ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
முன்னாள் அமைச்சர் எம் எச் முஹம்மத் காலமானார். இலங்கையின் முதலாவது முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சரும் மக்காவில் உள்ள ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமியின் ஸ்தாபக உறுப்பினருமான எம் எச் முஹம்மத் அவர்கள் நீண்ட காலம் அமைச்சராகவும் சபாநாயகராகவும் கடமையாற்றியுள்ளார்.
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையில் முஸ்லிம் செய்திகள் இடம் பெறுவதற்கும் இவரே வழி வகுத்தார். அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திக்கிறோம்.
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையில் முஸ்லிம் செய்திகள் இடம் பெறுவதற்கும் இவரே வழி வகுத்தார். அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திக்கிறோம்.
Comments
Post a comment