பாகம் 3
நூலின் வெளியீட்டு விழா
எமது நாட்டில் நாட்டில் வாராந்தம் பல நூல் வெளியீட்டு விழாக்கள்நடைபெறுகின்றன. மிக மிக அழகான விழா மண்டபம்,சிறப்பானஒழுங்கமைப்பு, நேரந்தவறாமை ,மண்டபம் நிறைந்த வாசகர்கள்,சிறப்பானதலைமைத்துவம் ஆகியவற்றுடன் கூடிய நூல் வெளியீட்டு விழா ஒன்றுசென்ற வாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண நினைவுகள் எனும் சொல்லை அச்சு , இலத்திரனியல்ஊடகங்களில் கடந்த 4 வருடங்களாகவே இடைவிடாது உச்சரிக்க வைத்துக்கொண்டிருக்கும் யாழ் இந்துக் கல்லூரியின் புகழ்பூத்த மாணவர்களில்ஒருவராகிய வேதநாயகம் தபேந்திரனின் யாழ்ப்பாண நினைவுகள் பாகம் 3நூலின் வெளியீட்டு விழாவே அது.
தினகரன் வாரமஞ்சரியின் பிரமத ஆசிரியர் தே. செந்தில் வேலவர் இந்தநூல் வெளியீட்டு விழாவில் கலந்து நூல் வெளியீட்டுரையைச் செய்ததுடன்நூலை வெளியிட்டும் வைத்தார்.
வேதநாயகம் தபேந்திரனுடனான நேர்காணல் சென்ற வார தினகரன்வாரமஞ்சரியில் பிரசுரமாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. விழாஅழைப்பிதழில் விழா ஆரம்பமாகும் நேரம் பிற்பகல் 3 மணி 34 நிமிடம் எனக்குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுவென்ன வித்தியாசமாக உள்ளதே. சரி போய்த்தான் பார்ப்போமே என3.30 மணிக்கே சென்றோம்.சரியாக 3.34 மணிக்கு மங்கல விளக்கேற்றல்நிகழ்வு ஆரம்பமாகியது.வேட்டி கட்டி தமிழ் பாரம்பரியத்தை கூறும் வகையிவிருந்தினர்கள் இருந்தமை விழாவின் அழகிற்கு உச்சமாக இருந்தது.
அதிலும் ஓர் புதுமை. விழா அழைப்பிதழில் உள்ள பிரமுகர்கள் யாரும்அழைக்கப்படாது விழாவிற்கு வந்திருந்தே மதிப்பு மிக்க பெரியோரில் ஆண்,பெண் இரு பாலாருமாக அழைக்கப்பட்டிருந்தனர்.
பாடசாலையில் படிக்கும் இளம் மாணவன் ஒருவர் அறிவிப்பை மிக அழகாகசெய்தார்.
அந்த மாணவனும் இளைஞர் பாராளுமன்ற அறிவிப்பு போட்டியில் தேசியரீதியில் முதல் இடத்தை பெற்ற மகன் உமாசங்கர் சங்கீத் என நூலாசிரியர்கௌரவித்த போது பின்னர் தெரிய வந்தது.
மங்கல விளக்கேற்றலை தொடர்ந்து இறைவணக்கம் நல்ல வளமானகுரலை உடைய கைதடியைச் சேர்ந்த திருமதி.ப.பரமேஸ்வரி அவர்களால்வழங்கப்பட்டது.
தமிழ்மொழி வாழ்த்து நூலாசிரியரின் மனைவி திருமதி சற்குணேஸ்வரிதபேந்திரன்,திருமதி சிறீஸ்வரி புஸ்பராசா ஆகியோரால் இனிமை நிறைந்தகுரலில் வழங்கப்பட்டது.
அடுத்ததாக வரவேற்பு நடனம் கைதடியைச் சேர்ந்த தரம் 5 பாடசாலைமாணவி செல்வி கனிகா பிறேம்நாத்தினால் வழங்கப்பட்டது.
இவற்றைத் தொடர்ந்து விழாவின் பிரமுகர்கள் விழா மேடைக்குச்சென்றார்கள்.வரவேற்புரையை நூலாசிரியரின் ஆசிரியரும்யாழ்ப்பாணத்தில் பிரெஞ்ச் மொழி கற்பிக்கவென தனியார் கல்லூரிநடத்துபவருமான இரத்தினம் பாரதிதாசன் நிகழ்த்தினார். வரவேற்புரைஎன்ற விடய வரையறையை மீறாத அவரது சிறப்பியல்பு பாராட்டத்தக்கது.
அடுத்து விழாவை யாழ்ப்பாண பாடசாலை மருத்துவ அதிகாரியும் யாழ்இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க தலைவருமாகிய மருத்துவர்வைத்திலிங்கம் யோகேஸ்வரன் தலைமை ஏற்று வழிநடத்த ஆரம்பித்தார்.
தபேந்திரனை தான் அறிந்து கொண்ட விதம் அவரது எழுத்துக்களின் சிறப்புஆகியவற்றையும் யாழ்ப்பாண நினைவுகளை தான் எவ்விதம் அறிந்துகொண்டேன் என்பதையும் சபையோர ரசிக்கும் வண்ணம் சுந்தரத் தமிழில்உரைத்தார்.
மருத்துவ அதிகாரி ஒருவர் நூல் வெளியீட்டிற்கு தலைமை தாங்கதபேந்திரன் அழைத்துள்ளாரே என கேள்விக்குறியுடன் வந்திருந்தசபையினரில் சிலர் அவரது பேச்சின் திறத்தால் ஈர்க்கப்பட்டதனை காணமுடிந்தது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தந்த எழுத்தாளர் வரிசையிலே செங்கைஆழியானைக் குறிப்பிட்டு அவரது கைப்பிடித்து நடக்கும் பாக்கியம் எனக்குகிடைத்தது.
அடுத்த தலைமுறையில் தற்போது என் பேரன்புக்குரிய தம்பி வேதநாயகம்தபேந்திரனின் கைப்பிடித்து நடக்கும் பாக்கியமும் கிடைத்துள்ளது என்றார்.
வட மாகாண சுகாதார சமூக சேவைகள் அமைச்சின் பிரதம கண்காளரும்நூலாசிரியரின் பல்கலைக்கழக சக மாணவனுமாகிய சிவஞானம்கஜேந்திரன் வாழ்த்துரையை வழங்கினார்.
பல்கலைக்கழகங்கள் பிதுக்கி விட்ட பல்லாயிரம் பட்டதாரிகளில் தான்படித்த 3 பட்டக்கல்வி அறிவை சமூகத்திற்குப் பயனுள்ள வகையில்பிரயோகிக்கும் பட்டதாரிகள் சிலரே உள்ளனர்.
அவர்களில் எனது நண்பனும்“ பல்கலைக்கழகச் சக மாணவனுமாகியவேதநாயகம் தபேந்திரன் தனித்துவமானவராக தன்னை நிலை நிறுத்திஉள்ளமை பாராட்டுதற்குரியது.
பல்கலைக்கழகத்தில் எம்முடன் கற்ற காலத்தில் தன் தனித்துவதிறமையை பொது அறிவில் நிலைநாட்டி பின்னர் இலங்கைத் தமிழ்பேசும்பரீட்டசார்த்திகள் போட்டிப் பரீட்சைகளில் வெற்றியடைய பொது அறிவுநூல்களை தந்த தபேந்திரன் தற்போது புதிய பரிமாணமாக யாழ்ப்பாணநினைவுகள் பாகம் 1,2, 3 மூலமாக மிக வேகமாக முக்கிய இடத்தைஇலங்கை தமிழ் பேசும் உலகில் தனக்கென பிடித்துள்ளார்.
அடுத்த வாழ்த்துரையை நூலாசிரியர் சமூக சேவைகள் அலுவலராக முதல்நியமனம் பெற்றுச் சென்ற திருகோணமலை ஈச்சிலம்பற்பிரதேச பூநகர்திருவள்ளுவர் வித்தியாலய பாடசாலை அதிபராகிய பத்தக்குட்டிமதிபாலசிங்கம் வாழ்த்துரையை வழங்கினார்.
அவர் தனது உரையில் எமது திருகோணமலை மண்ணில் எமதுபிரதேசத்தில் தான் முதல் நியமனம் பெற்றார். போரினால் மிகவும்மோசமாகப் பாதிப்புற்ற பிரதேசத்துக்கு வந்து அவர் ஆற்றிய சேவைகளும்எம்முடன் பழகிய முறைகளும் மறக்க முடியாதவை.என்றார்.
வெளியீட்டுரையை எமது தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் ஆற்றும்போது ” யாழ் இந்துக்கல்லூரியில் எனக்கு அடுத்த பிரிவில் உயர்தரம்படித்தவர்
கல்லூரி காலத்திலேயே இவரிடம் மிகையாக இருந்த எழுத்தாற்றலைகண்டேன். பின்னாளில் பெரிய எழுத்தாளராக வருவார் என நினைத்தேன் .அது இன்று நிறைவேறியதனை கண்டுள்ளேன்.
அடுத்ததாக நூல் வௌயீடு இடம் பெற்றது. தினகரன் பிரதம ஆசிரியர்நூலை வெளியிட்டு வைக்க கிருபா லேணர்ஸ் சாரதி பாடசாலைகுழுமங்களின் அதிபர் அ.கிருபாகரன் முதல் பிரதியைபப் பெற்றுக்கொண்டார். முதலாம் இணைப்பிரதியை ராஜா கிறீம் ஹவுஸ், சரஸ்வதிமஹால், ஹம்சியா மஹால் ஆகியவற்றின் உரிமையாளர் சின்னராஜாவும்,நூலாசிரியரின் தாயாருமாகிய திருமதி பரிமளகாந்தி வேதநாயகம்ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
நூல் நயப்புரையை சண்டிலிப்பாய பிரதேச செயலக சமூக சேவைகள்அலுவலரும் எழுத்தாளரும் சமூக சேவகருமாகிய வேலாயுதம் சிவராசாநிகழ்த்தும் போது ” யாழ்ப்பாண வாழ்வியலை மிகச் சுவையாக தந்த நூல்தங்கள் வசம் இருக்கிறது. வாழ்வியல் , போர்க்கால அனுபவங்கள்,தொழிநுட்ப மாற்றங்கள் என யாவற்றையும் தபேந்திரன் மிக அழகாகக் கூறிஉள்ளார்.
பல நிகழ்வுகளை மாதம் திகதி ஆண்டு இட்டு மிகத் துல்லியமாகதந்துள்ளார்.
இவற்றை பத்தி எழுத்துக்கள் என்பதை இட வாழ்வியலை தரும் மிகச் சிறந்தஆவணம் எனலாம்.
நூலுாசிரியர் வேதநாயகம் தபேந்திரன் தனது ஏற்புரையில் ” இந்த நிகழ்வுக்குவந்திருந்த , அனுசரணை வழங்கிய யாவருக்கும் தனது நன்றிகளைத்தெரிவித்தார்.
2014 யூலையில் யாழ்ப்பாண நினைவுகள் பாகம் 1 நூலும், 2015 யூலையில்யாழ்ப்பாண நினைவுகள் பாகம் 2 நூலையும் தந்தேன் சொந்த முதலில் 1000பிரதிகள் அடிப்பது என்பது மிகச் சவாலனது.
வட மாகாணம், மேல் மாகாணம், கிழக்கு மாகாணம் என நாட்டின் 3மாகாணங்களிலும் 5 மாவட்டங்களிலும் யாழ்ப்பாண நினைவுகள் நூலுக்குஅறிமுக விழாக்களை நடத்தி தந்த பேராதரவு நன்றிக்கும் போற்றுதலுக்கும்உரியது.
புத்தகசாலைகள் தோறும் சென்வாசகர்கள் வாங்கியதும், புலம் பெயர்ந்தநாடுகளிலிருந்து வந்து வாங்கி தந்த பேராதரவும் பாகம் 3 ஐ மிக வேகமாகவெளிவரச் செய்துள்ளது.
பாகம் 4 நூலை இவ் வருடம் செப்ரெம்பர் மாதம் வெளியிட்ட பின்பு எனதுவழமையான நூலாகிய பொது அறிவு நூல் வெளியீட்டிற்கு செல்லலாமெனநினைக்கிறேன்.
யாழ்ப்பாண நினைவுகளுடன் கடந்த 4 வருடங்களாக ஈடுபட்டதனால்போட்டிப் பரீட்சைகளுக்கான பொது அறிவு நூல்களை வெளியிடவில்லை.அந்தப் பணிக்கு மீண்டும் செல்ல உள்ளதாக கூறினார்.
அவரது உரையுடன் விழா இனிதாக நிறைவேறியது.இறுதிவரை சனத்தரள்நிறைந்ததாக விழா மண்டபம் இருந்தமை சிறப்பிற்குரியது.
Post a Comment