பாக இனவாத ஊடகங்கள் தமிழ். சிங்கள. முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவில் மீண்டும் விரிசலை ஏற்ப்படுத்தும் வகையில் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது. அதில் ஒரு முக்கிய விடையமாக அண்மையில் திருகோணமலை சாம்பூர் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்  கடற்படை பொறுப்பதிகாரி ஒருவரை மக்கள் மத்தியில் வைத்து திட்டிய சம்பவம் தொடர்பான செய்தியே இப்பொழுது இனவாத ஊடகங்களுக்கு ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது. கிழக்கு முதல்வர் செய்தது சரியா? தவறா? என்று வாதிடுவதை விட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற முஸ்லிம்களின் மாபெரும் அரசியல் கட்சியின் தலைவர் றவுப் ஹகீம் என்னதான் செய்கின்றார் என கட்சின் உள்ளமட்டத்திளிருந்தும் வெளியிலிருக்கும் கட்சியின் ஆதரவாளர்களும் முனுமுனுக்க ஆரம்பித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. நாட்டில் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் தொடர்பாக பலரும் பலவாறான கருத்துக்களை தெரிவிக்கின்றனர். அதில் சிலர் பதவி விலகவேண்டுமென்றும் கோஷமிடுகின்றனர். இவ்வாறு கோஷமிடுகின்றவர்களில் சிலர் சட்டத்தைய

மேடையில் ஏறவிடாமல் வயிற்றை பிடித்து தடுத்தார் கடற்படை அதிகாரி - நஸீர் அஹமட்

சம்பூரில் நடைபெற்ற வைபவத்தின் போது, ஆளுநரின் அழைப்பின் பேரில் மேடையில் ஏறிய போது, கடற்படை அதிகாரி தன்னை தடுத்தன் காரணமாகவே தான் அவரை திட்டியதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வைபவம் நடைபெற்ற போது, தனக்கும் கிழக்கு மாகாண கல்வியமைச்சருக்கும் மேடைக்கு வருமாறும் அழைப்பு விடுக்கவில்லை. கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ தன்னை மேடைக்கு அழைத்தன் பின்னர் தான் மேடையில் ஏற முயற்சித்த போது, கடற்படை அதிகாரி தனது வயிற்று பகுதியை பிடித்து, மேடையில் ஏறவிடாமல் தடுத்தார். இதன் போது தான் பேசிய வார்த்தைகள் பதிவான காணொளிகளே ஊடகங்களில் வெளியாகியுள்ளதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார். மேலும், சம்பூர் பாடசாலையில் இடம்பெற்ற சம்பவமானது தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அவமதிப்பு அல்ல ஒட்டுமொத்த கிழக்கு மாகாண நிருவாகத்திற்கும் ஏற்பட்ட அவமதிப்பாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் நஸீர் வழங்கி வைத்தமை கண்டிக்கத்தக்க செயல் என்கிறார் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

“எனது 10 வருட முயற்சிக்கு கிடைத்த பலன் பாலமுனை மக்களுக்கான காணி உறுதிப்பத்திரம்” சுனாமியினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு, ஆரயம்பதி- பாலமுனை மக்களுக்காக கடந்த 10 வருடகால எனது முயற்சியினால் பெற்றுக் கொடுக்கப்பட்ட காணி உறுதிப்பத்திரத்தினை, கிழக்கு முதல்வர் ஹாபிஸ் நஸீர் அஹமட் வழங்கி வைத்தமை கண்டிக்கத்தக்க செயலாகும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.  அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:- 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் மட்டக்களப்பு, ஆரயம்பதி -  பாலமுனை கிராமம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அப்போது நான் விமானநிலையம் மற்றும் விமான சேவைகள் சேவைகள் தலைவராக இருந்தேன்.  பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களை கடலோரப்பகுதியிருந்து வேறு இடத்தில் மீள்குடியேற்றுவதற்காக அப்போதைய காணி அமைச்சர் தி.மு. ஜயரட்னவை நான் தனிப்பட்ட ரீதியில் தொடர்பு கொண்டு பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தேன். அதன் பலனாக பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றுவதற்காக அவரது அனுமதியுடன் தனியார் காணியொன்றைப் பெற்றுக் கொண்டோம்.   பின்னர், அரச சார்பற்ற “போர

Technical Assistance from America to Reduce Disaster Risk in Sri Lanka – Minister Faiszer Musthapha

Minister of Provincial Councils and local Government (President’s Counsel)Faiszer Musthapha stated that technical assistance from America will be given toour country in order to reduce disaster risk. He said that America has given us the technical support even after Tsunami. Minister Musthapha said this after meeting the affected community in Aranayaka and Kolonnawa with the U.S. Ambassador to Sri Lanka. On the instructions of H.E. the President, Minister Musthapha with the technical support from the United States of America, has initiated a programme to assist the victims from landslide and flood in Aranayaka and Colombo districts.Accordingly, under the patronage of Hon. Minister FaiszerMusthapha, AthulKeshap the U.S. Ambassador to Sri Lanka, South Asia Regional Advisor for Disaster Risk Reduction Dr. Michael J. Ernst, the Secretary of the Ministry of Provincial Councils and Local Government Mr. Kamal Padmasiri and Mr. AselaIddawela the Chairman of the Sri Lanka Land Re

கொலொன்னாவ பிரதேசத்தில் இன்னுமொரு பள்ளி அமைக்கப்பட்டால் முதன் முதலில் சீமெந்து வாங்கிக் கொடுப்பவன் நானே

ஊடகவியலாளர் மாநாட்டில் கொலொன்னாவ வஜிர ஹிமி... சுஐப் எம்.காசிம் கொலொன்னாவ பள்ளி சம்மேளனம் இன,மத வேறுபாடின்றி மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகள் இனவாதிகளுக்கும், மதவாதிகளுக்கும் பாரிய அடியாகும் என்று அபன்வள ஞானலோக ஹிமி , கொலொன்னாவ வஜிர ஹிமி ஆகியோர் இன்று தெரிவித்தனர். கொலொன்னாவ பள்ளி சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று (25/05/2016) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர்கள் கருத்து வெளியிட்டனர். பள்ளி சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ் ஐ.வை.எம்.ஹனீப் தலைமையில் இடம்பெற்ற, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக், உலமாக் காங்கிரசின் முக்கியஸ்தர் மௌலவி முபாரக் ரஷாதி, உலமாக் கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அபன்வள ஞானலோக ஹிமி, கொலன்னாவ வஜிர தேரர் ஆகியோர்கள் மேலும் கூறியதாவது, இந்தப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் 90 சதவீதமான தேவைகளையும், நிவாரணப் பணிகளையும் கொலொன்னாவ பள்ளி சம்மேளனமே மேற்கொண்டு வருகின்றது. இன,மத,பேதமின்றி பணியாற்றும் இந்த சம்மேளனத்துக்கு, சிங்கள மக்கள் சார்பில் நன்றி தெ

விவசாயிகள் ஒன்றிணைந்து பதாகைகளை சுமந்தவண்ணம்

-மு.இ.உமர் அலி- நிந்தவூரினைச்சேர்ந்த பலவிவசாயிகளுக்கு  பொத்துவில் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட  கிரான்-கோமாரி  எனும் இடத்தில்  நெற்காணிகள் உள்ளன.1957  ஆம்  ஆண்டில்  இருந்து  அங்கு காடுவெட்டி  களனி  கண்டு  நெற்செய்கையில் ஈடுபட்டிருந்த  இவ்விவசாயிகள்  பயங்கரவாத காலத்தில் இப்பகுதியில்  வேளாண்மை செய்வதையும்  மாடு தற்காலிகமாக வளர்ப்பதையும் கைவிட்டிருந்தனர். நாடு நல்லநிலைக்கு மாறியபின்னர் இவர்கள் தமது  காணிகளுக்குள்  சென்று  பற்றைகளை  வெட்டி  ,சுத்தப்படுத்தி  மீண்டும் நேநெற்செய்கையிலீடுபட்டு வருகின்றனர்.வனபரிபாலன  திணைக்களமும்,பிரதேச செயலகமும் இவர்களது  காணியின் உரிமைக்கு  பலவழிகளில்  அச்சுறுத்தலாகவும், சவாலாகவுமிருக்கின்றன. இது பற்றி பிரதேச அரசியல்வாதிகளின்  கால்களில் விழாத குறை மட்டுமே,எத்தனையோ  கந்தோர்கள் ஏறி இறங்கியும் பயனில்லை.நான்கைந்து மாதங்களுக்கு  முன்னர் பொத்துவில் பிரதேச சபையில் நடைபெற்ற ஒரு விசேட கூட்டத்தில்   அம்பாறை மாவட்ட செயலாளர்  பல வாக்குறுதிகளை வழங்கிச்சென்றார்.அவ்வாறு வழங்கிய வாக்குறுதிகளில்  எதுவுமே இதுவரை நடைபெறவில்லை  என விஷமம்  தெரிவிக்கின்றனர் பாதிக்கப்பட்ட வ

உலமாக்களுக்கு உதவியளித்த அமைச்சர்

உடனுக்குடன் உதவினார் அமைச்சர் றிசாத்! ஏ.எஸ்.எம்.ஜாவித்    கொலொன்னாவை, வெல்லம்பிட்டிய, புத்கமுவ போன்ற பிரதேசங்களில் வாழும் பாதிக்கப்பட்ட உலமாக்களுக்கும், மௌலவிமார்களுக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கொண்ட உதவிகளை, எமது வாழ்நாளில் நாம் ஒரு போதுமே மறக்க முடியாதென்று மெகொட கொலன்னாவ மௌலவி ரிழ்வான் தெரிவித்துள்ளார். இந்தப் பிரதேசத்தில் அமைந்திருந்த 27 பள்ளிவாசல்களில் , 25 பள்ளிவாசல்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பல பள்ளிவாசல்கள் முழுமையாகவும், சில பள்ளிவாசல்கள் பகுதியாகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.  இந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதேபோன்று உலமாக்களின் குடும்பங்களும் பாதிக்கப்பட்டதை அறிந்து எமக்கு உதவ முன்வந்தார் அமைச்சர் றிசாத். வெளிநாட்டிலிருந்த அவர் தனது நிகழ்ச்சிகளை இரத்துச் செய்துவிட்டு கடந்த சனிக்கிழமை ( 21/05/2016 )இலங்கை திரும்பியவுடன், கொலொன்னாவ பிரதேசத்துக்கு வந்து நாம் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களுக்கு சென்றார். மக்களை சந்தித்து, அவர்கள் எதிர்நோக்கும் கஷ்டங்கள் குறித்து அறிந்துகொண்டார். வெல்லம்பிட்டி சந்தி

ஏ.எச்.ஏ பசீர் (துாயோன்) னின் - ”ஒரு பு மீண்டும் மலா்கிறது” எனும் நாவல்

அஷ்ரப் ஏ சமத் கல்முனை மஹமூத் மகளிா்  கல்லுாாியில் 26 வருட கால அதிபரும், தற்போதைய மாக்கோல -மல்வானை அனாதை பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றும் ஏ.எச்.ஏ பசீர் (துாயோன்) னின்  - ”ஒரு பு மீண்டும் மலா்கிறது” எனும் நாவல் முன்தினம் (16)ஆம் திகதி மருதானை வை.எம்.எம்.ஏ மண்டபத்தில் வெளியீட்டு வைபவம் நடைபெற்றது. இந் நிகழ்வு ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளா் மருதுாா் ஏ. மஜீத் தலைமையில் இடம் பெற்றது,  நுால் நயத்தலுரை அஷ்ரப் சிகாப்தீன், வரவேற்புரை டொக்டா் சனுஸ் காரியப்பா், அறிமுகவுரையை ஓய்வு பெற்ற சுங்க அதிகாரி எஸ்.எச்.எம். அலி, வாழ்த்துரை  முஸ்டீன்,  நிகழ்ச்சி கவிதை கிண்னியா  அமீா் அலி, மருதுாா் அன்சாா் நிகழ்தினாா்கள்.  நுாலின் முதற்பிரதியை தேசமான்ய டொகடா் அப்துல் கையும் நுாலசிரியடமிருந்து பெற்றுக் கொண்டாா். அத்துடன் அதிதிகள் -  வெளிநாட்டு அமைச்சின் பணிப்பாளரும் ஒஸ்ரியா நாட்டின் துாதுவருமான - ஏ.எல்.ஏ அசீஸ்,  கட்டக் கலைஞா் எம்.எம். இஸ்மாயில்,  தேசிய மொழிகள் மற்றும் நல்லினக்க அமைச்சின் மேலதிகச் செயலாளா் எஸ்.எல. ஹசீம், ஆகியோறும் கலந்து சிறப்பித்தனா்.

வெல்லம்பிட்டி அனர்த்தம் இனவாத சதியா? -

வெல்லம்பிட்டி அனர்த்தத்தில் சந்தேகம் ஊடக சந்திப்பில் உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் -எம்.வை.அமீர் - வெல்லம்பிட்டி அனர்த்தத்தை வெறுமனே இயற்கை அனர்த்தம் என்ற வரையறைக்குள் மட்டும் வைத்து ஆராயமுடியாத நிலையில் தங்கள் இருப்பதாக உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தம் மற்றும் அரசியலமைப்பு சபைக்கு உலமா கட்சி முன்வைத்துள்ள முன்மொழிவுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு ஒன்று  2016-05-22    ஆம் திகதி உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் அவர்களின் கல்முனை இல்லத்தில் இடம்பெற்றது. தொடர்ந்து கருத்துத்தெரிவித்த முபாறக் அப்துல் மஜீத் , வெல்லம்பிட்டியில் பாரிய  வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தும் வகையில் களனி கங்கையி ன்  வான் கதவுகளை இரவோடிரவாக திறந்து விட்டதில் சதி ஏதும் இருக்கிறதா என்பதை அரசாங்கம் உடனடியாக ஆராய்ந்து மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்   நாட்டில் அடிக்கடி மழை வருவதும் அனர்த்தங்கள் ஏற்படுவதும் இயற்கையானதுதான். கடந்த காலங்களிலும் வெள்ளம் காரணமாக வெல்லம்பிட்டியில் இரண்டு அல்லது மூன்று அ

The meeting between coordinators of HWPL and Mubarak Moulavi

The  meeting between coordinators of Heavenly culture, world Peace Restoration of Light  based in Korea  and Sri Lanka Muslim Ulama Moulavi Mubarak Abdul Majeed was held today evening at Liberty Plaza, Colombo.  The meeting was successful in discussing for the activities for world peace and to Enact an international law for the Cessation of war. Moulavi Mubarak has promised that the Sri Lankan peoples will support to of Heavenly culture, world peace to achieve its aim for peace of world. The international meeting of  HWPL  (Heavenly culture, world peace Restoration of Light)  which was expected in 24 th of May was postponed to June according to  Mubarak Moulavi  suggestion. In photo Mr. Enid Choi HWPL program coordinator, Katherine Eo and Ms. Enid program coordinato with Moulavi Mubarak Abdul  Majeed, Leader Sri Lanka Muslim Ulama  and Chief Editor, Aljazeeralanka.blogspot.com

நிவாரணப் பணிகளில் ஹிரா பௌண்டேஷன் களத்தில்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன முன்னின்று வழங்கி வருவதாகவும், கிழக்கு மாகாணத்துக்கு வெளியே மல்வானை மற்றும் அரநாயக்க பகுதிகளுக்கு விசேட உதவிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவ்வமைப்பின் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.  அவர் இது தொடர்பில் கூறியதாவது:- சீரற்ற வானிலையினால் மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணத்துக் வெளியே கொழும்பு, கேகாலை மற்றும் கண்டி மாவட்டங்களில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.  இதனால் நிர்கதியாகியுள்ள மக்களுக்கு ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் உதவிக் கரம் நீட்டியுள்ளது. முதல் கட்டமாக நேற்று மல்வானை பகுதிக்கு எமது நிவாரணப் பொருட்கள் மட்டக்களப்பு கெம்பஸ் நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் கொழும்பு மற்றும் மாவனல்லை, அரநாயக்க பகுதிகளுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன்,

நிதி பற்றாக்குறை - நாடாளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

அனர்த்த முகாமைத்து அமைச்சுக்கு  ஒதுக்கப்பட்டுள்ள நிதி பற்றாக்குறை நாடாளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சீரற்ற வானிலையினால் வீடு – சொத்துக்களை இழந்த மக்களுக்கு இழப்பீட்டினை வழங்க அரசு நடவடிக்கை எடுத்த போதிலும் அதற்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதல்ல எனத்தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அதற்குத் தேவையான முழுமையான நிதியை சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு ஒதுக்குமாறு நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.  அதேவேளை, வடக்கு கிழக்கு மாகாணங்களில் சேதமடைந்துள்ள வீடுகளுக்கு அப்பால் அழிவடைந்துள்ள விவசாய நிலங்களுக்கான இழப்பீட்டினை வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அரசிடம் கோரிக்கை முன்வைத்தார்.  நாடாளுமன்றத்தில் நேற்று விசேட உறையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.  அவர் அங்கு மேலும் கூறியதாவது:- சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதில் இரவு பகல் பாராது பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதை நன்றியுடன் பாராட்டுகிறேன்.  கேகாலை மாவட்டம் பாரிய அழிவுக்கு உட்பட்டுள்ளது. அதிலும் விசேடமாக அரநாயக்கவில் ஏற்பட்

இலக்கிய மாநாடும் விருது விழாவும் 2016

கலை இலக்கிய சமுக அபிவிருத்தி ஊடக வலைப்பின்னல் அமைப்பின் 21 வது வருட நிறைவை முன்னிட்டு மே மாதம் 29ல் காரைதீவு சன்முக மகாவித்தியாலயத்தில் மாலை 3 மணிக்கு மருதூர் அன்சார் தலைமையில் நடைபெறவுள்ளது. கல்முனை தமிழ் எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து நடத்தும், கிழக்கு படைப்பாளிகளின் ஒன்று கூடும் தமிழ் படைப்பாளிகளின் இலக்கிய மாநாடும் இமயம்; சஞ்சிகை வெளியீடும் திறமைக்கான தேடல் விருதுவிழாவும், கவிக்குயில் ஸப்னா அமீன் எழுதிய கவிதைகள் உள்ளம் கேட்குமே ஒலிஇ ஒளிஇ இருவட்டு வெளியீடும் பல்துறை சார்ந்த எழுத்தாளர்களின் புத்தக விற்பனையும் படைப்பாளிகள் பங்களிப்புடன் மிக பிரமாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இலக்கிய நிகழ்வுகள் மணிப்புலவர் மருதூர் எ. மஜீத் தலைமையிலும், கவியரங்கு மருதமாமணி ஏ. பீர் முஹம்மதின் தலைமயிலும், திறமைக்கான தேடல் விருது விழா கவிஞர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தலைமையிலும் இடம் பெறவுள்ளது. இதன் முன்னிலை அதிதியாக டொக்டர் புரவலர் ஏ. பி. அப்துல் கையூம் அவர்களும், முதன்மை அதிதிகளாக மாகாண சபை சகாதார அமைச்சர் நசீர் அவர்களும், முன்னாள் ஊடக பிரதி அமைச்சர் வேதாந்தி சேகு இஸ்ஸதீன், க

கொழும்பில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர் றிசாத் விஜயம்..

மக்களை படகுகளில் வெளியேற்றுவது தொடர்பிலும் உரிய நடவடிக்கை.. சுஐப் எம்.காசிம்  பெருமழையினாலும், வெள்ளத்தினாலும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கொழும்பின் பல இடங்களுக்கு, அமைச்சர் றிசாத் பதியுதீன் சென்று பார்வையிட்டார். இந்தப் பிரதேசங்களில் அகப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மீட்பது தொடர்பில் அமைச்சர் கடற்படைத் தளபதியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதுடன் அவசரமாக படகுகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டினார். அமைச்சரின் கோரிக்கையை அடுத்து இன்றுகாலை (1 8 /௦5/2016) இந்த வெள்ளத்தில் மூழ்கியுள்ள பிரதேசங்களுக்கு நான்கு படகுகள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் பல படகுகளை அங்கு அனுப்பி வைப்பது தொடர்பில் அமைச்சர் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். அத்துடன் அமைச்சர் றிசாத்தின் வேண்டுகோளை அடுத்து, மாகாண சபை உறுப்பினர்களான ரிப்கான் பதியுதீன், முஹம்மத் பாயிஸ், சீமெந்துக் கூட்டுத்தாபனத் தலைவர் ஹுசைன் பைலா, சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் ஆகியோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெல்லம்பிட்டி, வென்னவத்தை, கொத்தட்டுவ, பிரெண்டியாவத்தை, மாதம்பிட்டிய, புத்கமுவ, ஐடிஎச், மெகொட கொலன்னாவ, கொலன