-எம்.வை.அமீர்-
கல்முனை சாஹிறா தேசிய பாடசாலையில் கல்விகற்று, கடந்த 2015 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்திலும், கல்விப் பொதுத்தராதர உயர் தரத்திலும் ,சாதனைகள் படைத்த சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு, வீ ஸாஹிறீயன் அமைப்பின் ஏற்பாட்டில் அவ்அமைப்பின் தலைவர் ,உயிரியல் பாட விரிவுரையாளரும் ஆசிய அபிவிருத்தி நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுனரும், பி சீ ஈ கல்லுரியின் தவிசாளருமான றிஷாட் சரீப் தலைமையில் 2016-04-14 ஆம் திகதியன்று கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ், பிரதம அதிதியாக கலந்து சாதனைகள் படைத்த மாணவர்களுக்கு ஞாபக சின்னங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார். கௌரவ அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர், ஏ.எல்.எம்.சலீமும் சிறப்பு அதிதியாக கல்முனை சாஹிறா தேசிய பாடசாலையின் அதிபர், பி.எம்.எம்.பதுர்தீனும் கலந்து கொண்டனர்.
உயர்தர பௌதீக பிரிவில் ஐந்து மாணவர்களும், பொறியியல் தொழில்நுட்ப துறையில் ஏழு மாணவர்களும், உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் நான்கு மாணவர்களும், வர்த்தகப்பிரிவில் ஐந்து மாணவர்களும், கலைப்பிரிவில் இரண்டு மாணவர்களும் சித்தியடைந்துள்ள அதேவேளை கல்விப்பொதுத் தராதர சாதாரண தரத்தில் ஒன்பது திறமைச் சித்திகளை ஆறு பேரும், சாதாரண தரத்தில் எட்டு திறமைச் சித்திகளை பத்து மாணவர்களும் பதினொரு மாணவர்கள் ஏழுதிறமைச் சித்திகளையும் பெற்றிருந்தனர். குறித்த மாணவர்கள் சான்றிதழ்களும் ஞாபக சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்ட அதேவேளை விளையாட்டில் திறமைகாட்டிய எம்.ஏ.எம்.றஸ்பாஸ் மற்றும் முன்னாள் அதிபர் எம்.சீ.ஆதம்பாவா இந்நாள் அதிபர் பி.எம்.எம்.பதுர்தீன் ஆகியோரும் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் ஆகியோரும் வீ ஸாஹிறீயன் அமைப்பினால் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் நினைவு மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Post a Comment